கமாடிட்டி சந்தை என்பதே முதலீட்டாளர்களுக்கானது அல்ல.ஆனாலும் சிறுமுதலீட்டாளர்கள்தான் கமாடிட்டி சந்தையில் அதிகம் காணப்படுகிறார்கள்.இவர்களது பலவீனமே குறுகிய காலத்தில் அதிமாக அதாவது கொள்ளை கொள்ளையாக பணத்தை சம்பாதித்து விட வேண்டுமென்கிற பேராவல்தான்.இதை ஸ்டாக் புரோக்கர்களும் மற்றவர்களும் பயன்படுத்திக் கொள்வதால்தான் இவர்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள்.அப்படியானல் சிறுமுதலீட்டாளர்களால் கமாடிட்டியில் பணம் சம்பாதிக்கவே முடியாதா என்று கேட்டால் எனது பதில் நிச்சயம் சம்பாதிக்க முடியூம்.அதுவூம் பெரிய முதலீட்டாளர்களை விடவூம் அதிகமாக சம்பாதிக்க முடியூம்.ஆனால் அதற்கு சில பயிற்சிகள் தேவை.அதென்ன பயிற்சிகள் தேவை என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.
1.மனதில் தோன்றும் பதட்டத்தை முதலில் விரட்ட வேண்டும்.நிதானமாகவூம் கூலாகவூம் முதலில் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.இதற்காக யோகா தியானம் என்று போய் விட வேண்டாம்.டிரேடிங் செய்ய உட்காரும் முன் சில நிமிடங்கள் கண்களையெல்லாம் மூடிக்கொள்ளாமல் மூச்சை மட்டும் நிதானமாக ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டால் போதும்.அதன்பின் ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திக்கொள்ளலாம்.
2.முதலில் மெகா லாட்களில் டிரேடிங் செய்யூம் ஆசையை விட்டு விடுங்கள்.டிரேடிங் கைவரப்பெறும் வரை மினி லாட்களிலேயே டிரேடிங் செய்து பழகுங்கள்.அதுவூம் ஒரு லாட்டில் மட்டும் டிரேடிங் செய்து பழகினால் போதும்.அடுத்தடுத்த லாபம் வருவதை கண்ணால் பார்த்த பிறகு லாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.Click here to get Highly successful FREE trading tips
3.கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் போட்டே டிரேடிங் செய்யூங்கள்.டார்கெட்டை அடையூம் நிலை வரும்போது டார்கெட்டை அடையாமல் நீங்கள் ஆர்டர் போட்ட கமாடிட்டியின் விலை சற்று கீழேயே அலைந்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட டார்கெட் வந்தால்தான் விற்பேன் என்ற பிடிவாதத்தை விட்டு விட்டு டார்கெட்டிற்கு சிறிது கீழாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கியை விற்று கணக்கை நேர் செய்து விடுங்கள்.
4.நேரத்தையூம் ஒரு ஸ்டாப்லாஸாகப் பயன்படுத்துங்கள்.நீங்கள் இன்ட்ரா டே டிரேடிங் செய்பவராக இருந்தால் அரை மணிநேரத்திற்குள்ளாக டார்கெட்டை அடையவில்லை என்றால் வந்த விலைக்கு ஆர்டரை முடித்துக் கொண்டு வெளியே வந்து மார்க்கெட்டை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள்.அதன்பிறகு உரிய சந்தர்ப்பத்தில் மறுபடி உள்ளே போய் டிரேடிங் செய்து கொள்ளலாம்.
5.டிரேடிங் செய்யூம் கலை நன்றாக கைவரப்பெறும் முன்னார் எக்ஸ்போஷரில் டிரேடிங் செய்யவே செய்யாதீர்கள்.எக்ஸ்போஷரில் டிரேடிங் செய்து நீங்கள் நஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் உங்களது ஸ்டாக் புரோக்கர் பஜன்லால் சேட்டு மாதிரி உட்கார்ந்த இடத்தில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்.
6.எடுத்த எடுப்பில் பெரிய பெரிய டார்கெட்டை வைத்துக் கொள்ளாதீர்கள்.சின்னச் சின்ன டார்கெட் போதும்.
7.தங்கம்தான் செய்வேன்.சில்வரில்தான் செய்வேன்.காப்பர்தான் எனக்கு ஏற்றது என்று பிடிவாதம் பிடிக்காமல் அன்றைய தினத்திற்கு எது செய்தால் சரி வருமோ அந்த கமாடிட்டியில் மட்டும் டிரேடிங் செய்யூங்கள்.Click here to get short-term speculative FREE trading tips
8.ஆர்டர் போட்ட பிறகு தவறாகப் போட்டு விட்டோமோ என்று உள் மனம் சொன்னால் உடனே கேளுங்கள்.போட்ட ஆர்டரை கேன்சல் செய்தோ அல்லது ஆர்டரே எக்சிகியூட் ஆகியிருந்தால் வாங்கியதை விற்று அல்லது விற்றதை வாங்கி கணக்கை நேர் செய்து கொண்டு விடுங்கள்.
9.முன் வைத்த காலை பின்னால் வைக்காமல் இருப்பது ஒரு வீரனுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம்.ஆனால் ஒரு வெற்றிகரமான டிரேடருக்கு முன்வைத்த காலை எப்போது வேண்டுமானாலும் பின் வைக்கக் கூடிய மனப்பாங்கு இருத்தல் அவசியம்.
10.குறைந்த புரோக்கரேஜ் கிடைக்கிறதே என்று ஊர் பேர் தெரியாத கமாடிட்டி நிறுவனங்களிடம் டிரேடிங் கணக்கு துவக்கி விடாதீர்கள்.என்றைக்காவது ஒரு நாள் அதற்காக மொத்தமாக வருத்தப்படும்படி ஆகி விடும்.
சிறுமுதலீட்டாளர்களும் கமாடிட்டியில் தினம் தினம் ஆயிரம் லட்சம் என்று அதுவூம் பேஸ்மெட்டலில் மட்டுமே குறைந்த முதலீட்டில் சம்பாதிக்கும் டெக்னிக்குகள் எல்லாம் கூட இருக்கின்றன.அவற்றைப் பற்றி வேறொரு தனிப்பதிவில் எழுதுகிறேன்.Click here to get intraday FREE trading tips
ConversionConversion EmoticonEmoticon