"கையளவூ இயற்கை வேண்டும்..."
சிட்டி லைஃப்பில் மட்டுமல்ல செமி அர்பனில் கூட இப்போதெல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள்வந்து விட்டன.கிளி ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து விட்டு மறுபடி தானாக கூண்டிற்குள்ளே வந்து உட்கார்ந்து கொள்ளும் கிளிகள் போலவே வாழவூம் பழகிக் கொண்டு விட்டீர்கள்.
இந்த மாதிரியான சூழலில் மனதிற்கு நிம்மதியோ கவலையில்லாத வாழ்வோ இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்வீர்கள்.அலுவலகத்தில் வேலை கழுத்தை இறுக்கிப் பிடிக்கிறது.வீட்டில் விலைவாசி கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறது.
அவ்வப்போது விலை குறைவதாக பாவ்லா காட்டும் பெட்ரோல் விலை கூட உங்களைப் பார்த்து சிரிக்கத்தான் செய்கிறது. இன்னும் பகட்டான வாழ்க்கை.இன்னும் பணம்.இன்னும் ...இன்னும் என்று உங்களை நீங்களே துரத்தி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா இந்த துரத்தலில் பெரும் அவஸ்தையாக இருப்பது எது?
வீடு என்பதே கூட முதலில் தவறு.
கிளிஜோசியக்காரனிடம் உள்ள கிளி போன்ற கூண்டு வாழ்க்கையைத்தான் வாழ முடிகிறது.இப்போதே ஆளுக்கு ஆள் ஒரு தனிமரமாகிக் கொண்டு விட்ட நிலையில் இன்னும் பல வருடங்கள் கழித்து உங்களது பையனோ பெண்ணோ உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
இதற்கெல்லாம் ஆசைதான் காரணம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது.ஆசையை விட இன்னொரு காரணம் இருக்கிறது.அதுதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்.
எந்த டாக்டர்களையூம் கேட்டாலும் சொல்லி விடுவார்கள்.மனித உடல் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களால் ஆனது என்று.ஏதோ ஒரு வகையில் இவை மனித உடலில் குடி கொண்டிருக்கின்றன.ஆனால் நீங்கள் வசிக்கும் வீட்டில் அப்படி ஏதாவது இருக்கிறதா?
நீர் முதலில் கிடையவே கிடையாது.
குடிநீரை லாரிகளில் கொண்டு வந்து டாங்க்கில் நிரப்புகிறார்கள்.இத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்து தண்ணீரை எங்க ஏரியாவில் வாங்குகிறௌம் என்று பெருமையாக வேறு பேசிக்கொள்கிறீர்கள்.
நெருப்பு?
ஏதோ கொஞ்சம் கேஸ் அடுப்பு இருக்கிறது.மற்றபடி மைக்ரோ ஓவன் சமையலிலும் பிஸ்ஸா பர்கரிலும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
காற்று?
ஏசி போட்டுக் கொண்டு குளுகுளு அறையில் தவறு...குளுகுளு சிறையில் அல்லவா நீங்கள் வசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நிலம் ?
நமது காலடி நிலம் நமக்குச் சொந்தமில்லை.அது கீழ் ஃப்ளாட்காரனுக்கு சீலிங்காக வருகிறது.பக்கவாட்டு சுவர்கள் பக்கத்து ஃப்ளாட்காரனுக்கு அந்தப்பக்கம் சொந்தமாக இருக்கிறது.அப்படியானால் எது நம் இடம்.எது நம் நிலம்?
ஆகாயம்?
என்றைக்காவது அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்துண்டா?நட்சத்திரங்களை எண்ணியதுண்டா? கிடையவே கிடையாது.அபார்ட்மன்ட் அசோசியேஷன் விழாவன்று கூட வானத்தைப் பார்த்தது கிடையாது.
அப்புறம் எப்படி இயற்கை நம்முடம் இயைந்திருக்கும்.
வேறு வழியில்லை.இதுதான் வாழ்க்கைச் சூழல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் ஏதாவது குறுக்குவழியில் பரிகாரம் போல வாஸ்து கீஸ்து என்று சொல்வது போல ஏதாவது செய்யலாம்தானே?
அப்படி முடியூமா?
முடியூம்.
அதற்காகத்தான் வீட்டுத் தோட்டம் போட வேண்டும்.
சிட் அவூட்டிலோ அபார்ட்மன்ட் வீட்டில் வாக் த்ரு இடத்திலோ சன்னல் அருகிலோ சின்னதாய் தொட்டியில் எதையாவது வளர்க்கலாமே.பூக்கள் காய்கறிகள் கூட வேண்டாம்.குளுமை தரக்கூடிய வெந்தயச்செடியைக் கூட வளர்க்கலாம்.சின்னச் சின்னதாய் கீரை வளர்க்கலாம்.பட்டன் ரோஜாக்கள் வளர்க்கலாம்.
தொட்டி என்றதும் பிளாஸ்டிக் தொட்டியை வாங்கி வைத்து விடாதீர்கள்.மண் தொட்டிதான் வேண்டும்.
இப்போது பாருங்கள்.
நிலம் - மண்தொட்டியில் இருக்கிறது.
நீர்- தொட்டியில் நீர் ஊற்றுகிறௌம்.மண்ணும் தண்ணீரும் தொடர்பில் இருக்கிறது.
காற்று- செடி இருப்பதால் அங்கே காற்றும் தொடர்பில் இருக்கிறது.
நெருப்பு- இது மறைமுகமாக செடிகொடிகளுடன் தொடர்பில் இருக்கும்.ஒரு ஆக்கச்சக்தியாக இருக்கும்.அதை அக்னி என்ற சக்தியாக பொருள் கொள்ளலாம்.
ஆகாயம்-அந்த செடி கொடிகள் ஆகாயத்துடன் காற்றின் வழியாக தொடர்பில் இருக்கும்.
ஆக ஒரே ஒரு மண்தொட்டியில் செடிகொடிகள் வளர்த்தாலே அது பிரபஞ்சத்துடன் அதாவது இயற்கையூடன் உங்களை தொடர்புப்படுத்தி விடுகிறது.ஒன்றிரண்டு தொட்டிகள் வைத்திருந்தால்...
நினைத்துப் பாருங்கள்.
அபார்ட்மன்ட் என்ற சிறை அப்போது ஏகாந்தமான இடமாகி விடும்.அதன் பக்கவிளைவாக உங்களது ஆரோக்கியம் பெருகுவதோடு மனதும் இதமாக இருக்கும்.
இதை செய்து பார்த்தால்தான் புரியூம்.
செய்து பாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon