இது நல்லதுதான்.நல்ல அறிகுறிதான்.அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்பதே நாடு நன்றாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது என்பதால் நமது மனமும் சந்தோஷமாக இருக்கிறது.அனைவரும் நலமாக இருக்கட்டும்.
இன்று அமாவாசை என்பதால் வழக்கம் போல ஸ்ரீபிரத்யங்கரா தேவியின் சந்நிதிக்குச் சென்று நமது தளத்தின் அன்பர்களுக்காகவூம் நமது ஆஃப்ஷன் டீம் குழு மற்றும் ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டீம் குழு மற்றும் தபால்வழிப் பயிற்சியில் இணைந்தவர்களின் நலனுக்காக சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையூம் செய்து விட்டு வந்தோம்.
ஏனென்றால் நமது ஆஃப்ஷன் டீம் குழுவில் சேர்ந்தவர்கள் அனைவரும் நன்றாகவே நாம் தரும் வழிகாட்டுதல் மற்றும் டிரேடிங் டிப்ஸ்களைப் பயன்படுத்தி டிரேடிங்செய்து லாபம் சம்பாதித்து வருகிறார்கள் என்றாலும் குழுவிலுள்ள இரண்டொருவர் சற்று பொறுமையில்லாமலும் சில ஓவர் டிரேடிங் செய்யூம் வழக்கத்தாலும் சில பொசிஷன்களில் போய் சிக்கிக் கொண்டு வெளியே வர இயலாமல் அவதிப்பட்டு விடுகிறார்கள்.உதாரணமாக பிஎச்இஎல் கால் ஆஃப்ஷனில் பத்து லாட்டிற்கு மேல் செய்திருந்த ஒரு அன்பர் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ 42000 லாபத்தை அடைய காத்திருக்காமல்(இடையே பிஎச்இஎல் விலை இறங்கியதால் பயம்) சீக்கிரம் விற்று விட்டதில் ரூ 42000க்கு பதிலாக ரூ 7500 மட்டுமே அவருக்கு லாபமாக கிடைத்திருந்தது.இன்னொரு முறை இரண்டொருவர் இன்ஃபோசிஎஸ் நிறுவனத்தின் ரிசல்ட் தினத்தன்று அதன் ஒரு அவூட் ஆஃப் மணி கால் ஓப்பன் உயர்வாக இருந்தது.அதன்பின் திடீரென்று தாழ்வூ காட்டியவூடன் ரூ 3.50க்கு வாங்கச்சொன்ன அந்த கால் ஆஃப்ஷனை அவர்கள் வாங்காமல் விழித்துக்கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே அவர்கள் அந்த கால் ஆஃப்ஷனை ரூ 9.50க்கு அருகில் வாங்கியிருந்தார்கள்.அதன்பின் அந்த கால் ஆஃப்ஷன் ரூ 6.50க்கு வந்தபோதும் வாங்கவில்லை.அதன்பின் அந்த கால் ஆஃப்ஷன் ரூ 9.00க்கு அருகே வந்திருந்தது.அன்றைக்கு மட்டும்சொன்னவூடன் அந்த ஆஃப்ஷனை ரூ 3.50க்கு அருகில் வாங்கியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் லாபம் கிடைத்திருந்திருக்கும்.இவ்வாறு உரிய நேரத்தில் செயல்படாமல் போவதற்கு காரணம் ஜாதகபலவீனமாக இருக்கலாம்.அதற்காக பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்றாலும் அதனை எல்லா டிரேடர்களிடமும் நான் சொல்வதில்லை.
இது போன்ற ஒன்றிரண்டு டிரேடர்களின் நலனுக்காகத்தான் இன்றைக்கு நடைபெற்ற ஸ்ரீபிரத்யங்கராதேவியின் ஹோமத்தில் கலந்து கொண்டு அவர்களது நலனுக்காகவூம் அவர்கள் இனி ஒரு போதும் பயம் தாமதம் பதட்டத்தின் காரணமாக நஷ்டப்பட்டு விடக்கூடாதென்றும் அவர்கள் தொடர்ந்து லாபத்தில் இருப்பதோடு டிரேடிங்கில் அவ்வப்போது கிடைத்து வரும் ஜாக்பாட் மற்றும் பம்பர் லாபத்தை அவர்களும் அடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்து பலமாக ஒரு சங்கல்பம் செய்து வேண்டுதல் வைத்து விட்டு வந்திருக்கிறேன்.
இந்த தீபாவளியை நலமாகவூம் வளமாகவூம் கொண்டாயிருந்திருப்பீர்கள் என்று நீங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளால் நிறைந்து போன எனது செல்பேசியின் இன்பாக்சிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்த தீபாவளியை ஒரு சூப்பர் தீபாவளியாகக் கொண்டாடி மகிழ இன்றே திட்டமிடுங்கள்.
இவ்வாறு நான் சொல்வதற்கு காரணம் மோடியின் பிஜேபியின் ஹனிமூன் இஸ் ஓவர்.இனி வழக்கமான காரணிகளும் சீர்திருத்தங்களும் உலகக் காரணிகளும்தான் சந்தையை வழிநடத்தப்போகிறது.
வரும் 2015ம் ஆண்டில் மூன்று முறை வலுவான கரக்ஷன் இருக்கப்போகிறது என்பது டெக்னிக்கலாகவூம் ஜோதிடரீதியாகவூம் தெரிகிறது.அதில் ஒரு கரக்ஷன் மரணஅடியாக இருக்கும் என்பதால் ஈக்விட்டியில் நீங்கள் செய்திருக்கும் முதலீடுகளை காப்பாற்றிக்கொள்ள இப்போதே ஒரு ஸ்ட்ராட்டஜியை கையில் எடுத்தே ஆக வேண்டும்.என்னதால் ஈக்விட்டியில் ஆட்டைத் துரக்கி மாட்டில் போட்டாலும் அங்கே கரக்ஷன் என்னும் பயமுறுத்தல் இருக்கவே செய்கிறது என்பதால் ஈக்விட்டியிலிருந்து சிறிது பணத்தை ஆஃப்ஷன் டிரேடிங்கிற்காக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ஆஃப்ஷனை பெரிதும் நம்ப வேண்டுமென்றால் அதற்கென்றே இருக்கின்ற ஸ்ட்ராட்டஜிகளை அவ்வப்போது மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்.
அதற்காகத்தான் சொல்கிறேன் ஆஃப்ஷன் மிக நல்லது.
2015ல் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவூம் அடுத்த தீபாவளிக்குள் ஒரு கணிசமான தொகையை அது கார் வாங்குவதற்காகவோ இல்லை வீட்டு உபயோகப்போருட்கள் வாங்குவதற்காகவோ அல்லது வீட்டு மனை அல்லது அபார்ட்மன்ட் வாங்குவதற்கான டவூன்பேமன்ட் கட்டுவதற்காகவோ இப்போதே சம்பாதிக்க ஆரம்பித்து விடுங்கள்.தொடர்ந்து நமது தளத்திற்கு வருகை தாருங்கள்.என்ன செய்ய வேண்டுமென்று அவ்வப்போது சொல்லிக் கொடுக்கிறேன்.
தீபாவளி ஆஃபர்கள் தொடர்கின்றன.
ஆனால் காம்போ ஆஃபர்களை இன்னும் சில தினத்தில் முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மாணித்திருக்கிறௌம்.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon