"அட்ரா சக்கை..அட்ரா சக்கை..அட்ரா சக்கை...'
முன்பெல்லாம் எப்படி ஷேர் டிரேடிங் அலுவலகத்தில் முதலீட்டாளர்களும் டிரேடர்களும் இன்ட்ரா டே செய்வதற்காக குழுமியிருப்பார்களோ அந்த காட்சி இப்போதெல்லாம் அரிதாகி விட்டது.அவரவர்கள் மொபைல் டிரேடிங்கிலேயே இருந்த இடத்திலிருந்தே டிரேடிங் செய்து விடுவதால் சுவாரஸ்ய சம்பவங்கும் குறைந்து விட்டது என்று எனது பழைய நண்பரும் ஒரு ஷேர் டிரேடிங் நிறுவன துணைத் தலைவரும் சொன்ன போது நான் மறுத்தேன்.
இப்போதும் அதே போன்ற ஷேர் டிரேடிங் சூழலை விர்ச்சுவலாக நான் செய்து வைத்திருக்கிறேன்.எனது ஹைரிஸ்க்-ஆஃப்ஷன் டிரேடிங் குழுவினரும் நமது மெயின்வெப்சைட்டின் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் அன்பர்களும் என்னுடன் இணையம் வாயிலாக தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்று அவருக்கு விளக்கினேன்.அப்போது வழக்கம் போல உள்ளே (சாட்டில்தான்) வந்தார் இளங்கோவன்.நிஜப்பெயர் வேறு.சிலப்பதிகாரத்தின் மீதுள்ள பற்றுதலால் இந்த பெயரை அவர் தனக்குத் தானே வைத்துக் கொண்டார்.
"அட்லியூம் ஜெட்லியூம் அரோகரா" என்றார் இளங்கோவன்.
"என்ன சார் குறிச்சொல்லா.சங்கேதமான என்னவோ சொல்றாப்ல இருக்கு"
"ஆமா.அட்லி யாரு.மௌனராகம்..ச்சே ராஜாராணி படம் எடுத்த இயக்குநர்.ஜெட்லி குங்ஃப்பூ கராத்தே நடிர்.அரோகரா நம்ம பழநியப்பனின் நாமம்.மூன்றுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா.மேம்போக்காகப் பார்த்தால் தொடர்பு இல்லாத மாதிரி இருக்கும்.சற்று லாட்டரலா யோசிச்சிப் பாருங்க. தொடர்பு இருக்கும்.அதை மட்டும் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா காசு பணம் துட்டு டிங்டாங்..."என்றார் இளங்கோவன்.
அட்லி..
ஜெட்லி..
அரோகரா..
ஏதோ ஒரு பங்கைப் பற்றித்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்தது.சமயத்தில் நான் சொல்லிக் கொடுத்த விஷயத்தையே லேசாக மசாலா தடவி என்னிடமே புதுசு போல சொல்லும் பழக்கம் இளங்கோவனுக்கு உண்டு என்பதால் இதுவரை அவருக்கு ஏதாவது புதிதாக ஸ்ட்ராட்டஜி எதையூம் சொல்லிக் கொடுத்திருக்கிறேனா என்று ஆக்ஷன் ரீப்ளே போட்டேன்.
அட்லி படத்தில் ஹீரோ அடிவாங்குவான்-(பெண்டாட்டி கையால்)
ஜெட்லி படத்தில் யாரை வேண்டுமானாலும் அடிப்பான்.
அப்புறம் அரோகரா?
பழநி மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது அரோகரா கோஷம் போடுவார்கள்.அட்லியின் குருநாதரான ஷங்கரின் முதல் படத்தில் கூட பழநி மலையில் ஆட்கள் ஏறுவார்கள்.அரோகரா கோஷம் காதைப் பிளக்கும்.ஹீரோ டபாய்த்து விட்டு மொட்டை போட வைப்பார்.
அதாவது ஏறுகிற ஆட்கள் மொட்டை போட்டுக் கொள்வார்கள்.
அப்படியானால் ஏறுகிறதே என்று பின்னால் போகாதே.மொட்டையடிக்கப்டுவாய் என்பதன் எச்சரிக்கைதான் அரோகரா.
ஜெட்லி அடிப்பது என்பது ஷார்ட் அடிப்பதைச் சொல்கிறார்.
அட்லி பட ஹீரோ அடி வாங்குவது-
ஹீரோ என்றால் நல்லவன்.அப்பாவி.அதாவது நேர் வழியில் நடப்பவன்.அதாவது 'லாங்"போகிறவன்.சுருக்கமாக டிரேடிங்கில் ஷார்ட் அடிக்கத் தெரியாமல் ஷார்ட் அடிக்க பயந்து போய் எப்போதும் லாங் சைடிலேயே சென்று கொண்டிருப்பவன்.
ஸோ...
அட்லி
ஜெட்லி
அரோகரா
மூன்றையூம் முடிச்சுப் போட்டாயிற்று.
இதை எங்கே கொண்டுபோய் இணைப்பது.
"அப்புறம் என்ன பதிலைக் காணம்.துப்பறிய இறங்கிட்டிங்களா விஜய் சார்.நாளன்னைக்கு என் ஸ்கூல்மேட் உங்களைப் பார்க்கனும்னு வரான்.டவூன்ஷிப்லதான் இருக்கான்"
"இளங்கோவன்.துல்லியமாக சொல்லிருங்க.இப்ப நீங்க சொன்னது நிஜமாகவே ஒரு செய்தியா.நிஜமாகவே உங்க நண்பன் என்னைப் பார்க்க வரானா? இல்லை இது எனக்கு கொடுக்கற க்ளுவா?"
"நிஜமாதான் வரான்.க்ளுவூம் கூடத்தான்.கண்டுபிடிங்களேன்"
"ப்ரூஸ்லீ"என்றேன் இளங்கோவனிடம் சாட்டில்.
இளங்கோவன் திகைத்துப் போய் ஸ்மைலிகளை அடுக்கினார்.
"என்ன விஜய் சார்.அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டிங்களா"
"பின்னே இப்படி தொத்தலா ஒரு க்ளு கொடுத்தா"
"என்ன க்ளு கொடுத்தேன்"
"டவூன்ஷிப்னு சொன்னிங்கள்ல.அது பிஎச்இஎல் டவூன்ஷிப்.திருச்சியில இருந்து நண்பன் வர்றான்னு சொன்னிங்கள்ல.அதனால நீங்க குறிப்பிட விரும்பற பங்கின் பெயர் பிஎச்இஎல்.சரியா"
"அடேங்கப்பா.சரிதான்.அப்ப அட்லி-ஜெட்லி-அரோகரா?"
"அதுக்குத்தான் வரேன்.ப்ரூஸ்லீன்னு சொன்னது அதுக்குத்தான்.ஷார்ட் அடிச்சி விடுங்க"
"எப்படின்னு க்ளியரா சொல்லும்வோய்"
"பிஎச்இஎல் பங்கைப் பாருங்க.ஈக்விட்டியில ஏறிக்கிட்டிருக்கு.அப்ப மலையில ஏறுவதற்கு சமம்.ஆனா எஃப்அன்ஓவில அதாவது ப்யூச்சர்ல நொண்டுது.அந்த வேகத்துல ஏறாம செல்லிங் திடீர் திடீர்னு வருது.இங்கதான் ஜெட்லி வேலை பண்ணனும்.ஷார்ட் அடிக்கனும்.ஆனா தியரிப்படி பொதுவா ஒரு பங்கு ஈக்விட்டியில ஏறினா அதாவது கேஷ்ல ஏறினா ப்யூச்சர்லயூம் ஏறனும்.ஆனால ஏற விடாம ஷார்ட் அடிக்கறானுங்க.அப்ப கண்ணா..கேஷ்ல ஏறுதேன்னு கண்ணை மூடிட்டு லாங் போகாதே.அட்லி பட ஹீரோ மாதிரி கழுத்து சுளுக்கின மாதிரி பேஸ்தடிச்ச மாதிரி நிக்காத.ஷங்கர் பட ஹீரோ மாதிரி அடி.ஷார்ட் அடின்னு அர்த்தம்"
அன்றைக்கு பிஎச்இஎல் பங்கு கேஷ் மார்க்கெட்டில் லாங் போவதற்கு உதவூகிற மாதிரி தெரிந்தாலும் ப்யூச்சரில் வந்து விழுந்த செல்லிங்குகளை கவனித்துப் பார்த்தால் அந்த பங்கு ஷார்ட் அடித்து வைத்தால் கொழுத்த லாபம் வரும் என்று தெரிந்தது.
இளங்கோவன் ஷார்ட் அடிக்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு அடியூம் மிரட்டல் அடி!
ConversionConversion EmoticonEmoticon