சட்டென்று சொல்ல வேண்டுமென்றால் ராமநாதனுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எந்த சென்டிமென்டிலும் நம்பிக்கையில்லை.ஆனால் ஜாதகம் ஜோதிடம் குறித்த விஷயங்களில் மட்டும் என்னிடம் அவ்வப்போது கலந்து கொள்வார்.இப்போது அவர் மஸ்கட்டில் இருக்கிறார்.அவ்வப்போது வாட்ஸ்அப்பில் வருவார்.சில ஜோதிட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு போய் விடுவார்.
இந்த பதிவூ ஜோதிடம் சம்பந்தமானது அல்ல.
ராமநாதனின் டிரேடிங் யூக்தியைப் பற்றியது.அப்பொழுதெல்லாம் டிரேடர்கள் இன்ட்ரா டே செய்வதற்கோ டெலிவரியாக செய்வதற்கோ நேரில் வந்து கொண்டிருந்த காலம்.மொபைல் டிரேடிங் அறிமுகப்படுத்தப்படாத காலம்.இப்போது எனது வாடிக்கையாளர்கள் மொபைல் டிரேடிங் செய்தாலும் அனைவரையூம் மெசெஞ்சர் வழியாக தொடர்பில் வைத்துக் கொண்டு வழி நடத்தி வருகிறேன் என்றாலும் அன்றைக்கு இந்த வசதி எல்லாம் கிடையாது.
ராமநாதன் வந்துமே திரையில் ஓடும் பங்குகளின் விலைகளைப் பார்ப்பார்.சிலநிமிடங்கள் யோசிப்பார்.பேக்ஆபீஸ் பக்கம் திரும்பி யாராவது ஒரு பெண்ணிடம் ஜோக் அடிப்பார்.சன்னமாக விசிலடிப்பார்.அப்படியானால் அவர் ஆர்டர் போட தயாராகி விட்டார் என்று அர்த்தம்.
"விஜய் சார்..உங்க டீலரை ஹிந்தால்கோ அம்பது பை ஆர்டர் போடச் சொல்லுங்கோ" என்பார்.
அக்கவூன்ட்டில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பார்.அப்புறம் ஏன் வெறும் ஐம்பது ஷேர்கள் மட்டும் வாங்குகிறார் என்று மற்றவர்கள் முனகிக்கொள்வார்கள்.ராமநாதனுக்கு கானாடுகாத்தான் பக்கம் ஏதோ ஒரு அதை விட சிறிய கிராமம்தான் சொந்த ஊர்.எதைச் செய்தாலும் ஒரு முன்யோசனையோடுதான் செய்வார் என்பதால் எனக்கு அவரது மூவ் என்ன என்று தெரியூம் என்பதால் பேசாமல் இருப்பேன்.
"சொல்லுங்க.வெயிட் பண்ணலாமா?"
"பேஷா..ஆஷா"என்பார் பேக் ஆபீஸ் பெண்ணிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).அப்புறம் ஐந்து நிமிட அரட்டையை முடித்துக் கொண்டு-
"போடுங்க இன்னொரு பை ஆர்டர்.ஹிந்தால்கோ இன்னொரு ஐம்பது"என்பார்.
அப்புறம் ஒரு பிரேக் விடுவார்.வெளியில் போய் நிற்பார்.யாரிடமாவது அரட்டையடிப்பார்.அப்போதெல்லாம் செல்போன்கள் செங்கற்கட்டி போல வெளி வந்து கொண்டிருந்த காலம்.சட்டைப்பையில் செல் இருந்தாலே எங்கு சென்றாலும் சல்யூட் அடிப்பார்கள்.செல் எடுத்து யாரையாவது கலாய்ப்பார்.
அப்புறம் ஓடி வருவார்.
"போடுங்க..."என்று அவர் ஆரம்பிக்கும்போதே டீலரின் அருகே அமர்ந்திருக்கிற டிரேடர்கள் கோரஸாக "சாருக்கு ஒரு அம்பது ஹிந்தால்கோ முருகலா ஸ்பெஷலா பார்சல்..."என்று கலாய்ப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் அந்த பங்கை வாங்கிக் கொண்டே இருப்பார்.அவர் ஷார்ட் அடித்தாலும் அப்படியேதான் ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஷார்ட் அடித்துக் கொண்டே இருப்பார்.
"அதென்ன ஐந்து.நியூமராலஜியா.சென்டிமன்ட்டா"என்பார் தேவசகாயம்.
"நியூமராலஜி ஷேர்அஸ்ட்ராலஜியெல்லாம் நம்ம விஜய் சாருக்குத்தான் அத்துப்படி.இது ச்சும்மா"என்பார்.
"சார் சொல்லுங்க சார்"என்று ஆஷா வந்ததும்தான் சொல்ல ஆரம்பிப்பார்.
"ஒரு ஷேரை ஒரே விலையில எப்பவூமே வாங்கவோ விற்கவோ கூடாது.ஆவரேஜ் ஆஃப் சக்ஸஸ் அப்படிங்கற ஒண்ணு எல்லா பிசினஸ்லயூம் ஏன் விளையாட்டிலயூம் கூட இருக்கு.அப்படி இடைவெளி விட்டு விட்டு விட்டு வாங்கினம்னா அந்த பங்கின் விலை ஏறி இறங்கி ஏறி மறுபடி இறங்கி வருவதைப் பார்த்தா நாம இந்த இறங்கின பாயின்ட்ல போய் மறுபடி மறுபடி வாங்கியிருந்திருப்பம்.அதனால ஒரே சீராக நல்ல விலை கிடைக்கும்.அந்த சராசரி விலைங்கறது ஒரே மொத்த ஆர்டரா போடற விலையை விட குறைவான விலைக்குத்தான் கிடைச்சதாக இருக்கும்."
"சரி விற்கறது?"
"விக்கறப்ப ஒரேடியா ஆர்டர் போடக்கூடாது.சில பயபுள்ளக மார்க்கெட் டெப்த்தை பார்த்துட்டு ஒக்காந்திருக்கும்க.அதுல நாமளே ஒரு பெரிய குவான்ட்டியை செல்லிங்ல போட்டா அவனவன் பெரிய பெரிய குவான்ட்டிட்யை செல்லிங்க போடறது பார்த்து விலை குறைஞ்சுரும்டா மாப்ளைன்னு எவனாவது ஷார்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டா நாம விக்கற அன்னிக்கு விலை குறைஞ்சு போயிரும்"
"அப்ப ஊருக்கு ஒரு ராமநாதன் இருக்கனுமே"
"இருப்பாகப்பு. நிச்சயமா இருப்பாக.சரி ஹிந்தால்கோவை இன்னொரு நாளைக்கு வித்துக்கலாம்.விஜய் சார் நம்ம போர்ட்ஃபோலியோவை துப்புறமா க்ளின் பண்ணிட்டேன்.தீபாவளி வருதுல்ல"என்பார்.
அப்போதுதான் நம்ம 'அஞ்சானின்" இன்னொரு முகம் தெரியூம்.அஞ்சான் என்ற பெயரை இப்போதுதான் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.அப்போதே ராமநாதன் அஞ்சான் என்று பெயர் வாங்கியவர்.
ஐந்து ஐந்தாக பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்வதால் அவருக்கு அஞ்சான் என்று பெயர் வந்தது.சந்தையின் சலசலப்புக்கெல்லாம் இந்த அஞ்சான் அஞ்சமாட்டார் என்று தேவசகாயம் கூட அவரை கலாய்ப்பார்.
அஞ்சானின் இன்னொரு முகம்:
எப்போது ஈக்விட்டியில் டெலிவரியாக எந்த பங்கை வாங்கி இவர் அக்கவூன்ட்டில் வைத்திருந்தாலும் அந்த பங்கை விற்கும்போது அதில் ஐந்து சதவீத பங்குகளை விற்காமல் ஆட்லாட்டாக(odd lot) அக்கவூன்ட்டிலேயே வைத்துக் கொள்வார்.அதாவது நுரறு பங்குகள் டிஎல்எஃப் வாங்கியிருந்தால் அதை விற்கும்போது 95 பங்குகளை மட்டும்தான் விற்பார்.
இது போல அவரிடம் ஐந்து ஐந்து என்று தங்கிப்போன பங்குகளே நிறைய கிடக்கும்.அவற்றை எல்லாம் சரியாக ஆயூதபுஜைக்கு முன்னர் விற்று விடுவார்.
"எதுக்காக சார் அந்த அஞ்சு ஃபார்முலா"
"தீபாவளிச் செலவூக்குன்னு தனியா பணம் ஒதுக்கறதில்லப்பு.இப்படி அஞ்சு அஞ்சா பிய்ச்சிப் போட்ட பங்குகளை வித்தா கிடைக்கற பணமே லட்சம் வரும்.அது போதாதா..அப்புறம் தீபாவளி களை கட்டிடாது"
இப்போது மஸ்கட்டில் இருக்கிற ராமநாதன் நமது தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்திருக்கிறார்.ஆஃப்ஷன் வேண்டவே வேண்டாம் என்று சொன்னவரை ஆஃப்ஷனுக்கு இழுப்பதற்கு நான் கடைபிடித்த ஒரே ஃபார்முலா-
அவூட் ஆஃப் மணியில் ஐந்து ஐந்து முறை வாங்கிப் போடுங்க ராமநாதன்.அது ஏறினதும் ஐந்து ஐந்து லாட்டாக வித்துக்கலாம்"
சொன்னவூடன் சேர்ந்து விட்டார்.
அஞ்சானின் "அஞ்சு" டெக்னிக்கை நீங்களும் கடைபிடித்துப் பாருங்கள்.
அடுத்த வருட தீபாவளி உங்கள் வீட்டிலும் கொண்டாட்டமாக கோலாகலமாக களை கட்டி விடும்.
ConversionConversion EmoticonEmoticon