"இரட்டையரைப் புரிந்து கொள்ளுங்கள்"
ஒரு காரியம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் அந்த காரியத்தை செயல்படுத்துவதற்குரிய உங்களது உடல் திடமாக இருக்க வேண்டும்.அதனால்தான் உடல் சார்ந்த வேலைகளை அந்தக் காலத்தில் செய்து வந்தார்கள்.எப்போது உடல் சார்ந்த வேலைகளை விட்டு விட்டு அதை விட அதிக பணம் கிடைக்கிறதே என்று புத்தி சார்ந்த வேலைகளை நீங்கள் செய்ய ஆரம்பித்தீர்களோ அப்போதே உடலின் பயன்பாடு குறைந்து போய் அந்த உடலுக்கே இரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி உடல்பருமன் வியாதி என்று ஒட்டு மொத்தமாய் உங்களது ஆற்றலையூம் இளமையையூம் அமுக்கி விட்டது.
உலகம் போகிற போக்கில்தான் நீங்களும் செல்லவேண்டும்.எதைப் படித்தால் எதை செய்தால் அதாவது என்ன உத்யோகம் பார்த்தால் காசு பணம் அதிகம் கிடைக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும்.ஆனால் அவ்வப்போது "நீங்கள்"(உங்களது பெயரை இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்) என்ற உங்களைத் தாங்கி நிற்கும் இந்த உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்.இந்த உடலை பதமாக பயன்படுத்த வேண்டும்.அதற்காகத்தான் கார்ப்பரேட் சாமியார்கள் யோகா கற்றுத் தந்து காசு பார்க்கிறார்கள்.
இந்த கட்டுரை யோகா பற்றியதல்ல.அதைச் சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.உடலைப் பற்றிய கட்டுரையூம் அல்ல.
பின் எதைப் பற்றி என்றுதானே யோசிக்கிறீர்கள்.விஷயத்திற்கு வருகிறேன்.ஒரு விஷயத்தை முன்பெல்லாம் இப்படிச் சொல்வார்கள்.அதை நீங்களும் கேள்விப்பட்டிருந்திருக்கலாம்.
ஒரு காரியமோ ஒரு இலட்சியமோ நிறைவேறுவதற்கு கஷ்டப்பட்டு உழைத்துப் பாடுபட்டால் மட்டும் போதாது.உடலும் மனதும் ஒரே புள்ளியில் இணைந்து ஒன்றியிருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த காரியம் பதறாமல் சிதறாமல் நிறைவேறும் என்று சொல்வார்கள்.வீட்டிலுள்ள பெரியவர்களும் வெளியிலுள்ள சாமியார்களும் கராத்தே மாஸ்டர்களும் இதைச் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இதிலிருந்து நான் சிறிது மாறுபடுகிறேன்.மாறுபட்டு உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.
உடலும் மனதும் ஒன்றாக ஒத்திசைந்து செயல்படுவதை விட மிக முக்கியமானது மனதும் புத்தியூம் ஒன்றாக ஒத்திசைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.
ஏனெனில் நாம் இப்போது உடலால் உழைப்பதில்லை.உடலுக்கு முக்கியம் கொடுப்பதும் இல்லை.புத்தியால்தான் வேலை செய்கிறௌம்.புத்திதான் சோறு போடுகிறது.
அது சரி அதென்ன மனதும் புத்தியூம் ஒன்றுபடவேண்டும்.இரண்டும் ஒன்றுதானே என்று கேட்கலாம்.
ஒன்றுதான்.இரண்டும் ஒன்று போலத்தான்.
ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.
மனம் எதிர்த்து கேள்வி கேட்காது.
புத்தி என்ன சொன்னாலும் எதிர்கேள்வி கேட்கும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் அல்லது ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள் என்றால் மனது அதை அப்படியே உள்ளுக்குள் பதிவூ செய்து கொண்டு அந்த டார்கெட் வருடத்தில் நீ;ங்கள் ஒரு கோடீஸ்வரர் என்பதை நம்பும்.
ஆனால் புத்தி கேலி செய்யூம்.கேள்வி கேட்கும்.
அடுத்தவர் உங்களை கேலி செய்வதற்கு முன்னர் நீயா..நீ போய் கோடீஸ்வரனா? உன்னால் முடியூமா? இப்போதே ஒரு வேலையை சரியாகச் செய்வதற்கு துப்பில்லை என்று உங்களது பெற்றௌர் போலவோ அல்லது உங்களது மனைவி போலவோ உங்களது திறமையை குறைத்து மதிப்பிடும்.
அதனால்தான் சொல்கிறேன்.
மனதும் புத்தியூம் ஒன்றுபடவேண்டும்.
எதிர்கேள்வி கேட்காத புத்தியூம் எதையூம் நம்பும் மனதும் ஒரே விஷயத்தில் ஒன்றுபட்டு நீ;ங்கள் சொல்வதை அப்படியே கேட்டு பதிவூ செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரே ஒரு தந்திரம்தான் இருக்கிறது.
மனதிடமும் புத்தியிடமும் முதலில் சில நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு அவை எளிதில் "நம்புகிற" விஷயங்களாகச் சொல்லி வர வேண்டும்.
உதாரணமாக இன்று சாயந்தரம் காபி குடிக்கும் காசை மிச்சப்படுத்துவேன் என்று நீங்கள் சொல்லி அதன்படி நடக்க வேண்டும்.
ஆமாம்.இவன் சொன்னபடி காபி குடிக்கும் காசை மிச்சப்படுத்தி விட்டான் என்று மனமும் புத்தியூம் நம்பும்.
அதன்பின் தினமும் ஒரு வீட்டு உண்டியலில் பத்து ரூபாய் காலையில் எழுந்ததும் போட்டு வருவேன் என்று சொல்லி அதன்படியே தினம் பத்து ரூபாய் போட்டு வாருங்கள்.
அப்போதும் அட..இவன் சொன்னபடி செய்கிறானே.'அவர் போல' சொல்வதைத்தான் செய்வான்.செய்வதைத்தான் சொல்வான் போலிருக்கிறது என்று புத்தி நம்பத் தொடங்கும்.
மனம் என்பது ஒரு அழகான பொமரேனியன் நாய்க்குட்டி போன்றது.உடனே பழக்கி விடலாம்.புத்தி என்பது ஒரு யானை போன்றது.சிறிது நாட்கள் சிரமப்பட்டுத்தான் பழக்க வேண்டும்.
அதன்பின் நீங்கள் எது சொன்னாலும் அவை இரண்டும் நம்பும் என்ற நிலை வரும்போது அப்போது பார்த்து உங்களது பெரிய லட்சியத்தைச் சொல்லுங்கள்.அதை அவை பதிவூ செய்து கொள்வதோடு உங்களுக்கே கூட நீங்கள் தடுமாறும் நேரங்களில் வழிகாட்டும்.
செய்து பாருங்கள்.உங்களது லட்சியம் நிச்சயம் நிறைவேறும்.
வாழ்த்துக்கள்!வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon