நேற்று மாலை எப்போதும் செல்லும் பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன்.வழக்கம் போல அங்கே என்னை சந்திக்கும் அன்பர் ரகோத்தமன் கேலியான சிரிப்புடன் நின்றிருந்தார்.அதன் காரணம் எனக்கும் புரிந்தே இருந்தது.
காரணம் புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் கூட்டத்தை விட அங்கே கட்டுக்கடங்காத கூட்டம்.தடுப்புக்கட்டைகள் எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தது.பக்தகோடிகள் கூட்டம் கூட்டமாக அங்கே உட்கார்ந்து புளியோதரை தின்று கொண்டிருந்தார்கள்.பலரது கண்களிலும் கலக்கம் பயம் பதட்டம்.
காரணம் இதுதான்.
நேற்று அனுமன் ஜெயந்தி.
அந்த கோவிலில் உள்ள அனுமன் சந்நிதிக்கு எப்போதுமே சொற்ப கூட்டம்தான் வரும்.அனுமன் சந்தியில் உள்ள பட்டர் பனிஷ்மன்ட் ஏரியாவூக்கு அனுப்பப்பட்ட தாசில்தார் போல பரிதாபமாக நின்றிருப்பார்.ஏனெனில் அனுமன் சந்திக்கு வரும் அன்பர்கள் தட்டில் காசு போட மாட்டார்கள்.ரொம்பவூம் யோசித்து போனால் போகிறதென்று இரண்டு ரூபாய் காசை(அது கூட போனால் போகிறதென்று சட்டென்று சட்டைப் பாக்கெட்டில் ஒரு ரூபாய் காசு மாட்டாது என்பதால் இரண்டு ரூபாய் காசு) போட்டு விட்டுச் செல்வார்கள். நேற்று மலை மலையாக வெற்றிலை மாலை குவிந்திருந்தது.வடைமாலையூம் அடுக்கடுக்காய் தொங்கின.
சனிப்பெயர்ச்சியால் அரண்டு போன பக்தர்கள் தினசரி செய்தித்தாள்கள் வாரப்பத்திரிகைகளில் வரும் ஜோதிட பலன்களைப் பார்த்து சனியை டெக்னி;க்கலா டேக்கிள் செய்வதற்கு அனுமன்தான் சரியான ஆள் என்று இங்கே வந்து அனுமன் ஜெயந்தியன்று உட்கார்ந்து விட்டார்கள்.
அத்தனை துரரம் சனி பற்றிய பயம் பக்தர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்பதை விட பக்தியையூம் பரிகாரத்தையூம் ஒரு க்விக் ஷார்ட் கட் டெக்னிக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
அத்தனை பேரையூம் நிச்சயம் ஸ்ரீஆஞ்சநேயபிரபு காப்பாற்றுவார் என்பது உண்மைதான்.அப்போது ரகோத்தமன் கேட்டார்.
"என்னவோய்.நீர்தான் என்னமோ ஷேர் டிரேடிங் உத்யோக பிரச்சனைக்கெல்லாம் ஷார்ட் கட் பரிகாரம் வைச்சுண்டிருப்பியே.கிரகங்களைப் பிடிச்சி பணம் சம்பாதிக்கற டெக்னிக் ஏதாவது புதுசா வைச்சிண்டிருக்கியா" ன்றார்.
அவர் கேலியாகக் கேட்டாலும் அதில் என் மீதுள்ள அன்பும் பரிவூம் தெரிந்தது.
உண்மைதான்.
நமது தளத்திற்கு வருபவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதில் நாம் பாடுபட்டு வருகிறௌம்.நம்மிடம் ஷேர் டிரேடிங் மற்றும் உத்யோகம் திருமணம் குழந்தை பிறப்பு போன்றவற்றிற்கு பலரும் ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரத்திற்கு அணுகினாலும் ஷேர் டிரேடிங் மற்றும் பிசினஸ் தொடர்பானவைகளுக்கு கிரகங்களை வைத்துக் கொண்டுதான் பலன் பெற வைக்கிறௌம்.
கிரகங்கள் என்பவை அவைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்தைத்தான் அவற்றின் தசாபுத்தி காலங்களில் பார்ப்பதோடு நீங்கள் அவற்றின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கஷ்டங்கள் நல்லது கெட்டது ஆகியவற்றை அனுபவிக்கிறீர்கள்.
அதே கிரகங்களை நம்போக்கில் நமக்கு விருப்பமான முறையில் திருப்புவதற்குத்தான் இவ்வித சூட்சுமப்பரிகாரங்கள் பயன்படுகின்றன.இது போன்ற பரிகாரங்களை உங்களுக்குத் தருவதால் எனக்குத்தான் பாதிப்பு வரும்.அதற்கு நாங்கள் அவ்வப்போது பரிகாரங்கள் செய்து கொள்வோம்.ரேடியோகிராஃபியை பயன்படுத்தும் டாக்டர்களுக்கும் சிறிது அணுக்கதிர் வீச்சு தாக்குதல் இருப்பதைப் போலத்தான் இதுவூம்.
சில அன்பர்களுக்கு நான் கொடுக்கும் பரிகாரம் சிறிய அளவில் சில நஷ்டத்தை ஷேர் டிரேடிங்கில் ஏற்படுத்தக் கூடும்.இது எப்படி என்றால் ஒருவருக்கு அவரது கர்மாவின் படி பல லட்ச ரூபாய் ஷேர் டிரேடிங்கிலோ அல்லது அவர் செய்து வரும் பிசினசிலோ நஷ்டம் ஏற்பட வேண்டுமென்று விதி இருந்தால் அதே நஷ்டம் அதே காலகட்டத்தில் அதே தேதியில் சில நுhறு அல்லது சில ஆயிரங்களுக்குள் நஷ்டம் வந்து அந்த தோஷம் முடிந்து விடும்படி செய்து விடுவேன்.இது எப்படி என்றால் ஒரு தடுப்பு ஊசியை உடலில் போட்டுக் கொண்டால் எதிர்வினையாக சிறிய அளவில் ஒரு காய்ச்சல் வந்து விலகுவதைப் போன்றதுதான் இதுவூம்.
எனவே எந்த மாதிரி பெரிய பிரச்சனையாக இருந்தாலும் நமது ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களின் வாயிலாக தீர்த்து விட முடியூம் என்பதுதான் எனது நம்பிக்கை.அதைத்தான் வெற்றிகரமாகவூம் செய்து வருகிறேன் என்று நண்பர் ரகோத்தமனிடம் தெரிவித்தபோது அவரும் அதை புரிந்து கொண்டார்.
ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்கள் மற்றும் தொழில் உத்யோகம் தொடர்பான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களுக்கு ஸ்கேன் செய்த ஜாதக நகலையோ அல்லது பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களுடன் (bullsstreettamil@gmail.com )மின்னஞ்சலில் மட்டுமே அணுகவூம்.
ConversionConversion EmoticonEmoticon