"குறிபார்க்கும் குறிச்சொற்கள்..."
நமது நாட்டில் இன்டர்நெட் என்பதும் ப்ரவூசிங் என்பதும் 1995க்கு பிறகுதான் புழக்கத்திற்கு வர ஆரம்பத்தது.அப்போதெல்லாம் படு அட்ராசிட்டியாக இருக்கும்.இரவில் மட்டும்தான் பிரவூசிங் செய்ய முடியூம்.பகலில் இணைப்பு வேண்டுமானால் பலமடங்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்பார்கள்.படங்கள் இல்லாமல் வெறும் எழுத்துக்களாக இணையதளங்களைப் பார்வையிடுவதற்கு ஐநெட் என்றொரு இணைப்பை தந்தி ஆபீசில் தருவார்கள்.அப்போது இணையத்தை மேய்வதற்கு யாஹூ மட்டும்தான் பிரபலமாக இருந்தது.வேறு சில பிரபலமாகாத செர்ச் இன்ஜின்களும் அப்போது இருந்தன.ஆனால் யாஹூவை விட்டால் வேறு வழியில்லை.
1998ல்தான் இந்த நிலைமை மாறியது.
அப்போதுதான் கூகுள் (GOOGLE) என்ற ஒரு வார்த்தை பிரபலமானது.அதைக்கூட தென்மாவட்டக்ககார்கள் (ஜாக்கி ஷானை ஜாக்கி ஜான் என்பவாகள்.சிவாஜியை ஜிவாஜி என்பவர்கள்) கூக்ளி என்பார்கள்.
அந்த கூகுள் ஒரு பிரம்மாண்டமான இணைய ராட்சசனாக வளரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.இன்றைய தேதியில் கணினியைத் திறந்தால் கூகுள் இல்லாமல் எதுவூம் இல்லை.
கூகுளின் வளர்ச்சிக்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.அதுதான் கீவேர்ட்ஸ் எனப்படும் குறிச்சொற்கள் மற்றும் ரிஜிஸ்ட்ரி என்னும் நினைவூப்பதிவகம்.
நீங்கள் என்றைக்கெல்லாம் கணினியில் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எதையெல்லாம் தேடுகிறீர்களோ அதையெல்லாம் உங்களது பெயரைப் போட்டு குறித்து வைத்துக் கொள்வது கூகுளின் வெளியில் தெரியாத முக்கிய வேலையாக இருக்கிறது.உங்களைப் பற்றிய தகவல்களை அது விற்று காசு பார்க்கவூம் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
சரி போகட்டும்.சொல்ல வந்த விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
கூகுளின் வளர்ச்சி எதில் இருந்தது என்று சொன்னேன்?
குறிச்சொற்கள்!
எப்படி தேடும் வார்த்தைகளை உங்களது பெயரில் கூகுள் குறித்து வைத்துக் கொள்கிறதோ அதைப் போன்ற ஒரு 'கூகுள்' உங்களிடமும் இருக்கிறது.உங்களிடம் உள்ள கூகுள் நீங்கள் யாரிடம் எப்போது என்ன பேசுகிறீர்களோ அதில் உள்ள கீவேர்ட்ஸ்களை அதாவது குறிச்சொற்களை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உங்களது மனதில் உருவாக்கி வைத்துக் கொள்கிறது.
ச்சே.பத்து பைசா கையில இல்லடா மாப்ளை.ஒரே பணக்கஷ்டம்.நானே நொந்து போயிருக்கேன்- என்று உங்களது நண்பனிடம் என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?அதுவூம் பையில் பல ஆயிரங்களை வைத்துக் கொண்டே பத்து பைசா இல்லை என்று சொல்லியிருக்கிறீர்களா?
உங்கள் மனதி;ற்கு பையில் உள்ள பணம் தெரியாது.அது உடனே நம்ம ஆளிடம் 'பத்து பைசா கூட இல்லை' இவன் 'நொந்து போனவன்" என்று குறித்து வைத்துக் கொள்ளும்.
இன்னொரு நாள்-
ச்சே..நமக்கெல்லாம் சான்ஸே கிடைக்காது.நம்ம கஷ்டத்திற்கு ஒரு விடிவே இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டால் அப்போத உடனே 'இவன் சான்ஸ் கிடைக்காதவன்' 'இவனுக்கு விடிவூ காலம் இல்லை' என்று குறித்து வைத்துக் கொள்ளும்.
அருமையாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.அப்போது பார்த்து உறவினரோ நண்பரோ சிறிது பணம் கை மாத்து கேட்டு வருகிறார்.உடனே 'நானே செம டைட்ல இருக்கேன்.பணமே இல்ல" என்று சொல்கிறீர்கள்.உடனே உங்களது பதிவேட்டில் 'இவனிடம் பணமே இல்லை.இவன் எப்பவூம் செம டைட்ல இருப்பவன்' என்று எழுதப்பட்டு விடுகிறது.
இதன் விளைவாக உங்களது பணவளம் சிறிது காலத்தில் காரணமில்லாமலே குறைந்து கொண்டே வந்து கடைசியில் திண்டாட்டமாகி விடும்.இதனால்தான் அந்த காலத்தில் பெரியவர்கள் வீட்டில்(இப்போது பெரியவர்கள் என்று யாரேனும் வீட்டில் இருக்க அனுமதிக்கிறௌமா என்ன?) நல்ல வார்த்தையைப் பேசுங்கள் என்பார்கள்.
இதுவே மாற்றிப் பாருங்கள்.
கையில் பத்து ரூபாய் இருந்தாலும் லட்ச ரூபாய் கையில் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள்.கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் நீங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லிப் பாருங்கள்.லட்சியத்தையோ அடைய நினைத்த பெரும் பணத்தையோ அடைய முடியாவிட்டாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நினைத்ததை அடைவேன் என்று சொல்லிப் பாருங்கள் -
உங்களிடமுள்ள மடகூகுள் அதை அப்படியே நம்பி விடும்.அப்படியே குறித்து வைத்துக் கொள்ளும்.அதன் விளைவாக நீங்கள் ஒரு பணக்காரராகவூம் லட்சியத்தை ஓரிரு ஆண்டுகளில் அடைபவராகவூம் ஆகி விடுவீர்கள்.
இதை செய்து பார்த்தால்தான் புரியூம்.
எனவே கூகுள் செய்யூங்கள் உங்கள் மனதிடம்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon