பொதுவாக இது போன்ற கிரகநிலைகள் அமைந்த ஜாதகத்தை சாதாரணமாக ஜாதகம் பார்க்கும் ஜோசியர்களிடம் கொண்டு போய் காண்பித்தால் அவர்கள் மேம்போக்காக தற்போது என்ன தசாபுத்தி நடைபெறுகிறது என்று பார்த்துக் கொள்வார்கள்.அதன்பின் பலன் சொல்வதற்கு கிரகங்களின் கோச்சார நிலைமைகளை வைத்துத்தான் பலன் சொல்வார்கள்.
குறிப்பாக தற்போதைய நிலையில் குருவூம் சனியூம் எங்கே இருக்கிறது.குரு வக்கிரமாக இருக்கிறதா? சனி பாதகமான நிலையில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு நேரடியாக ஒரு பரிகாரத்தை குருவூக்கும் சனிக்கும் சொல்வார்கள்.இது போன்ற பரிகாரங்கள் கோச்சார நிலைமைக்கு மட்டுமே என்பதால் அந்த கோச்சார கிரகநிலைகள் மாறியதும் அந்த பரிகாரம் பலிக்காமல் போய் மறுபடியூம் கஷ்டங்கள் தலை துரக்க ஆரம்பித்து விடும்.மேலும் பொதுவான பரிகாரங்களாக சிவன்கோவிலுக்கு போய் விளக்கேற்றுங்கள்.தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை போடுங்கள்.பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்துங்கள் என்பது போன்ற பரிகாரங்கள் எல்லாம் சாதாரண காய்ச்லுக்கு பாரசீட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்வதைப் போன்றது.இது அப்போதைக்கு பலிப்பது போல இருக்குமென்றாலும் மறுபடி இரண்டொரு மாதத்தில் அதே ஜோதிடரிடம் போய் நீங்கள் நிற்க வேண்டி வரும்.
இப்போது நான் சொல்வதைப் பாருங்கள்.கிரகநிலைகள் எப்படி வேண்டுமானாலும இருந்து விட்டுப் போகட்டும்.சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது கிரகங்களின் உதவியைப் பெற்று நிலைமையை சமாளித்து மேலே வந்து விடலாம்.
ராகு-கேதுவா இது ஏதோ வீண்வம்பை விலை கொடுத்து வாங்குவதைப் போல ஆகி விடாதா என்று பயம் தோன்றலாம்.உண்மையில் ராகு-கேது ஆகிய இரண்டும்தான் இந்த மோசமான போட்டி நிறைந்த கலிகாலத்தில் குறுக்கு வழியில் முன்னேறுவதற்கு உதவக்கூடிய கிரகங்கள்.குறுக்கு வழி என்று சொல்வது கூட தவறு.ஸ்மார்ட்டான வழி என்றுதான் சொல்ல வேண்டும்.
திடீர் அதிர்ஷ்டத்தை தருவதற்கு ராகுவூம் அந்த திடீர் அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கேதுவூம் நிச்சயம் உதவூவார்கள்.ராகுவைப் பற்றி என்ன சொல்வார்கள் தெரியூமா? கொடுத்துக் கெடுப்பான் என்று.கேதுவைப் பற்றி சொல்லும்போது கெடுத்துக் கொடுப்பான் என்பார்கள்.
அதாவது ராகு சலிக்கச் சலிக்க செல்வம் பணம் அந்தஸ்து அதிர்ஷ்டம் எல்லாவற்றையூம் கொடுத்து அவற்றை திகட்ட வைத்து போதும் இந்த வாழ்க்கை என்ற ஆன்மீகத்தின் பக்கம் உங்களது கவனத்தை திருப்புவான் என்பதுதான் இதிலுள்ள உட்பொருள்.
அதே போல கேது என்பவன் முதலிலேயே உங்களை ஆடம்பரம் செல்வம் பணம் இவற்றின் மீதான ஆசையை தடுத்து ஆன்மீகத்தின் பக்கம் இழுப்பவன்.
அதனால் இந்த ராகு-கேது ஆகிய இரண்டின் காம்பினேஷனை முழுமையாகப் பயன்படுத்தினால் இந்த உலக வாழ்க்கையையூம் வளமாக நலமாக வாழ்ந்து கொண்டு இந்த வசதி வாய்ப்புகள் மற்றும் பணக்கார வாழ்க்கையை இழந்து விடாமலேயே ஆன்மீகச் சூழலையூம் உங்களிடம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஏனென்றால் ராகுவை கேதுவூம் கேதுவை ராகுவூம் பார்த்துக் கொள்ளும் விதத்தில்(நிழல் கிரகங்களுக்கு பார்வை கிடையாது என்பார்கள்.கிரகம் என்ற சொல் வந்து விட்டாலே பார்வை இருந்தாக வேண்டுமென்பது எனது அபிப்பராயம்) நிலைதான் எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படும் என்பதால்
ராகு மற்றும் கேதுவை ஒரே சமயத்தில் வழிபட்டால் இன்னல்கள் நீங்கும்.
இதற்கு அம்மன் (முருகனும் ஓகேதான்) வழிபாட்டை ராகுவிற்கும் விநாயகர் வழிபாட்டை கேதுவிற்கும் வழிபட வேண்டும்.அதாவது ஒரே நாளில் அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே உள்ள விநாயகரை முதலில் வழிபட்டபின் அம்மனை வழிபட வேண்டும்.துர்க்கை அம்மனாக இருந்தால் மிகவூம் நல்லது.இந்த வழிபாட்டை தயவூ செய்து சிவன் கோவிலில் செய்ய வேண்டாம்.ஏனென்றால் அங்கே சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களது உலகவாழ்க்கைக்கான சுகம் மறுக்கப்பட்டு ஆன்மீகத்தின் வழியில் உங்களை வரவழைக்க எத்தனை கஷ்டங்கள் உண்டோ அத்தனை கஷ்டத்தையூம் அங்குள்ள ஈர்ப்பு சக்தி உங்களுக்கு வழங்கி விடும்.
வீட்டில் வழிபட வேண்டுமென்றால் அம்மன் படத்தை வைத்து வழிபடக் கூடாது.அதற்கு பதிலாக சின்னக் குழந்தைகள் ரூபத்தில் இருக்கிற முருகனும்-விநாயகனும் இணைந்த மாதிரி உள்ள படத்தை வைத்து வழிபடலாம்.
சாயா கிரகங்கள் என்பவை சந்தர்ப்பவாத கிரகங்கள்.சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் வாழ்வில் விரைவில் முன்னேறி விடலாம்.
ConversionConversion EmoticonEmoticon