"உயிர்ப்புடன் இருங்கள்..."
சில மாலை நேரங்களில் கையில் காபி டம்ளருடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து மெதுவாக துளித் துளியாக அந்த காபியை அருந்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சாலையில் செல்லும் போக்குவரத்தையோ சாலையிலிருந்து உள்ளார்ந்து வீடு அமைந்திருந்தால் தெருவில் செல்பவர்களையூம் மின்சாரக்கம்பத்தில் வந்து உட்காரும் காக்கா குருவிகளையூம் வேடிக்கை பார்க்கும்போது நீங்கள் எப்படி வேடிக்கை பார்க்கறீர்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஒரு வகை தவம் போல ஒரு அநிச்சைச் செயல்போல உங்களது மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு உங்களது மனமும் நீங்களுமாக இணைந்து மெலிதாக அப்படி ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சுகமாக இருக்கும்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதே போன்ற ஒரு இன்னொரு வேடிக்கையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என்று சொல்லுங்கள்.
சற்று காற்றௌட்டமான அமைதியான இடத்தில் அமர்ந்து உங்களுக்குள் சென்று வரும் உங்களது மூச்சுக் காற்றை வேடிக்கைப் பார்த்திருக்கிறீர்களா?
அப்படி பார்க்கவில்லை செய்து பாருங்கள்.
இப்படி உங்களுக்குள் சென்று வரும் உங்களது மூச்சுக் காற்றை நீங்கள் வேடிக்கை பார்க்க கற்றுக் கொண்டு விட்டால் அடுத்து இன்னொரு வேடிக்கையையூம் நீங்கள் பார்க்க ஆரம்பிக்கலாம்.
அது வேறொன்றுமில்லை.
நீங்களே உங்களை வேடிக்கைப் பார்க்க முயற்சிக்கும் செயல்தான் அது.
உங்களை நீங்களே வேடிக்கைப் பார்ப்பதா? இதென்ன வேடிக்கையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.
இது எப்படி என்றால் உங்களது ஒரு நாள் வாழ்வை 'கேன்டிட் கேமரா' போல உங்களை நீங்களே விடியோ எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும்.ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்.காலையில் எழுந்தரிக்கிறீர்கள்.ரெடியாகிறீர்கள்.டிபன் சாப்பிடுகிறீர்கள்.வண்டியை எடுக்கிறீர்கள்.அலுவலகம் செல்கிறீர்கள்.அங்கே எதிர்ப்படுபவர்களிடம் பேசுகிறீர்கள்.அலுவலக பாலிடிக்ஸில் பங்கேற்கிறீர்கள்.மதியம் சாப்பிடுகிறீர்கள்.சாயந்தரம் கிளம்புகிறீர்கள்.மறுபடியூம் வீடு.டிவி சீரியலில் ராதிகாவையோ ரம்யாகிருஷ்ணனையோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறீர்கள்.
இதுதான் உங்களது ஒரு நாளைக்கான ஸ்கிரீன் ப்ளே.
இதை மானசீகமாக ஷூட் செய்தால் எப்படி இருக்கும்.
முதலில் தெரியப்போவது உங்களது முழு உடல்.அதன்பின் முகம்.எதற்காக உடலும் முகமும் என்றால் உங்களது உடற்கட்டு மாறியிருக்கிறதா?நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்களா அல்லது மெல்ல சர்க்கரை வியாதியை தன்னுள் மறைத்துக் கொண்டு ஓபிசிட்டி வந்து கொண்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.எதற்காக முகம் என்றால் உங்களது மனதை எடுத்து போஸ்டராக ஒட்டி விட்டால் அதுதான் உங்களது முகமாக இருக்கும்.அதனால் உங்கள் முகத்தில் தெரிவது அவநம்பிக்கையா சோகமா உற்சாகமா வன்மமா என்பதை முகம் காட்டிக் கொடுத்து விடும்.குறிப்பாக கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.
அதன்பின் உங்களது உடையணியூம் பாங்கு.அதில் நீங்கள் ஒரு சாதாரணமானவரா.அல்லது ஒரு வெற்றியாளரா என்பது தெரியூம்.அடுத்து உங்களது நடை.அதுவூம் உங்களது வெற்றியை தெரிவித்து விடும்.தன்னம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா என்பதையூம் தெரிவித்து விடும்.அடுத்து நீங்கள் பேசுகிற முறை.என்ன வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள்.அதில் பாசிட்டிவ்வான வார்த்தைகள் உள்ளனவா அல்லது அவநம்பிக்கையூம் சோர்விற்கான விதைகளும் காணப்படுகிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
பாலிவூட் நடிகர்கள் இது போல ஒன்டே ஷூட் கேன்டிட் கேமரா போல எடுத்து தங்களை தாங்களே சரிபார்த்து செதுக்கிக் கொள்வார்கள்.இங்கே அந்த பழக்கம் இல்லை.இதற்காக நீங்கள் உங்களை விடியோ எடுக்க வேண்டாம்.எப்படி மூச்சுக் காற்றை உற்று கவனிக்கிறீர்களோ அது போல உங்களது ஒவ்வொரு செயலையூம் மனதால் அகக்கண்களால் உற்று கவனிக்க பழகிக் கொண்டு கவனித்துப் பாருங்கள்.அதன்பின் உங்களிடம் உள்ள அத்தனை நெகட்டிவ்களையூம் நீக்கி விடலாம்.நெகட்டிவ்வான விஷயங்களை நீக்கி விட்டால் பின் அங்கே இருப்பது பாசிட்டிவ்வான தன்மை மட்டும்தான்.
அதனால் நீங்கள் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தால் மட்டுமே உண்மையாக உயிர்ப்புடன் இருப்பதாகப் பொருள்.அதுதான் உங்களை மேம்படுத்தும்.
எனவே உணர்ந்து பாருங்கள்.நான் சொல்வதை சரியென்று உணர்வீர்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon