"பாதியூம் மீதியூம்..."
சட்டென்று ஒருநாள் எல்லாம் மாறிப்போனதாக என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? அவசர அவசரமாக நீங்கள் ரயிலைப் பிடிப்பதற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.புத்தம் புதிய உடைகள்.கவர்ச்சிகரமான சூட்கேஸ்.சட்டைப் பையில் அசத்தலான ஸ்மார்ட்.
இந்த தோரணையே உங்களை பந்தாவாகக் காட்டிக்கொண்டிருக்கும்.ரயிலைப் பிடிப்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.உங்களது சின்னஞ்சிறிய ஹாட்ச்பேக் காரில் ஏறிக் கொள்கிறீர்கள்.கார் சன்னமான ஏசியூடன் மெல்லிதான பாடலுடன் (எட்டு ஸ்பீக்கர் வூ+ஃபர் டியூட்டர் எல்லாம் வைத்திருக்கிறீர்கள்.அனிருத்தோ அங்கிட் திவாரியோ திம்க திம்க என்கிறார்கள்.
ஏதோ ஒரு சிக்னலில் உங்களது கார் நி..ற்..கி..றது.
அப்போது உங்களது பக்கவாட்டில் இன்னொரு கார் சத்தமே இல்லாமல் வழுக்கின மாதிரி வந்து நிற்கிறது.பார்த்தால் அசந்து போகிறீர்கள்.வெண்ணிற ரோஜாக்கூட்டத்தை பனியில் முக்கி எடுத்த மாதிரி ஒரு புத்தம் புதிய லம்பாஹினி கார்.
ஆச்சர்யமூட்டுகிறது அந்த கார்.
ஆச்சர்யமூட்டுவது அந்த கார் மட்டுமல்ல.அதில் உள்ளே அமர்ந்திருக்கும் நபர்.அது..அவர்..அவன்..என்று தடுமாற்றத்துடன் நீங்கள்.அந்த நபரே புன்னகைக்கிறார்.
அது வேறு யாருமல்ல.
உங்களுடன் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியில் படிப்பை விட்டு விட்டு ஓடிய சிறுவன்.இப்போது வளர்ந்து ஆளே மாறிப்போய் உங்களது சின்ன கார் இப்போது மூட்டைப்பூச்சி போல கூசுகிறது.உங்களது பிராண்டட் உடைகளும் ஆஃபரில் வாங்கிய மொபைல் போனும் தரித்திரத்தனமாகத் தோன்றுகிறது.
காரணம் அந்த லம்பாஹினி காரும் உங்களது 'பாதியில் படிப்பை விட்ட' பள்ளித் தோழனும்.
அவர் இப்போது உங்களைப் போலவே ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்.ரயிலைப் பிடிப்பதற்கு அல்ல.விமானத்தைப் பிடிப்பதற்கு.ஜெர்மனியோ யூஎஸ்ஸோ எங்கோ உடனே போக வேண்டுமாம்.
இந்த விஷயத்தை விடுங்கள்.
நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள்.நன்றாகத்தான் வாழ்கிறீர்கள்.ஆனால் என்றைக்காவது நீங்கள் ஆசைப்பட்ட அல்டிமேட் லக்ஸரி வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்திருக்கிறீர்களாஇஷங்கர் படத்தில் வரும் சீனாவிலுள்ள ஸீனரியை படத்தில் பார்த்தது இருக்கட்டும்.அடுத்த சம்மர் வெகேஷனுக்கு சீனாவிற்கு சென்று வர வேண்டுமென்று ஆசைப்பட உங்களது பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ஏன் அதெல்லாம் முடியவில்லை.
இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.அதைத்தான் இன்றைக்கு சொல்லப் போகிறேன்.
நீங்கள் முடிக்காமல் பாதியில் விட்ட வேலை என்று ஒரு தகவலை திறட்டப் போகிறீர்கள்.பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயதில் ஹிந்தி டியூஷனுக்கு சென்றிருக்கலாம்.அதில் சில தேர்வூகள் எழுதி அப்புறம் பாதியில் விட்டிருந்திருக்கலாம்.வேலை தேடிய வயதில் நண்பனுடன் சேர்ந்து ஏதாவது ஒரு சின்ன பிசினசை முயன்று பார்த்து அதையூம் பாதியில் விட்டிருக்கலாம்.யூபிஎஸ்ஸி தேர்வூக்கு படித்துப் பார்த்து விட்டு இரண்டொரு தேர்வூகளின் தோல்விகளுக்கு அடுத்து எழுதாமல் விட்டிருந்திருக்கலாம். வேலை கிடைத்தபிறகு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து இதுவே பேHதும் என்கிற மாதிரி உடனே திருமணமானதும் இருந்திருக்கலாம்.குழந்தைகளை மிகப்பெரிய கான்வென்ட்டில் சேர்க்க வேண்டுமென்றால் இன்னும் சில பார்ட் டைம் வேலைகளை செய்ய வேண்டுமென்று நினைத்து வேண்டாம்.இந்த ஸ்கூலுக்கு என்ன.இதில் படிக்கிற பிள்ளைகள் படிக்கவில்லையா என்று அந்த முயற்சியை பாதியில் விட்டிருந்திருக்கலாம்.ஏன் ஷேர் டிரேடிங் செய்து பார்த்து நஷ்டம் வந்ததும் நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று பாதியில் ஒதுங்கியிருந்திருக்கலாம்.
இப்படி எத்தனையோ 'பாதியில் விட்ட விஷயங்கள்" ஒரு லிஸ்ட் போடும் அளவூக்கு இருக்கலாம்.
ஆனால் பாதியில் படிப்பை விட்ட உங்களது நண்பன் உங்களை விட பலபடிகள் மேலே போய் ஒரு சூப்பர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
பாதியில் படிப்பை விட்ட அந்த பையன்(இப்போது பெரிய பணக்கார கனவான்) அதன்பின் எதையூமே பாதியில் விடக்கூடாது.எதையூமே ஒரு கை பார்த்து விடுவது என்று தீவீரமாக இறங்கியிருந்திருக்கலாம்.அதுதான் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கும்.
எனவே எதையூம் பாதியில் விடாதீர்கள்.
பாதியில் விட்ட காரியங்கள் அத்தனையையூம் ஒரு லிஸ்ட் எடுத்துப் பார்த்து அதில் எதையாவது இப்போது தொடர முடியூமா என்று பாருங்கள்.
ஏதாவது கிடைத்தால் போதுமென்று திருப்திப்பட்டுக் கொள்வது ஒரு வகை.எதையூம் ஒரு கை பார்த்து விடுவது என்று விடாமல் துரத்துவது இன்னொரு வகை.
எது பெரிதாக பலனைக் கொண்டு வரும் என்று நான் சொல்லாமலே அறிவீர்கள்.
ஆக பாதியில் எதை விட்டீர்களோ அதுவே உங்களை மீதி நாட்களில் உயர்த்தப்போகிறது அதுவூம் உங்களது நண்பனை விடவூம் பெரிதாக.
செயலில் இறங்குங்கள்.
அதிர்ஷ்டம் பணம் வாய்ப்புகள் சந்தர்ப்பம் எல்லாம் க்யூவில் காத்திருக்கின்றன உங்களது வருகைக்காக.
ConversionConversion EmoticonEmoticon