அதுவூம் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆஃப்ஷன் டிரேடிங், பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங் என்று முழுமூச்சாக வேலை பார்க்க ஆரம்பித்து விட்டபிறகு வெளியாட்கள் யாரையூம் நான் சந்திப்பதில்லை.
காரணம் எனது வேலைப்பளு.
அது மட்டுமல்லாமல் என் நேரம் எனக்கு முக்கியம்.
திங்கள் முதல் வெள்ளி வரை டிரேடிங்கில் போய் விடுகிறது.வாரஇறுதி வந்து விட்டால் அடுத்த வாரத்திற்கான டிரேடிங்கிற்கான ஆய்வூகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.இத்துடன் ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரத்தை அலசி ஆராய்வது என்பதே மனதளவில் அதிக வேலையாக அமைந்து விடுகிறது.
காரணம் நான் தருகிற சூட்சுமப் பரிகாரம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள பூர்வபுண்ணிய ஸ்தானத்தை ஓவர்டேக் செய்வதைப் போன்றது.இதை செய்வதற்கு அந்த ஷேர் டிரேடரின் ஜாதகத்தை இதற்கான பூஜையில் வைத்திருந்து குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் வந்தபின்தான் எடுத்துப் பார்ப்பேன்.அப்போதுதான் பொருத்தமான சூட்சுமப்பரிகாரம் என் மனதில் தோன்றும்.
இத்தனை வேலைகளை நானே செய்ய வேண்டியிருப்பதால் யாரையூம் நான் பொதுவாக சந்திப்பதை விரும்புவதில்லை.நானே விரும்பினாலும் என் வேலைப்பளு அனுமதிப்பதில்லை.இதையூம் மீறி சிலர் நேரில் வருகிறேன் என்று சங்கடப்படுத்தி விடுகிறார்கள்.
நேற்று உறவினர்கள் இரண்டு பேர் சோழிங்கநல்லுரரிலிருந்து வந்து என்னை சந்தித்தே ஆக வேண்டுமென்றார்கள்.சந்தை முடிய 3.30 ஆகுமென்பதால் மூன்றரை மணிக்கு மேல் வாருங்கள் என்று சொல்லியிருந்தேன்.சரியாக 3.00 மணிக்கு வந்து நின்று ஒன்றும் தொந்தரவில்லையே என்றார்கள்.அதுவரை நேற்று வொலட்டைலாக இருந்த சந்தை அப்போதுதான் 3.00 மணிக்கு மேலே நேர்க்குத்தாக செல்ல ஆரம்பித்திருந்தது.சரியான இடைஞ்சல்.
இன்றும் இரண்டு பேர் எப்படியோ விசாரித்து மாலை நேரம் ஒரு அவசர வேலை நிமித்தமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தபோது வந்து விட்டார்கள்.
வந்தவர்கள் சிறுமுதலீட்டாளர்கள் போலிருக்கிறது.
ஆஃப்ஷன் எஸ்ஐபி திட்டத்தில் சேர வேண்டும்.பணத்தைக் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தோம்.பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறௌம்.இதில் எவ்வளவூ பணம் கிடைக்கும் லாபமாக என்றார்கள்.போர்ட்ஃபோலியோ போல அறிவூரை சொல்லுங்கள் என்று நிர்பந்தித்தார்கள்.
இது உங்களது டிரேடிங் கணக்கு.என்னிடமெல்லாம் பணம் தரத் தேவையில்லை.உங்களது பணத்தை உங்களது பெயரில் நீங்களே முதலீடு செய்து நீங்களே ஆர்டர் போட வேண்டியதுதான் என்று விளக்கமாக சொன்னால் ஆர்டர் போடத் தெரியாதே என்றார்கள்.எதையாவது பேசி 'விபரமாக' தெரிந்து கொண்டு போக வேண்டுமென்று வந்தவர்கள் என்று புரிந்தது.
நேரில் வராதீர்கள் என்று வந்தவர்களிடம் சொல்ல முடியவில்லை.அப்படி முகத்தில் அடித்த மாதிரி சொல்வதும் பண்பாடு இல்லை.தயவூ செய்து என்னை நேரில் அணுகாதீர்கள்.எனது வேலைகளை செய்ய விடுங்கள்.
இன்னொன்றும் நான் அடிக்கடி சொல்வதுண்டு.
என் அனுமதி இல்லாமல் என் நேரத்தை எடுத்துக் கொள்வது என்பது என் சட்டைப்பையில் நீங்கள் கையை விட்டு எனது பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.மேலும் எனது நேரம் எனது உரிமை.உங்களது நேரம் உங்களது உரிமை.
அதனால் நேரம் என்பதும் பணம்தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.
நேற்றும் இன்றும் கிடைத்த இது போன்ற அனுபவத்திலிருந்து சிறுமுதலீட்டாளர்களை சற்று தள்ளி வைத்து விடலாமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
நாமக்கல்லில் இருந்து நேற்று ஒரு அன்பர் கேட்டார்.பத்தாயிரம் ரூபாய் போட்டால் தினம் தினம் எத்தனை ஆயிரம் கிடைக்கும் என்று.துறையூர் அன்பர் பத்தாயிரம் ரூபாய்க்கு எத்தனை கிடைக்கும் என்கிறார்.
பத்தாயிரம் ரூபாய் போட்டு ஆஃப்ஷன் டிரேடிங் செய்வது என்பது போர்க்களத்தில் போரிடுவதைப் போன்றது.
போனால் பத்தாயிரம் ரூபாயூம் அப்படியே போய் விடும்.வந்தால் பலமடங்காக ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் வரும்.
இதைப் புரிந்து கொண்டவர்கள்தான் ஆஃப்ஷனில் சம்பாதிக்க முடியூம்.
எதற்காக நாம் மிக மிக குறைவான கட்டணத்தில் ஆஃப்ஷன் எஸ்ஐபி ப்ளானை ரூ 2555க்கு ஒரு வருடம் முழுக்க டிப்ஸ் தர வேண்டும் என்று என் நண்பர்கள் இன்று திட்டித் தீர்த்து விட்டனர்.
அதனால் இதுவரை இந்த ப்ளானில் இணைந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆஃப்ஷன் எஸ்ஐபி டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 5555ஆக உயர்கிறது.
இந்த உயர்வூ நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
அது போல "ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழுவில் இணைபவர்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 15555 ஆகும்.இவர்களும் நம்மிடம் உள்ள துவங்கும் ஆன்லைன் டிரேடிங் கணக்கில்தான் டிரேடிங் செய்தாக வேண்டும்.
வெளியில் டிரேடிங் செய்து கொள்கிறேன் இங்கே ஏதாவது ஒரு குழுவில் இணைந்து டிப்ஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக ரூ 15555 செலுத்துவதுடன் நம்மிடம் பெறும் ஒவ்வொரு டிரேடிங் டிப்ஸிற்கும் ரூ 555 வீதம் முன்கூட்டியே செலுத்திதான் டிப்ஸ் பெற முடியூம்.
ConversionConversion EmoticonEmoticon