நேற்றைய பதிவில் எழுதியிருந்தபடி நம்மிடம் ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் பெற்றிருந்த வாடிக்கையாளர்களுக்காகவூம் ஆஃப்ஷன் டீமில் இருக்கும் ஒன்றிரண்டு கஷ்டப்படும் நபர்களுக்காகவூம் கோயமூத்துரரில் இருக்கிற ஒரு குறிப்பிட்ட அன்பருக்காகவூம் நேற்று திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ஹைவேஸ் அருகே உள்ள திருத்தலத்தில் அவர்களது ஜாதகத்துடன் பரிகாரம் செய்து வந்தோம்.
திருப்பட்டூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பிரம்மா அங்கே வருபவர்களின் ஜாதகத்தை மாற்றி நலலவிதமாக எழுதி அவர்களது தலையெழுத்தை மாற்றி விடுவார் என்பது ஐதீகம்.ஆனால் அதனால் அங்கே உள்ள பிரம்மா சந்நதியில் கூட்டம் திமுதிமுவென்று முண்டியடித்தது.ஆனால் தலையெழுத்தை மாற்றி எழுதுவதற்கான சூட்மத்தை அங்கே பிரம்மா சந்தியில் வைத்திருக்காமல் அதே கோவிலில் வேறொரு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.அது தெரியாமல் பிரம்மா சந்நிதியில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் விரைந்தார்கள்.இதே போல்தான் ஸ்ரீரங்கத்திலும் நடந்தது.ஸ்ரீரங்கத்தில் உள்ள பரிகார சூட்சும சக்தி அரங்கன் சந்நிதியிலும் இல்லை.தாயாரின் சந்நிதியிலும் இல்லை.அதே கோவிலில் வேறொரு இடத்தில் மறைமுகமாக அந்த சூட்சும சக்தியை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.அதைப் பற்றி பின்னர் சந்தர்ப்பம் அமைந்தால் எழுதுகிறேன்.
திருப்பட்டூருக்கு நாங்கள் சென்றிருந்தபோது இரண்டு பேருந்து நிறைய ஸ்ரீலங்காவிலிருந்து பக்தர்கள் வந்திருந்தார்கள்.பிரம்மா சந்நிதியிலிருந்த அர்ச்சர்கள் அவர்களை மிகக் கேவலமாக நடத்தியது மனதை வருந்தச் செய்தது.ஜாதகத்தை பிரம்மாவின் காலடியில் வைத்து தருமாறு 500 ரூபாயை தட்சிணையாக வைத்துக் கொடுத்த ஒரு ஸ்ரீலங்கா பக்தரை அவர் தரும் பணத்தையூம் வாங்க முடியாது.உனக்கெல்லாம் எதுக்கு நாங்க ஜாதகத்தை வைத்துத் தரனும் என்று கடுமையான சொற்களை உதிர்த்து சபிக்கவூம் செய்து விட்டார்கள் அங்கிருந்த இரண்டு மேதாவித்தனமாக அர்ச்சகர்களும்.இது போன்ற ஸ்வாகா சொல்லும் அர்ச்சகர்களுக்கு இத்தனை திமிரும் அரக்கத்தனமும் இருந்தால் நம்ம ஊர் சுற்றுலாத்துறையூம் இந்து சமய அறநலத்துறையூம் கோவில்களும் நன்றாக வாழும்(!) என்று தோன்றியது. ஒரு மந்திரமும் சொல்லாமல் சும்மா ஸ்வாகா சொல்லி ஓபியடித்து ஒப்பேற்றும் அர்ச்சர்களே இத்தனை திமிர்தனமாக நடந்து கொண்டால் அப்புறம் ஏன் நம்மவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கும் முஸ்லிம் மதத்திற்கும் மதம் மாற மாட்டார்கள்.வெரி ஸாரி! திருப்பட்டூர் திருத்தலத்தின் பெருமையை இந்த அர்ச்சகர்கள் நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.கோவிலில் 36 தீபம் ஏற்றுவதற்கான தக்கினியூண்டு நெய்விளக்கு தட்டை ரூ 108க்கு விற்கிறார்கள்.அதே 36 நெய்விளக்கு கொண்ட தட்டை கோவிலுக்கு வெளியே ரூ 36க்குதான் விற்கிறார்கள்.
கடைசியில் புரிந்தது தலையெழுத்தை மாற்றி எழுதப்பட வேண்டியவர்கள் அந்த ஸ்ரீலங்கா பக்தர்கள் அல்ல.பிரம்மா சந்நிதியில் உள்ள அகங்காரம் பிடித்த அர்ச்சர்கள்தான்!
நாம் திருப்தியாக நாம் திட்டபடி எங்கே வைத்து நமது வாடிக்கையாள அன்பர்களின் ஜாதகங்களை வைத்து பரிகாரம் செய்து வைக்க வேண்டுமோ அதை மட்டும் செய்து விட்டு அங்கிருந்து மகிழ்வூடன் கிளம்பி விட்டோம்.
அதன்பின் நம்மிடம் வழக்கமாக ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் பெற்றுச் செல்லும் திரைப்படத் துறை அன்பர்களுக்காக ஸ்ரீரங்கம்(அது சுக்கிரனுக்கான பரிகார ஸ்தலம் என்பதால்) சென்றிருந்தோம்.அங்கே கூட்டம் அலைமோதியது.விடுமுறை தினம் என்பதால் இத்தனை கூட்டம்.நாம் அந்த கோவிலில் எந்த இடத்தில் சென்று பரகாரம் செய்ய வேண்டுமோ அதனை திருப்தியாக செய்து வந்தோம்.காரணம் அந்த இடம் பற்றி யாருக்கும் தெரியாது.அங்கே கூட்டமும் கூடுவதில்லை.என்னமோ செய்யறிங்க.ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறிங்க.ஆனா எங்களுக்கு பணம் வந்து கொட்டுது.அது போதும் என்றார் உடன் வந்திருந்த திரைப்படத் தயாரிப்பாளர்.
அதன்பின் மெயின்கார்டுகேட் வந்தோம்.வந்திருந்த அன்பர்களில் சிலர் ஆர்ஆர் டீ ஸ்டாலில் பிரிந்து கொள்ள (அங்கே டீ நன்றாக இருக்கும்) நாங்கள் ஸீகிங்ஸ் ஐஸ்க்ரீம் பார்லர் சென்று லோ கலோரிக்காக ஷூகர்ஃப்ரீ ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பலன் பெறும் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது அவர்களுக்கே தெரியாமல் சில பரிகாரங்களை நமது செலவில் நாம் செய்து விடுவதுண்டு.இதற்காக தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை.
இன்றைய பயணம் திருப்தியாக இருந்தாலும் ஒரே ஒரு குறை டிரேடிங் நேரத்தில் நாம் நமது ஆஃப்ஷன் டீம் குழுவினருக்கு சாட் வழியாக சப்போர்ட் செய்ய இயலாமல் கோவில் பரிகாரம் என்று இருந்து விட்டோம் என்பதுதான்.
வரும் வாரத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்ற மனநிறைவூம் ஏற்பட்டது.
ConversionConversion EmoticonEmoticon