வைகுண்ட ஏகாதசியன்று புதுவருடம் பிறப்பது விசேஷம் என்பது சொல்லாமலே அனைவருக்கும் புரியூம்.ஆனால் இதிலுள்ள ஒரு நுட்பமான விஷயத்தை ஷேர் டிரேடிங்கிற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏகாதசி என்பது எப்போது வருகிறது என்று பார்ப்போமானால் அமாவாசையை அடுத்த பதினோராம் நாள் வருவதுதான் ஏகாதசி எனப்படும்.இப்போது அமாவாசை என்றால் என்ன என்று பாருங்கள்.சூரியனும் சந்திரனும் சேரும் நாள்தான் அமாவாசை.அதாவது இதையே பைனரியாக எடுத்துக் கொண்டால் ஒரு ஒன்றும் ஒரு பூஜ்ஜியமும் சேரும் நாள்.அதன் மொத்த பலன் என்ன என்றால் அது ஒரு விதமான சமநிலை எனலாம்.
அந்த சமநிலை என்பது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு செயலை மீண்டும் புதுவிதமாக புதுப்பிப்பது போல என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
மின்சார இயந்திரங்களில் 'ரீசெட்' என்றொரு பொத்தான் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.
நடந்து கொண்டிருக்கும் ஒரு செயலை அப்படியே நிறுத்தி விட்டு புதிதாக ஆரம்பத்திலிருந்து துவங்குவதற்காகத்தான் அந்த ரீசெட் பொத்தான் இருக்கிறது.அதைப்போல ஷேர் டிரேடிங்கில் நீங்கள் சரியானபடி லாபம் சம்பாதிக்காமல் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் அந்த டிரேடிங்கை அப்படியே நிறுத்தி விட்டு மறுபடியூம் புதிதாக ஆரம்பிப்பதற்கு இந்த அமாவாசை தினத்ததைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்படி அமாவாசை தினத்தன்று புதிதாக ஒரு ஆர்டர் போட்டு உங்களது டிரேடிங்கை மீண்டும் புதிதாக துவங்க வேண்டும்இஏன் அப்படி புதிதாக துவங்க விரும்புகிறௌம்.லாபம் அதிகரிக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு தினமும் அல்லது ஒவ்வொரு டிரேடிங்கும் லாபம் தராவிட்டாலும் ஒட்டு மொத்தமாக ஒரு சராசரியாகப் பார்க்கும்போது நிகரலாபம் என்பது ஒரு பெருந்தொகையாக வரவேண்டும் என்றுதானே அமாவாசையன்று ரீசெட் செய்கிறௌம்.
இன்னும் சுருக்கமாகச் சொன்னால் லாபத்தை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள்.அதாவது லாபஸ்தானத்தை நோக்கி அதனை அடைவதற்காக பயணிக்கிறீர்கள்.ஜோதிட சாஸ்திரத்தின்படி லாபஸ்தானம் என்பது பதினோராவது இடம் எனப்படும்.கவனிக்க 11ம் இடம் என்பது எப்போதுமே லாபத்தைக் குறிப்பதற்கான இடம்.
இந்த ஏகாதசியூம் அமாவாசையிலிருந்து எண்ணிக்கொண்டு வந்தால் 11வது இடமாக வருகிறது.ஆக ஏகாதசிதான் லாபத்தை குறிக்கின்ற தினம்.இந்த திதியைப் பிடித்துக் கொள்வது நலம்.எப்போதுமே கிராமங்களில் சொல்வார்கள்.விதி கெட்டவனுக்கு திதிதான் துணை என்று.ஜாதகம் என்னதான் கெட்டதாக மோசமாக இருந்தாலும் சரியான திதியில் சரியான ஹோரையில் ஒரு காரியத்தை துவங்கினால் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது.நல்லதே நடக்கும் என்பதுதான் இதன் பொருள்.
இன்று வைகுண்ட ஏகாதசி.
அத்தனை பேரும் ஏன் எதற்கு என்று தெரியாமல் சொர்க்க வாசல் கதவூ திறந்தும் பெருமாள் கோவிலுக்குச் சென்று உள்ளே பாய்வதற்கு தயாராக இருப்பார்கள்.ஷேர் டிரேடர்களாகிய ஷேர் முதலீட்டாளர்களாகிய நீங்களும் நேரடியாக லாபத்தை அடைவதற்காக ஒரு முத்திரை போல இந்த வைகுண்ட ஏகாதசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு ஒரு வழி முறை இருக்கிறது.
உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு பங்கை 11 என்ற எண்ணிக்கையில் இன்றைக்கு ஈக்விட்டியில் வாங்கி வையூங்கள்.நான் எப்போதுமே இது போன்ற பரிகாரங்களுக்கு சிபாரிசு செய்வது குறைந்த விலையில் அதாவது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் விலைகளில் டிரேடாகிக் கொண்டிருக்கிற சிறிய பென்னிப் பங்குகளைத்தான் பரிகாரத்திற்கு பயன்படுத்தச் சொல்வேன்.
இன்று காலையில் 9.15 முதல் 10.00 மணி வரை அல்லது மதியம் 1.00 முதல் 2.00 வரை உள்ள நேரத்தில் இது போன்ற பங்குகளை 11 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைத்து விடுங்கள்.
சற்று வசதி உள்ளவர்களாக இருந்தால் இன்றய புத்தாண்டு வைகுண்ட ஏகாதசியன்று அதுவூம் வியாழக்கிழமை வருவதால் ஸ்ரீசீரடி சாய்பாபாவையோ அல்லது நவக்கிரக சந்நிதியில் உள்ள குருபகவானையோ(தட்சிணாமூர்த்தியை அல்ல) வைஷ்ணவகோவில்களில் உள்ள ஸ்ரீதேவி தாயாரையோ வணங்கி விட்டு ஒரு கிராம் அல்லது அரை கிராம் அல்லது அதனினும் குறைந்த அளவூகளில்(நகைகடைகளில் 50 மில்லி 100 என்ற அளவூகளில் கூட தங்கக்காசு சுமார் 100 அல்லது 250 ரூபாய்களில் கிடைக்கும்) தங்கக்காசு வாங்கி வந்து உங்களது வீட்டு பூஜையறையில் உள்ள மகாலட்சுமி படத்தின் கீழ் வைத்து வணங்கி இயன்றால் இனிப்பு மற்றும் பாயாசம் வைத்து வழிபடுங்கள்.
இந்த ஆண்டு முழுவதும் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.உங்களது பொருளியல் வாழ்வூம் சிறப்பாக இருக்கும்.வருமானம் மற்றும் அந்தஸ்து யாவூம் உயரும்.
வாழ்த்துக்கள்.வாழ்க பணமுடன்!
குறிப்பு:அப்புறம் எப்போதும் சொல்லும் வார்த்தைதான்.இன்றய தினம் லாபஸ்தானத்தில் அமைவதால் இன்று நமது தபால்வழிப் பயிற்சிகளிலும் ஆஃப்ஷன் டீம் குழுவிலும் இணைவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான நல்ல நாள்.இன்றைக்கே கட்டணத்தை செலுத்த முடியாவிட்டாலும் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் உங்களது பெயரை பதிவூ செய்து விட்டு இரண்டொரு நாளில் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.இன்று பெயரை பதிவூ செய்வதுதான் முக்கியம்.
ConversionConversion EmoticonEmoticon