அண்மையில் தேநீர்சிஎஸ் மென்பொருள் நிறுவனம் சுமார் 25000 (சிலபேர் 35000 என்கிறார்கள்.எது சரி?) ஆட்களை வேலையிலிருந்து விரட்டியடிப்பது குறித்த செய்திகளை செய்தித்தாள்களிலும் இணையத்திலும் வாசித்திருப்பீர்கள்.ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் தொழிற்சங்கங்களும் பொருள்முதல்வாதம் பேசும் கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் ஏன் அரசாங்கமும் கூட பரிந்து பேசி போராட முன்வருவார்கள்.
ஆனால் இதுவரை தேநீர்சிஎஸ் நிறுவனத்திலிருந்து விரட்டப்பட்ட இளங்கிழவர்களுக்கு ஆதரவூ பெருகவில்லை.இதற்கு காரணம் இந்த மென்பொருள் ஆசாமிகள் இத்தனை காலம் வாழ்ந்த சுகவாழ்வூதான் காரணம்.பொதுவாக இவர்களது அடையளாம் கேஎஃப்சி பிட்ஸா கார்னர் விலையூயர்ந்த ஹாங்அவூட்டுகளுக்கான இடங்கள் இங்கெல்லாம் அரை டவூசர் சகிதமாக உலவிக் கொண்டிருந்தார்கள்.வேலை கிடைத்தவூடனே ஆட்டம் பாட்டம்.ஹவூசிங் லோன் கார் லோன் பிள்ளைகள் படிப்பதற்கு காஸ்ட்லியான பள்ளிகள் என்று ஒரு போலியான ஐந்து நட்சத்திர வாழ்க்கையை வாழ்வதற்கு பழக்கி விடப்பட்டிருந்தார்கள்.இவர்களால் சென்னை புறநகர் பகுதிகளில் கூட வீட்டு வாடகையூம் விலைவாசியூம் ஏறிப்போய் விட்டிருந்தது உண்மைதான்.
இவர்களுக்கு ஆதரவாக இவர்கள் பணியாற்றிய நிறுவனத்திலிருந்தே கூட யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.காரணம் இவன் போனால் அந்த இடம் தனக்கு தன் மச்சினனுக்கு என்றுதான் அங்கே உள்ள அடுத்த பலிகடாக்கள் இருப்பார்கள்.
சரி இதெல்லாம் போகட்டும்.
இப்போது வாய் விட்டு அலறாமல் மௌனமாக ஒடுங்கிப் போய் கிடக்கும் இந்த தேநீர்சிஎஸ் போன்ற நிறுவனத்திலிருந்து வேலை போன ஆசாமிகள் என்ன செய்திருந்தால் 'தப்பித்திருக்கலாம்' என்று பார்ப்போம்.
அரசாங்க வேலை தவிர வேறு என்ன வேலை பார்த்தாலும் வருகிற சம்பளத்தில் பாதி சம்பளத்திற்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்.இதுதான் முதல் கண்டிஷன்.அதெப்படி முடியூம் என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை.தெருவில் அமர்ந்து பூ தொடுத்து விற்பனை செய்யூம் பெண்ணிற்கு அன்றைக்கு எவ்வளவூ பூ விற்கப்போகிறது.எவ்வளவூ வாடிப்போகிறது என்று தெரியூமா? ஆனாலும் அவர்கள் ஒரு தோராயமாக இவ்வளவூதான் செலவூ செய்ய வேண்டுமென்று வாழ்க்கை நடத்துவதில்லையா? என்று சொன்னால் தெருவில் பூ விற்கும் பெண்ணும் சாப்ட்வேர் கன்சல்டன்ட்டான நானும் ஒன்றா என்று கேட்டீர்களானால் அங்கேயே நீங்களே உங்கள் தலையில் மண்மை அள்ளிப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
நமது பாரம்பரிய வாழ்க்கையே சிறுகக்கட்டி பெருக வாழ் என்பதுதான்.
1.ஆக பாதி சம்பளத்திற்குள்தான் வாழ்க்கை.
2.சிறுகச் சிறுக சேர்த்து ஒரு ஆறுமாத குடும்பச் செலவிற்கான பணம் சேமிப்புக் கணக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3.வீட்டுக் கடன் சரி.அதிலும் சிறிய அளவில் இருந்தால் நல்லது.இஎம்ஐ கட்ட முடியூமா என்று ஆயிரம் தடவை யோசித்த பிறகுதான் லோன் வாங்கியிருக்க வேண்டும்.
4.கார் லோன்? மிகப் பெரிய தவறு.மற்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் நாற்பது ஐம்பது வயது கடந்த பிறகுதான் ஒரு கார் என்பதை நினைத்துப் பார்க்கிறார்கள்.எனவே போனால் போகிறது என்ற அளவில் ஒரு ஹாட்ச்பேக்(செகன்ட் ஹான்ட் பெட்டர்) கார் போதுமானது.ஹோண்டா ஃபோக்ஸ்வேகன் என்று போனால் தலையில் மண்ணிற்கு பதிலாக தீயை அள்ளிக் கொட்டிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
5.கேஎஃப்சி பி;ட்ஸா கார்னர்? அடிக்கடி அங்கே போய் உங்களது பத்து மணிநேர தினசரி கடின உழைப்பில் கிடைத்த பணத்தை குப்பைக் கூடையில் எறிகிறீர்கள் என்று அர்த்தம்.பழைய சோறு சாப்பிட்டு தெருவை சுத்தம் செய்யூம் வேலை செய்பவனும் மனிதன்தானே.இத்தனை நாள் சாப்பிட்ட அரிசி சாதம் மறத்துப் போய் விட்டதா?சிக்கனும் பர்கரும் இருந்தால்தான் உயிர் நிற்குமா?
6.எந்த செலவாக இருந்தாலும் ஆயிரம் முறை யோசித்தபின்தான் செய்ய வேண்டும்.நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அங்கே முதல்நாள் வேலைக்கு சேரும்போது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வார்கள்.யார் வந்து பைனான்ஸ் டிபார்ட்மென்ட்டில் ப்ரபோசல் கொடுத்தாலும் அதை பத்து முறை நிராகரிக்க வேண்டும்.திருத்தி எழுதி வருமாறு திரும்பத் திரும்ப அனுப்ப வேண்டும்.அதன்பின்னும் வந்தால் அவர்கள் கேட்பதில் பாதிக்கும் குறைவாக் குறிப்பிட்டு அதுவூம் அடுத்த காலாண்டில்தான் என்று அனுப்ப வேண்டும்.அதன்பின் அவர்களாகவே பாதிக்கும் பாதியாக குறைத்து எழுதிக் கொண்டு வருவார்கள் என்பார்கள்.இதைப் போலவே தினசரி வாழ்விலும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் 11 மாதங்கள் கடும் சிக்கனமாக இருந்து கடைசி 1 மாதம் மட்டும் தாராளமாக செலவூ செய்து பாருங்கள்.இதைத்தான் நீங்கள் அட்டக்காப்பி அடிக்கும் அமெரிக்கர்கள் செய்கிறார்கள்.கடும் உழைப்பும் கடும் சிக்கனமும் 11 மாதமும் இருக்கும்.அதன்பின் ஒரு மாதம் உல்லாசமாக ஊர் சுற்றவூம் செலவூ செய்யவூம் செய்வார்கள்.
7.எப்போது மூழ்கப்போகும் என்று தெரியாத கப்பலில் பயணம் செய்பவர்கள் எப்போது வேண்டுமனாலும் லைஃப்போட்டுடன் குதிக்க தயாராக இருப்பது மாதிரி குறைவான பொருட்கள் குறைவான செலவூகள் என்று எப்போது வேலையிலிருந்து நீக்கினாலும் சந்தோஷமாக குட்பை சொல்லி வெளியேற தயாராக இருக்குமாறு உங்களது பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்ளுங்கள்.
8.ஆக ஒன்றே ஒன்றுதான்.வேலை நீக்கம் பின்னால் குத்தும் துரோகம் என்பதை எல்லாம் தவிர்க்க முடியாது.வேலை நீக்கம் என்பது மரணம் போன்றது.எப்போதும் வரலாம் என்று எதிர்பார்த்தே தயார் நிலையில் இருங்கள்.
9.மறந்தும் எந்த லோனுக்கும் யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள்.
10.சேமிப்பும் குறைவான செலவூமே உங்களை எப்போதும் காப்பாற்றும்.சேமிப்பதை சுவாசம் போல அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களது புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon