"திட்டமிடுவதில் முந்திக் கொள்ளுங்கள்..."
இந்தி நிமிடம் நீங்கள் என்ன செய்து விட்டு வந்து இந்த கட்டுரையை வாசிக்கிறீ;ர்கள் என்று தெரியாது.ஆனால் இன்றைக்கு நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று ஒரு திட்டமிட்டுதான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாக சராசரி மனிதர்கள் இது போல் சொல்லிக் கொள்வார்கள்.எந்த விஷயத்தையூம் திட்டம் போட்டு செய்தால் முட்டுக் கட்டைகள் உருவாகும்.பட்ஜட் போட்டு செலவூ செய்வது என்று ஆரம்பித்தால் திடீர் செலவூகள் வந்து முளைக்கும்.திட்டம் போட்டோ பட்ஜட் போட்டோ எது செய்தாலும் அது உருப்படாது என்று.
ஆனால் உருப்படாமல் போவது திட்டமிடுதலோ பட்ஜட் போடுதலோ அல்ல.இப்படி நெகட்டிவ்வாக புரிதல் இல்லாமல் பேசும் நடுத்தர வர்க்கத்து 'சுமார் முயற்சி' மனிதர்கள்தான்.
இவர்களிடம் பேச்சுதான் அதிகம் இருக்கும்.அதிலும் பேச்சை விட விமர்சனம்தான் அதிகம் இருக்கும்.டொக்கு விமர்சனம் செய்யூம் டக்கு பேட்ஸ்மன்; சடகோபன் ரமேஷ் போல விமர்சனம் செய்வார்கள்.யார் எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வது இவர்களிடம் உள்ள மிகைக்குணமாக இருக்கும்.
திட்டமிட்டு ஒரு காரியம் செய்வதைத்தான் மேலாண்மையியல் வலியூறுத்துகிறது.இது தொழில்துறையில்தான் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது.திட்டமிட்டு ஒரு காரியம் செய்யூம்போது எதிர்பாராத இடையூறுகள் முளைக்கும் என்று நம்ம "சுமார் முயற்சி" மனிதர்கள் சொல்கிறார்கள் அல்லவா அந்த எதிர்பாராமல் முளைக்கும் இடையூறுகளையூம் கஷ்டங்களையூம் 'எதிர்பார்த்து' திட்டமிடுவதைத்தான் மேலாண்மையியல் வலியூறுத்துகிறது.இதைத்தான் ஆன்டிசிபேட்டரி மேனேஜ்மன்ட் என்றும் சொல்கிறது.
திட்டமிட்ட பாதையில்தான் கோள்கள் சுற்றுகின்றன.திட்டமிட்ட இடத்தில்தான் நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன.திட்டமிட்டபடிதான் பருவநிலை காலம்காலமாக(சில சமயங்களில் சற்று மாறி வரலாம்).அவ்வளவூ ஏன் திட்டமிட்டபடிதான் உங்களிடமுள்ள அவநம்பிக்கையூம் எதிலும் தோற்றுவிடுவோமோ என்ற பயமும் தன்னம்பிக்கைக் குறைவூம் இருக்கின்றன.இவை உங்களை விடாது பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற திட்டத்துடன்தான் உங்களுடனே இருக்கின்றன.நீஙூகள் அவநம்பிக்கையோடு பேசுவதும் எதையூம் எதிர்மறையாக விமர்சனம் செய்வதும் யாரையூம் பொறாமைக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதும்கூட இவ்வித குணங்கள் திட்டமிட்டு உங்களை சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதால்தான்.
எனது உறவினர் ஒருவர் இருக்கிறார்.நாம் குறிப்பிடுவது போன்ற மிகச் சரியான "சுமார் முயற்சி" நடுத்தர வர்க்கத்து பிரதிநிதி என்றே இவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அவரிடம் எதைப் பற்றிச் சொன்னாலும் அது நடக்காதே.அது விளங்காதே.அதெல்லாம் சரியாக வராது என்பார் எடுத்த எடுப்பிலேயே.எனக்குத் தெரிந்த இன்னொரு மனிதர் இருக்கிறார்.இவரது சிறப்பு குணமே அடுத்தவர்களை மட்டம் தட்டி சுகம் காண்பது.இப்படி அடுத்தவர்களை மட்டம் தட்ட வேண்டுமென்ற குணம் இவரிடம் குடிகொண்டு விட்டபின் 'அடுத்தவர்களை மட்டம் தட்டுதல்' என்பது திட்டமிட்டு அவரிடம் புகுந்து விட்டால் அவரையறியாமலேயே அவரது சொந்த மகளையே மட்டம் தட்டி மட்டம் தட்டி இப்போது அவரது மகள் ஒரு மனநோயாளியாகி விட்டாள்.இத்தனைக்கு இவரது மனைவி ஒரு டாக்டர்.இந்த திட்டமிட்டு மட்டம் தட்டும் மனிதர் ஒரு கல்லுரரி பேராசிரியர்.
எதற்காகச் சொல்கிறேன் என்றால் சற்றே கவனித்துப் பாருங்கள்.நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பார்வைகள்.உங்களது மேனரிசம் நீங்கள் எதையூம் பார்க்கும் பார்வை இதிலெல்லாம் என்ன மாதிரியான தன்மை இருக்கிறது என்று பாருங்கள்.பாசிட்டிவ்வாக ஏதும் தென்படுகிறதா அல்லது எதையூம் நெகட்டிவ்வாகப் பார்க்கிறீர்களா என்று பாருங்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரகங்களைப் பற்றி சொல்ல வேண்டும்.இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அடுத்த பாராவை வாசிக்க வேண்டாம்.
நீங்கள் உங்களது வாழ்வை உங்களது எதிர்காலம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று திட்டமிடாவிட்டால் காலமும் கிரகங்களும் நீங்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டமிட்டு விடும்.இப்படி அவைகள் திட்டமிடுவதற்கு உங்களது 'கர்மா' ஒரு டேட்டாபேஸாக அவைகளுக்கு வேண்டிய தகவல்களை உங்களைப் பற்றி தந்து விடும்.
அதனால் கர்மா உண்மையா என்றால் உண்மை.கிரகங்களின் பிடி உண்மையா என்றால் அதுவூம் உண்மை.அப்படியானால் இந்த பிறவியை இப்படியே வாழ்ந்து கழிக்க வேண்டுமா என்றால் அதுதான் இல்லை.
கர்மாவை மீறலாம்.கிரகங்களை மீறலாம்.விதியைக் கூட மீறலாம்.அதற்காகத்தான் சிந்திக்கும் திறன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் திறன் என்று பலவிதமான கருவிகள் நமக்கு இயற்கையாலோ இறைவனாலோ கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே உங்களது எதிர்காலத்தையூம் வளமாக வாழ்க்கையையூம் நீங்களே திட்டமிடுங்கள்.நீங்கள் திட்டமிடாது விட்டு விட்டால் காலமும் கிரகங்களும் விதியூம் ஏன் உங்களைச் சுற்றியூள்ள அற்பமான "சுமார் முயற்சி" மனிதர்களும் கூட உங்களது வாழ்க்கையை மற்றும் நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு உங்களை நாசப்படுத்தி விடுவார்கள்.அதற்கு அனுமதிக்காமல் நீங்களே முந்திக்கொண்டு முதலில் திட்டமிடுங்கள்.காசு பணம் அதன்பின் ஒரு பக்க விளைவூ போல தானாக வந்து சேரும்.
ConversionConversion EmoticonEmoticon