"அந்தப் பக்கம்..."
ஏதாவது ஒரு பிரச்சனை புதிதாக உங்களுக்கு வந்திருக்கிறதா? யார் மீதாவது அவர்கள் செய்த காரியத்திற்காக வெறுப்பாக வந்திருக்கிறதா? யார் மீதாவது கோபமாக வருகிறதா? இனி அவர் முகத்திலேயே முழிக்கக் கூடாதென்று வைராக்கியமாக இருக்கிறதா?ஏதாவது ஒரு பிசினஸ் அல்லது முயற்சி கை கூடாமல் பாதியிலேயே நிற்கிறதா? எத்தனை முயற்சி செய்தும் செய்து வரும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வர முடியவில்லையா?
மேற்கண்ட கேள்விகளில் சிலவற்றிலாவது உங்களுக்கு உடன்பாடு இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.நீங்கள் பாட்டுக்கு நேர்மையாக உங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.சில பேர் எருமை மாடு மாதிரி வந்த மோதி விட்டுச் சென்றிருப்பார்கள்.அவர்கள் உங்களுக்கு செய்த கெடுதல்களுக்கு ஒரு ஸாரி கூட சொல்லத் தோன்றாமல் எதுவூமே நடவாத மாதிரி சென்றிருப்பார்கள்.இது போன்ற சூழ்நிலைகளில் உங்களுக்கு வெறுப்பாக வரும்.மனம் சுனங்கிப் போகும்.எதற்கு நீங்கள் மட்டும் நல்லவனாக இருக்க வேண்டுமென்ற சமூக ஆவேசம் கூட மெலிதாக வந்து போகும்.
இது போன்ற சூழ்நிலைகளில் இன்றே வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று:நீங்களும் அந்த மாதிரி எருமைத்தனமான மனிதர்கள் போல கெட்டுப் போகலாம்.நீங்களும் வெகுண்டெழுந்து உங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை அடுத்தவனும் பெறட்டும் என்று தாறுமாறாக தாக்குதல்களை பேச்சிலோ நடத்தையிலோ போட்டுக் கொடுப்பதிலோ செய்ய ஆரம்பிக்கலாம்.
இரண்டு:ஏன் இப்படி ஆகிறது.இதற்கு என்னதான் தீர்வூ என்று யோசிக்கலாம்.
இந்த இரண்டு தீர்வூகளில் இரண்டாவதுதான் சரியாகவூம் நீடித்ததாகவூம் இருக்கும்.
இந்த தீர்வை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.
சற்றே வெளியே வாருங்கள்.காலார நடந்து பாருங்கள்.வெளியே எல்லாவற்றையூம் பாருங்கள்.எல்லாவற்றையூம் என்றால் சாலையை அதில் போகும் வாகனங்களை அதிலுள்ள மனிதர்களை அப்புறம் அபூர்வமாக விருட்டென்று பறந்து போகும் சிட்டுக் குருவிகளை புன்னகை வங்கிகளாக முகத்தை வைத்துக் கொண்டு சிக்னல் அருகே நடந்து போகும் பள்ளிக்கூட சீருடை அணிந்த சின்னக் குழந்தைகளை இப்படி எல்லாரையூம் கவனித்துப் பாருங்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள் அல்லவா?
இதை நீங்கள் உங்களது கண்களால் உங்களது இடத்திலிருந்து பார்க்கிறீர்கள்.இதையே இப்போது உல்டாவாக்குங்கள்.
அதாவது அவர்கள் இடத்திலிருந்து கற்பனையாக விர்ச்சுவலாக உங்களை நீங்கள் பாருங்கள்.அதாவது அவர்களது இடத்திலிருந்து அவர்களது கண்களால் உங்களை நீங்கள் பாருங்கள்.
இயல்பாக இப்படிப் பார்க்க முடியாது.
ஆனால் இப்படி உருவகப்படுத்திக் கொள்ள முடியூம்.
ஒரு காமரா வழியாக நீங்கள் அவர்களை முதலில் பார்க்கிறீர்கள்.பின் அதையே அந்த காமரா கோணத்தை அவர்களிடம் கொண்டு சென்று அவர்களிடம் காமராவை வைத்து உங்களை அங்கிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்.
ஆகவே எதையூம் அடுத்தவர்கள் இடத்திலிருந்து அவர்கள் கோணத்திலிருந்தும் பாருங்கள்.சில நேரம் தவறு உங்கள் பக்கம் இருந்து அவர்கள் சரியானவர்களாகக் கூட இருந்திருக்கலாம்.பல நேரம் அவர்கள் பக்கம்தான் தவறு இருந்திருக்கும்.அவர்கள் ஒரு தாழ்வூ மனப்பான்மையினாலோ அல்லது பொறாமையினாலோ உங்களைக் காயப்படுத்துவதை அவர்களது மனதிலுள்ள ஆறாத வடுவிற்கு மருந்தாக ஆக்கிக் கொள்வதற்காகக் கூட அப்படி எருமைத்தனமாக நடந்து கொண்டிருக்கக் கூடும்.அது போன்ற சமயங்களில் உங்களை வதைத்தவர்களிடமே நீங்கள் ஆறுதலாக கனிவாக ஒரு பார்வை பார்த்து விட்டால் போதும்.தீர்ந்தார்கள் அவர்கள்.அவர்களது பொறாமை வெறுப்பு மறைந்து போய் வெட்கித் தலைகுனிவார்கள்.ஆக அந்த இடத்திலுள்ள வெறுப்பு அடைபட்டுப்போய் விடுவதால் இனி உங்கள் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.
இதுதான் டெக்னிக்.
இதை விட்டு விட்டு வெறுப்பிற்கு பதில் வெறுப்பு என்று கிளம்பினால் போரை வளர்க்கும் தீவீரவாத நாடுகள் போல இரண்டுபேர் தரப்பிலும் சேதம் அதிகரிக்கும்.
எந்த விஷயத்தையூம் அடுத்தவர் பக்கமிருந்து பாருங்கள் என்று ஒரு வரியில் சொல்லியிருக்கலாமே.எதற்காக இத்தனை சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் நினைக்கலாம்.
பிடித்துப் போன ஒரு பெண்ணிடம் கூட உடனே போய் நேரடியாக உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் கால்களில் உள்ளது பயனற்றுப் போய் விடும் என்ற பதிலே வரலாம்.அதையே நீட்டி முழக்கி சுற்றி வளைத்து சமய சந்தர்ப்பம் பார்த்து சரியான டைமிங்கில் சொன்னால்...
அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
இப்படி அடுத்தவர் கோணத்திலிருந்து பார்ப்பது குடும்ப உறவூகளில் மட்டுமல்ல பிசினஸிலும் பயன்படும்.
ConversionConversion EmoticonEmoticon