விதி என்ற வஸ்து யாரை விட்டது.
ஒரு நாள் ஒரு செல்பேசி அழைப்பின் பேரில் பரபரப்பாகக் கிளம்பினேன்.ஒரு ஆல்இன்ஆல் நடிகர்-இயக்குநர் அழைத்திருந்தார்.ஏதாவது ஒரு படத்தை கோ புரொடியூஸ் செய்யலாம் என்ற எண்ணம் அப்போது இருந்தது.திண்டுக்கல் போகும் வழியில் ஒரு ஊரில் அந்த நடிக இயக்குநர் அப்போது முகாமிட்டிருந்தார்.அந்த ஊரின் பெயரை குறிப்பிட வேண்டாம்.வேண்டுமானால் 'படமெடுத்தான் பட்டி' என்று வைத்துக் கொள்வோம்.
செல்ப் டிரைவ் அப்போது அத்தனை பழக்கமாகியிருக்கவில்லை.காரை மெதுவாகவே ஓட்டிக் கொண்டு சென்றேன்.திண்டுக்கல் சாலையூடன் கோபித்துக் கொண்டு இடது புறம் திரும்பிய சாலையில் சற்று துரரம் சென்றால் ஒரு ரயில்வே கிராசை தாண்டியவூடன் வருவதுதான் படமெடுத்தான் பட்டி.
அங்கே போய் ஒரு புரோட்டாக் கடை வாசலில் நிற்க தயக்கமாக இருந்தது.காரணம் அங்கே ஷகிலா நின்றிருந்தார்-போஸ்டரில்.சற்று ஒதுங்கி புளியமர நிழலில் காரை நிறுத்தினேன்.
செல்பேசியை எடுத்தால் உற்சாகமாக நடிகஇயக்குநர்.
முதல் கேள்வியே கார்ல வந்திங்களா என்றார்.
ஆகா.நமது 'பணம்' எவ்வளவூ தேறும் என்று அடி போடுகிறார் என்றுநினைத்துக்கொண்டிருந்தபோதே ஜெய்சங்கர் காலத்து தொத்தல் மோட்டார் பைக்கில் இரண்டு பேர் பஞ்சாயத்து ஆபீசிற்கு வயரிங் பண்ணப் போகிற ஆட்கள் போல வந்து கொண்டிருந்தார்கள்.பின்னார் உட்கார்ந்திருந்தவர்தான் 'டயருடக்கர்' என்பது புரிந்தது.
"வாங்க ரிசார்ட்ல போய் பேசிக்குவம்"என்றார் அவர்.
தண்ணீர்பானை சைசுக்கு இருந்தார்.தலையை திரி திரியாக நுரடுல்ஸ் போல திரித்து விட்டிருந்தார்.கண்கள் உள்ளே கிடந்தன.மீசைக்கு கறுப்பாக நெரோலாக்ஸ் டிஸ்டம்பர் அடித்திருந்தார்.
அப்புறம் அவருடன் வந்த நபருடன் நாங்கள் ரிசார்ட்டுக்குச் சென்றௌம்.
திண்டுக்கல் சாலையில் மொட்டை வெய்யிலில் ஏது ரிசார்ட்.அது ஏதோ ஒரு தம்மாத்துரண்டு மோட்டல்.அதைத்தான் அவர் ரிசார்ட் என்றிருக்கிறார்.அவரது அறை மாடியில் இருந்தது.
உள்ளே எம்ஜிஆர் போல கர்லாக் கட்டை எல்லாம் கட்டிலுக்கு கீழே வைத்திருந்தார்.ஆனால் இவர் உடற்பயிற்சி எல்லாம் செய்பவர் போல தெரியவில்லை.அவரது ஆர்ம்ஸ் கொழகொழவென்று யானை மிதித்த சாணி போல இருந்தது.
"அப்புறம்?"என்றார்.
"சொல்லுங்க"என்றேன்.
"படம் பெரிய படம்.பிரம்மாண்டமா பண்ணலாம்தான்.ஆனா கண்ணு பட்ரும்.அதனால அடக்கமா பண்றேன்.படத்துல சுத்திலும் கிராமம்.ஹீரோயின் புதுசு.நான் அவளுக்கு மாமா"என்றார்.
திடுக்கென்றது.
"அட முறைமாமன்பா.இதோ இவருதான் தயாரிப்பாளர்.இவர் படத்துல ஹீரோயினோட தாய்மாமனா வராரு.என்னொட கெட்டப் பார்த்திங்கன்னா அசந்துருவிங்க.இன்னொரு ராஜ்கிரண்னு தினமலரும் தமிழ் இந்துவூம் நெட்ல மாத்தி மாத்தி எழுதப்போறானுங்க"என்றார்.
இன்னொரு ராஜ்கிரணா?
ஏற்கனவே இதைப்பற்றி செங்கல்பட்டில் ராஜ்கிரண் என்று கேபிள் சங்கர் வேறு எழுதியிருக்கிறாரே என்று உள்மனம் எக்சிட் கதவை நோக்கி கையைக் காட்டியது.எஸ் ஆகி விடலாமா?
ஹீரோயினை போஸ்டரில் டிரெஸ்டு சிக்கன் ஆக்கியிருந்தார்.அதாவது உரித்திருந்தார் இயக்குநர் கம் ஹீரோ.
"கதை சொல்லவா"என்றார் தயாரிப்பாளர்.அந்த அறையில் இன்னும் ஆட்கள் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.அந்த ஆட்கள் 'கதை' என்றதும் கைலியை உயர்த்திக் கட்டிக் கொண்டு எஸ் ஆகிக் கொண்டிருந்தார்கள்.
"கேளுங்க.உணர்ச்சிப்போராட்டமா இருக்கும்"என்று தயாரிப்பாளர் ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட அறுபதுகளில் வந்த இருபது படங்களில் கதையை மிக்சியில் போட்டு அடித்த மாதிரி கடைந்து கொடுத்தார்.
"நல்லாருக்கு"என்றேன்.
"ஆனா நான் எடுக்கப்போறது இந்த கதை கிடையாது"
"என்னது?"
"யாருமே எதிர்பார்க்காத ப்ளாட்.கதாநாயகிக்கு நாலு மாமன்கள்.நாலு மாமன்களுக்கும் போட்டி.நாலு மாமனையூம் நான் துவம்சம் பண்றேன்.அப்ப தாய்மாமன் வந்து ஒரு டயலாக் சொல்லுவாரு பாருங்க.அப்படியே கோழி கூவூதுல பிரபு மிரண்டு மிலிட்டரிக்கு போற மாதிரி நான் வெளிநாட்டுல போய் ஸ்டைலிஷா திரும்பி வருவேன்.அப்ப கதாநாயகிக்கு வயல்வரப்புல முள்ளுக்குத்தி கீழே சாஞ்சதும் தண்ணியில விழுவா பாருங்க.போன ஜென்மத்து ஞாபகமும் போன ஜென்மத்து மாமனும் ஞாபகம் வந்திரும்" அவர் சொல்லச் சொல்ல எனக்கே போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வந்து விடும் போலிருந்தது.
ஒரு வழியாக கதை சமாச்சாரம் முடிந்தது.
அடுத்தது நடிப்புப் படலாம்.நடிக்க விரும்புபவர்களையூம் இந்தாள் வரச்சொல்லியிருக்கிறார்.ஒவ்வொரு ஆட்களாக வருவார்கள்.இவர் அவர்களை நடித்துக் காட்டச் சொல்லி விட்டு கட்டிலில் படுத்து துரங்கி விடுவார்.அப்புறம் அடுத்த ஆள்.ஒவ்வொரு ஆள் வரும்போதும் இந்தாள் படுத்து கண்களை மூடிக் கொண்டு விடுகிறார்.இதுதான் ஏன் என்று இன்னமும் புரியவில்லை.
அப்புறம் நடிப்பது எப்படி என்று ஒரு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.
அடுத்த வாரம் சென்னையில் நடிக்க வருபவர்களுக்கு முதலில் ரிட்டர்ன் டெஸ்ட் குருப் டிஸ்கஷன் அதன்பின் இன்டர்வ்யூ என்று கார்ப்பரேட் ரேஞ்சிற்கு பில்டப் கொடுத்தார்.
கடைசியாக நான் இந்த டீமில் இடம் பெறுவது என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.மாமன் படத்திற்கெல்லாம் காசை கொண்டு போய் கொட்டினால் என் மாமன் என்னை முறைத்தாலும் முறைப்பார்.
அப்புறம் சொல்லவில்லையே.
இந்த கதாநாயக-இயக்குநர் யார் தெரியூமா?
ஒரு பிரம்மாண்ட இயக்குநரிடம் நாலு படங்கள் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்தவராம்.என் கேள்வியூம் சந்தேகமும் இதுதான்.
இது போன்றவர்களை வைத்து எப்படி சமாளித்தார் பிரம்மாண்ட இயக்குநர்.நல்லவேளை.தப்பித்தார்.
ConversionConversion EmoticonEmoticon