எனது முப்பத்திநான்கு வருட டிரேடிங் அனுபவத்தையூம் தேசிய பங்குச்சந்தையில் எஃப்அன்ட்ஓ செக்மன்ட் துவங்கிய தினத்திலிருந்தே அதாவது நிஃப்டி என்ற ஒன்று உருவான தினத்திலிருந்தே அதன் நகர்வையூம் அதன் ஆச்சர்யகரமான ஏற்ற இறக்கத்தையூம் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.பல்வேறு விதமான அனுபவங்கள்.சறுக்கல்கள்.விரட்டிப் பிடித்தல்கள்.ஜாக்பாட்கள்.டபுள்மணி லாபங்கள் என்று வினோதமாக ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.
அவற்றில் சலித்துச் சலித்து தேர்ந்தெடுத்து மற்றவர்கள் ஆஃப்ஷன் டிரேடிங்கை எப்படிப் பார்க்கிறார்கள்.பொதுவாக ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு என்னென்ன வெற்றிகரமான ஸ்ட்ராட்டஜிகளைப் பயன்படுத்தலாம்.அவற்றை எப்படி பயன்படுத்துகிறார்கள்.நம்முடைய புல்ஸ்ஸ்ட்ரீட்டில் பயன்படுத்தும் வெற்றிகரமான சில ஸ்ட்ராட்டஜிகளை மட்டும்(நமது அனைத்து ஸ்ட்ராட்டஜிகளையூம் புத்தகத்தில் கொடுத்து விட்டால் அப்புறம் பயிற்சி வகுப்பிற்கு வரமாட்டார்கள் என்பதால் சில ஸ்ட்ராட்டஜிகளை மட்டும் இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறௌம்)
ஆக மொத்தமாகப் பார்த்தால் நிறைய ஸ்ட்ராட்டஜிகள் இந்த புத்தகத்தில் இடம் பெறுகின்றன.
இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில்தான் தயார் செய்திருக்கிறௌம்.ஏனென்றால் ஏற்கனவே தமிழில் ஒரு ஆஃப்ஷன் புத்தகத்தை வெளியிட்டு அதுவூம் சக்கை போடு போட்டது என்பதால் இது ஆங்கிலத்தில் வரும் புத்தகமாக இருக்கிறது.
இந்த ஆங்கில ஆஃப்ஷன் புத்தகத்தை வாசித்தால் இனி நீங்கள் எந்த ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கும் செமினார்களுக்கும் செல்ல வேண்டியதில்லை.
இந்த புத்தகத்தை கொண்டு வருவதற்குள் படாத பாடு பட்டு விட்டோம்.புத்தத்தை ஆய்வூ செய்து நுணுக்கங்களை இணைத்து எழுதிக் கொடுத்தால் பிரசுரித்து தருகிறேன் என்ற பதிப்பாளர் ஒரு மாதத்தில் தருவதாக உறுதியளித்தார்.
அதனால் இந்த புத்தகத்திற்கு முன்பதிவூ செய்பவர்களிடம் சிறப்பு சலுகை என்று ஒரு குறைக்கப்பட்ட விலையை வாங்கியிருந்தோம்.நமது தளத்தின் வாசகர்களும் முகப்புத்தக அன்பர்களும் ஆர்வமாக முன் பதிவூ செய்து சலுகை விலையையூம் அனுப்பி விட்டார்கள்.
ஆனால் அதன்பிறகும் பதிப்பாளர் தாமதம் செய்வதன் காரணம் புரியாமல் தவித்தோம்.மொத்தம் 500 புத்தகங்கள் மட்டும்தான் வெளியிடுவதாக ஏற்பாடு.ஆனால் பதிப்பாளர் மொத்தமாக 300 புத்தகங்களுக்கான முழு(அச்சுக்கான தொகையையூம்) கேஷாக கொடுத்தாக வேண்டுமென்று சொல்லி விட்டார்.
நம்மிடம் இருக்கிற முன்பதிவூ ஆர்டர்கள் அப்படி ஒன்றும் பெரிய எண்ணிக்கையில் இல்லை.முன்பதிவில் கிடைத்த பணம் நம்முடைய சொந்தப் பணம் என்று எல்லாவற்றையூம் போட்டால் கூட பாதியில் சிக்கிக் கொண்ட மாதிரி ஆகி விட்டது.
இதற்கிடையே வங்கிக் கடனுக்கு முயற்சி செய்தால் அதுவூம் சரிப்பட்டு வரவில்லை.நாம் செய்திருந்த தவறு என்ன என்று யோசித்துப் பார்த்தால் ஒரு வேகத்திலும் ஆர்வத்திலும் உணர்ச்சி வசப்பட்டு நாலைந்து மாதமாக மொத்தமாக வந்திருந்த வருமானத்தையூம் நம்முடைய சேமிப்பையூம் சென்னை வெள்ளம் வந்திருந்த சமயத்தில் உணர்ச்சி வேகத்தில் நன்கொடையாகக் கொடுத்து விட்டோம்.அதனை தொடர்ந்து வந்த அடுத்த மாதத்தில நமக்கே பேரிழப்பு.
உதவி செய்ததுதான் நமக்கே ஆப்பு வைத்தது போலாகி விட்டது.நல்ல காரியத்திற்கு அதுவூம் வெள்ள சேதத்திற்குத்தானே உதவி செய்திருந்தோம் என்று மனதை தேற்றிக் கொள்கிறௌம்.இந்த சிக்கலிலிருந்து மீண்டு வந்து தற்போது வேறொரு வகையில் புத்தகத்தை ரெடி செய்து விட்டோம்.
இந்த ஆங்கில ஆஃப்ஷன் புத்தகம் இந்த மாதக்கடைசியில் வெளி வருகிறது.
புத்தகத்திற்கான விலை:ரூ 2555 ஆகும்.
(ஒரு முறை ஒரு காரைக்குடி அன்பர் சொன்னார்.இந்த பக்கத்திற்கு இத்தனை பெரிய விலையா என்று.உயிர் காக்கும் காப்ஸ்யூல் மாத்திரையை எடை போட்டா விற்க முடியூம் என்று அவருக்கு விளக்க வேண்டி வந்தது)
பெரிய எண்ணிக்கையில் எல்லாம் புத்தகங்களை தற்போதைய வாசிப்பு குறைந்து விட்ட சூழலில் விற்க முடியாது.வெறும் 100 புத்தகங்களை விற்க வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு வருடம் வரையில் கூட ஆகும்.100 புத்தகங்களை விற்க வேண்டுமென்றால் 500 புத்தகங்களை அச்சிட வேண்டும்.மீதமுள்ள 400 புத்தகங்களில் ஒரு 100 புத்தகம் விற்க அடுத்த ஆண்டு முழுக்க ஆகும்.அதன்பிறகு இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் மீதமுள்ள புத்தகங்களை விற்க முடியூமா என்று பார்க்க வேண்டும்.இதுதான் இன்றைய வாசிப்பின் அவல நிலை.
நமது ஆஃப்ஷன் புத்தகத்தில் டிரேடிங் ட்ரிக்குகளை கொடுப்பதால் பெரிய அளவில் விற்குமென எண்ண வேண்டாம்.நம்ம ஆட்கள் எல்லாம் எப்படி என்றால் ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் சிறுகச் சிறு ஐநுரறும் ஆயிரமுமாக நஷ்டத்தில் பணத்தை விடுவார்களே தவிர புத்தகம் வாங்கிப் படிக்க செலவூ செய்ய மாட்டார்கள்.ஒரு வருடத்தில் இவர்கள் நஷ்டத்தில் விடும் பணம் எப்படியூம் முப்பதாயிரம் ரூபாயாக இருக்கும்.ஆனால் இப்படி ஒரு தொகை கொடுத்து புத்தகம் வாங்கிப் படித்து லாபத்தில் டிரேடிங் செய்ய மனம் வராது.
சரிபோகட்டும்.
நீங்கள் லாபத்தில் ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய வேண்டுமானால் இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்த புத்தகம் ஸ்ட்ராட்டஜி சம்பந்தப்பட்ட வெற்றிக்கான புத்தகம் என்பதால் இந்த விலை வைக்க வேண்டியிருக்கிறது.வடநாட்டில் சிலர் புத்தகத்தை இருபதாயிரம் ரூபாய்க்கெல்லாம் விற்கிறார்கள்.
பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தக விலையை செலுத்தி விட்டு இந்த மாத இறுதி வரை காத்திருங்கள்.நிச்சயமாக இந்த மாத இறுதிக்குள் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
வங்கிக் கணக்கில் ரூ 2555ஐ செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டால் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்
வங்கிக் கணக்கு விபரம்:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount:Rs 2555/-only
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon