எல்லோர் முன்பும் ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதுண்டு.அதற்கான பதிலை மிகச் சரியாக சரியான சந்தர்ப்பத்தில் விரைவாக எடுப்பவர்கள்தான் முன்னேறுகிறார்கள்.விரைவாக எடுக்காவிட்டாலும் தாமதம் செய்து விட்டாலும் எடுத்த முடிவூ சரியானதாக இருந்து விட்டால் அது தரும் ரிசல்ட் அமோகமாக இருந்துத விடக் கூடும்.
நான் கிங் மேக்கர் அல்ல.கிங் என்றிருக்கிறார் கேப்டன்.
இந்த முடிவூம் இது கொடுக்கப்போகிற விளைவூம் அரசியலில் கேப்டன் விஜயகாந்திற்கு என்னவாக வேண்டுனாலும் இருந்து விட்டுப் போகட்டும்.இதில் முதலீட்டாளராக உங்களுக்கு ஒரு ரகசிய பாடம் இருக்கிறது.
எந்த பங்கில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அது என்ன செக்டார் என்று பார்க்க வேண்டும்.அந்த செக்டாரில் ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்தால் அது சாதாரண அவூட்லுக்கில் செய்யப்பட்ட முதலீடு.அதையே அந்த செக்டாரில் முதல் இடத்தில் உள்ள பங்கில் முதலீடு செய்திருந்தால் அது டாப்லெவல் முதலீடாக இருக்கும்.அதாவது கிங் ஆஃப் இன்வஸ்ட்மென்ட்டாக இருந்திருக்கும்.
இதைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
சில பல ஆண்டுகளுக்கு முன்னார் நம்முடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு சத்யம் கம்ப்யூட்டரை பரிந்துரை செய்திருந்தோம்.அப்போது அதன் விலை ரூ 50 என்ற அளவில்(முகமதிப்பு அப்போது ரூ 10) பின்னர் இரு முறை போனஸ் வழங்கப்பட்டும் உரிமைப் பங்குகள் வழங்கப்பட்டும் அதன்பின்னர் அதன் முகமதிப்பு ரூ10லிருந்து ரூ 2 ஆக பிரிக்கப்பட்டும் கொண்டாட்ட கோலாகல தீபாவளியே இந்த பங்கு நடத்தியபோது ஒரு பங்கு இருபது பங்காகப் பிரிந்தது.
முதலில் அந்த அன்பர் 100 பங்குகளை ரூ 50 என்ற விலையில் வாங்கியதற்கான முதலீடு ரூ 5000 வரைதான் ஆனது.
ஆனால் அதன்பின் அந்த பங்குகள் ஒரு பங்கு 20 பங்காக குட்டிப்போட்டுக்கொண்டே வந்தபோது அதன் ஒரு பங்கின் உச்ச விலை
ரூ 540 ஆக இருந்தது.
அதாவது 100 பங்குகள் 2000 பங்குகளாக மாறியது.
2000 பங்குகளின் விலை ஒரு பங்கு ரூ 540 வீதம் ஆனபோது ரூ 5000 என்ற முதலீட்டு மதிப்பு அப்போது ரூ 10.80 லட்சமாக உயர்ந்து விட்டது.
இன்னொரு அன்பர் (ஒரு பிரபல இன்ஜினியரிங் கல்லுரரி தாளாளர் இவர்) ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ 50 என்ற விலையில் வாங்கிய சத்யம் கம்ப்யூட்டர் பங்குகளை (2000 பங்குகளில் செய்த ஒரு லட்ச ரூபாய் முதலீடு ) அதன்பின்னர் 2000 பங்குகள் 40000 பங்குகளாக வளர்ந்து அதன் மதிப்பு ரூ 540க்கு வந்தபோது ஒரு லட்ச ரூபாய் முதலீடு என்பது அப்போது ரூ 2.16 கோடிகளாக உயர்ந்து விட இவரையூம் எச்சரித்தபோது பங்குகளை சந்தோஷமாக விற்று திருச்சியில் பெரிய பங்களா கட்டி குடியேறி விட்டார்.
ஆனால் சின்னச் சின்ன முதலீட்டாளர்கள் விற்காமல் இன்னும் போகும் இன்னும் மேலே போகும் என்று காத்திருந்தபோது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி சத்யம் கம்ப்யூட்டர் மோசடி அம்பலமானபோது இந்த பங்கில் விலை சரசரவென சரிந்து போய் ரூ 8க்கு (ஆம்.வெறும் எட்டு ரூபாய்க்குத்தான்) வந்து முதலீட்டாளர்களை கிறுகிறுக்க வைத்தது.
அதற்கு முன்னதாக பலமுறை சத்யம் கம்ப்யூட்டரை அடைகாத்து வந்த பேராசைக்கார முதலீட்டாளர்களை போதும் இந்த பங்கு.இதே துறையில் முதல் இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் மாதிரியான பங்குகளுக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கேட்டால்தானே?
அதனால்தான் சொல்கிறேன்.
கிங் மேக்கரை விட கிங் பெட்டர்.
ஒரு செக்டாரில் உள்ள பரபரக்கும் பங்கை விட அந்த செக்டாரில் முதல் இடத்தில் உள்ள பங்கு இன்னும் பெட்டர்.
உங்களது முதலீட்டிற்காக ஒவ்வொரு செக்டாரிலும் முதல் இடத்தில் (இந்த முதல் இடம் என்பது நமது கணிப்பு.நிதிஆதார ரீதியாக கணிக்கப்பட்ட கணிப்பு அல்ல) உள்ள பங்குகளைக் கொடுத்திருக்கிறௌம்.
இந்த பங்குகளின் என்ட்ரி எக்சிட் போன்ற துல்லியமான விபரங்களை இங்கே வெளியிட இயலாது.அவற்றை நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் வாரஇதழில் மட்டுமே.
இதே பங்குகள் பட்டியல்:
1.போக்குவரத்து வாகனம்: அஷோக்லைலன்ட்
2.பாசஞ்சர் கார்கள்: மாருதி
3.இரு சக்கர வாகனம்: எய்ஷர்மோட்டார்ஸ்
4.விமானசேவை: ஜெட்ஏர்வேஸ்
5.பொதுத்துறை வங்கி: எஸ்பிஐ
6.தனியார் வங்கி: ஐசிஐசிஐ வங்கி
7.கேபிடல் குட்ஸ்: பிஎச்இஎல்
8.சிமென்ட்:அல்ட்ராடெக்
9.எஃப்எம்சிஜி: ஹிந்த்யூனிலீவர்
10.எண்ணை எரிவாயூ:ஓஎன்ஜிசி
11.மருத்துவம்:அப்பல்லோ ஹாஸ்பிடல்
12.இன்ஃப்ரா: அதானிபோர்ட்ஸ்
13.தொலைதொடர்பு: பார்திஏர்டெல்
14.சாப்ட்ஐவேர்: இன்ஃபோசிஸ்
15.பெயின்ட்: ஏஷியன் பெயின்ட்ஸ்
16.ஃபார்மா: டாக்டர்ரெட்டி
17.ரியல்டி: டிஎல்எஃப்
18.உலோகம்:ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
19.டெக்ஸ்டைல்:ஆதித்யாபிர்லா நுவோ
20.டயர்கள்:அப்பல்லோ டயர்ஸ்
மேற்கண்ட பங்குகளில் எப்போது எப்படி எந்த விலையில் முதலீடு செய்து பராமரிக்க வேண்டும்.கூடுதல் முதலீடுகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்.எப்போது லாபத்தை புக் செய்து வெளிவர வேண்டுமென்ற அப்டேட்டுகள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழின் வாசகர்களுக்காக அவ்வப்போது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டும் வெளியிடப்படும்.
ConversionConversion EmoticonEmoticon