"உன்னைத் தொட்ட காற்று வந்து..."
இது முன்னர் நடந்த கதைதான்.ஆனாலும் இப்போதும் இந்த கதை நடப்பு சந்தை செயல்பாட்டிற்கு பொருத்தமாக இருக்கிறது.இதை இரண்டு விதங்களால் அணுகலாம்.முதலில் சாதாரணமாக பார்ப்போம்.அதையோ ஜோதிடரீதியாக எப்படி அணுகுவதென்றும் பார்ப்போம்.
ஷேர் டிரேடிங் ஹாலிற்கு எப்போது ஜாக் வந்தாலும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.உயரமாக டிஷர்ட்டும் காவி நிறத்தில் வேட்டியூம் அணிந்திருப்பார்.அது போல பலவண்ண நிறத்தில் டிஷர்ட்டும் காவி வேட்டியூம் அணிந்த ஒரே ஆசாமி அவராகத்தான் இருக்கும்.சின்னதாக ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருப்பார்.ஃபேஷனுக்காக கழுத்தில் ருத்ராட்சம் தொங்கும்.மற்றபடி சாமியெல்லாம் கும்பிட மாட்டார்.
அப்புறம் ஏன் காவி வேட்டி என்றால்-
"அதெல்லாம் அமிதாப் காலத்துல ஜீனத்அமன் மேல சத்தியமா காவி வேஷ்டிதான்னு முடிவாயிடுச்சு. சச் எ லேடி தெரியூமா. ஐ மிஸ்டு ஹர்" என்பார்.
அவருக்கு ஜாக் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.அவரது நிஜப்பெயரைச் சொல்லி யாரும் அழைப்பது இல்லை.ஜாக் ஆஃப் ஆல் டிரேடுஸ் என்றொரு சொற்றொடர் ஆங்கிலத்தில் உண்டு.எல்லா தொழிலும் செய்பவர்.ஆனால் எதிலும் நிபுணத்துவம் இல்லாதவர் என்று அர்த்தம்.
நம் ஜாக்கும் டைரக்டர் மிஷ்கின் போல 73 வகையான தொழில்களை செய்திருக்கிறார்.நல்லவேளையாக சினிமா படம் எடுக்கவில்லை.இல்லையென்றால் படத்தின் ஓப்பனிங் ஷாட்டிலேயே நள்ளிரவூ இருட்டில் காமரா ஓடிக்கொண்டிருக்க அத்துடன் ஒரு போலீஸ் ஸ்டேஷன் மருத்துவமனை என்று காண்பித்து விட்டு மஞ்ச சேலை அணிந்த யாராவது ஒரு யூவதியை ஆட விட்டிருந்திருப்பார் நம்ம ஜாக்.ஒரு மிஷ்கின் போதும் என்று காலம் அவரை ஷேர் மார்க்கெட் பக்கம் திருப்பிவிட்டிருந்தது.
ஜாக் எப்போது வந்தாலும் ஒரே ஒரு பாடலைத்தான் பாடிக்கொண்டே வருவார்.
"உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது..."
இதற்கு என்ன அர்த்தம் என்று எல்லோருக்கும் முதலில் புரியாமல் இருந்தது.அப்புறம்தான் அவர் பாட்டுக்கு அர்த்தம் புரிந்தது.
டிரேடிங் ஹாலில் முன்வரிசையில் உட்காருபவர்கள்தான் அதிகமாக ஆர்வக்கோளாறில் ஆர்டர் போட்டு நஷ்டம்அடைவார்கள் என்பதால் நம்ம ஜாக் எப்போதும் நடுவரிசையில்தான் உட்காருவார்.உட்காரும்போதே அவருக்கு இடது பக்கமாக உட்கார்ந்திருப்பவர்களை மனதில் குறித்துக் கொள்வார்.
அவருக்கு இடது பக்கமாக உட்கார்ந்திருப்பவர்களின் ஆர்டரையே கவனித்துக் கொண்டிருப்பார்.அவர் ஆர்டர் ஏதும் போட மாட்டார்.ஆனால் பாடலை மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.ஒரு வேளை பேக் ஆஃபீஸ் பெண்கள் யாரையூம் நம்ம ஜாக் சைட் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரொம்ப நாட்களாக எல்லோரது மனதிலும் இருந்தது.அதையூம் பேக் ஆஃபீஸ் சங்கீதா ஒருநாள் உடைத்தாள்.
"விஜய் சார்.இவர் அந்தக்காலத்து பாலச்சந்தர் படத்து சிவக்குமார் மாதிரி.இவர் யாரையூம் சைட் அடிக்க மாட்டார்.இவரைத்தான் நம்ம பொண்ணுங்க சைட் அடிக்கறாங்க.என்ன ஒண்ணு காவி வேட்டியூம் டி ஷர்ட்டையூம் பார்த்தா குண்டு வைச்சிட்டேன்னு மோகன்லாலை சதாய்க்கற கமல்ஹாசன் மாதிரி அசட்டுத்தனமாக தெரியறார்"
"போச்சுரா..இன்னிக்கும் மளமளன்னு போட்ட லாங் ஆர்டர் தெறிச்சிருச்சு.ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகிடுச்சு.."என்று நம்ம ஜாக்கிற்கு இடது பக்கமாக உட்கார்ந்திருக்கும் அன்பர்கள் மூன்று பேரும் சொல்ல இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு திடீரென முரட்டுத்தனமாக ஃபேன்டசி படம் எடுக்கிற ரா.பார்த்திபன் மாதிரி(ரா.பார்த்திபனா இல்லே ராதாகிருஷ்ணன் பார்த்திபனா?) ஆர்டர் போட முன்வருவார்.
முதல் நபர் ஜேபி அசோசியேட்சில் லாங் போய் விழுந்திருப்பார்.
இரண்டாம் நபர் டிஎல்எஃப்பில் லாங் போய் நஷ்டமாகியிருந்திருப்பார்.
மூன்றாம் நபர் இன்ஃபோசிஸில் லாங்கில் அடிபட்டிருந்திருப்பார்.
இப்போது ஜாக் சொல்வார் பாருங்கள்.அசத்தலாக இருக்கும்.
ஜேபி அசோசியேட்ஸ் ரியல்டி செக்டார்.இதே செக்டாரில் இருக்கும் அடுத்த ஏதாவது ஒரு பங்கில் ஷாரட்செல்லிங்கிற்கு அப்போதைய விலைக்கேற்ப ஒரு ஆர்டரை சொல்ல ஷார்ட் அடிக்கச் சொல்வார்.
இரண்டாம் நபரும் ரியல்டி.அதனால் இன்னொரு ரியல்டி ஸ்கிரிப்பில் ஷார்ட் அடிக்கச் சொல்வார்.
மூன்றாம் நபர் ஆடியது ஐடி.அதனால் இன்ஃபோசிஸிற்கு அடுத்த நிலையிலுள்ள இன்னொரு பங்கில் ஷார்ட் செல்லிங் ஆர்டரைப் போடச் சொல்வார்.
அவர் போடச் சொன்ன மூன்று ஆர்டர்களுமே அம்சமாக டார்கெட்டை அச்சீவ் செய்திருக்கும்.பத்தே நிமிடம்தான்.அதற்குள் டிரேடிங்கை முடித்து விட்டு "உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ" என்று ஹம்மிங் செய்வார்.
என்னாச்சர்யம் என்று அத்தனை பேரும் அதிசயிக்கும்போதுதான் இந்த டிரேடிங் லாஜிக்கை சொல்வார் நம்ம ஜாக்.
அந்த லாஜிக் இதுதான்.
நானும் இந்த லாஜிக்கை புரிந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் அவர் வாயிலிருந்து உண்மை வரட்டுமென்று பேசாமல் இருச்தேன்.
"ஜாக் சார்.பசங்க பிஸ்ஆஃப் டெக்னிக்தானே"என்றேன்
"அதெப்படி விஜய் சார் கரெக்ட்டா கண்டுபிடிக்கறிங்க"என்று ஆர்வத்துடன் பேச முற்படுவார்.
ஜாக் டெக்னிக்கை நான் ஏன் பசங்க பிஸ்ஆஃப் என்று குறிப்பிட்டேன் தெரியூமா?
நாலைந்து சிறுவர்கள் ஒன்றாக நடந்து சென்று கொண்டே இருக்கும்போது அவர்களில் யாராவது ஒருவனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டு தனியே ஒதுங்குவான்.அதுவரை சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணமே ஏற்படாத மற்ற சிறுவர்களுக்கும் சட்டென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டு விடும்.நீங்கள் கூட இந்த அனுபவத்தைப்பெற்றிருக்கிலாம்.
இப்போது ஒவர் டு ஜாக்!
"எனது இடது பக்கம் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்ப்பேன்.அவர்களில் யார் என்ன ஆர்டர் போட்டிருந்தாலும் அந்த மூன்று பேருமே ஒரே மாதிரி லாங் அல்லது ஷார்ட்டில் இருக்க வேண்டும்.வெவ்வேறு ஸ்கிரிப்பில் இருந்தாலும் பரவாயில்லை.ஒருவருக்கு ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகி மற்ற இருவருக்கும் ஸ்டார்லாஸ் ட்ரிக்கர் ஆகிவிட்டால் அவர்கள் அருகில் அமர்ந்திருக்கும் நானும் அவர்கள் சென்ற திசையிலேயே லாங் ஆர்டர் போட்டால் எனக்கும் ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகும்.அதனால் நான் வேண்டுமென்றே அவர்கள் ஆர்டர் போட்ட செக்டாரில் நான் ஷார்ட் அடிப்பேன்.அதாவது அடுத்த எனக்கும் நடக்கவிருக்கும் விபத்தை தவிர்த்துக் கொள்வேன் எதிர்த்திசையில் செல்வதன் மூலமாக.இதுதான் என் டெக்னிக்.உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது என்ற டெக்னிக்"
"ஒருவர் ஷார்ட் மற்ற இருவரும் லாங் என்று அவர்கள் அமர்ந்திருந்தால்"
"எனக்கு அருகில் இடது பக்கம் உள்ளவரின் ஆர்டருக்கு எதிராகப் போடுவேன்.ஒரு நபர்தான் அருகில் இருக்கிறார் என்பதால் சிறிய அளவில் டார்கெட்டை வைத்துக் கொள்வேன்"
"பிரில்லியன்ட்.இது என்ன சும்மா அடித்து விடுவதா.இட்சினி வேலையா ராதாகிருஷ்ணன் பார்த்திபன் படமெடுக்கிற மாதிரி ஃபிப்டி-ஃபிப்டி இன்ட்யூஷனா?"என்று கேட்பார்கள் பேக் ஆஃபீஸ் பெண்மணிகள்.
இதற்கு நான் சொல்கிறேன் என்று எழுந்தரிப்பேன்.டிரேடர் விண்டோவையூம் டிவியில்(இப்போது இல்லை.அப்போது) சிரித்துக் கொண்டிருக்கும் மிருணாளினி முகர்ஜியையூம் புறக்கணித்து விட்டு அவர்களிடம் கேட்பேன்.
"உங்க மூணுபேர் ஜாகத ராசிக்கட்டத்தையூம் தனித்தனியா சொல்லுங்க"
சொல்வார்கள்.அதை தனித்தனி கட்டங்களாக எழுதுவேன்.
பின் ஒரு பெரிய ராசிக்கட்டம் வரைந்து எந்தெந்த வீடுகளில் அவர்களது ஜாகதங்களில் எந்தெந்த கிரகங்கள் இருந்ததோ அதையெல்லாம் இந்த ஒரே ராசிக்கட்டத்தில் எழுதி அந்த மூன்று ஜாதகத்தையூம ஒரே ஜாதகமாக்கிக அதற்கு அவர்கள் உத்தேசமாக டிரேடிங் ஆரம்பித்த நேரத்தை கணக்கில் கொண்டு பிரசன்ன ஆருடம் பார்த்து அந்த கிரகங்களை (சராசரி ஜாதகக்கட்டத்திலிருந்து) ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுக்கு ஏன் நஷ்டம் வந்தது என்று சொல்லும்போதோ இதே கிரகங்களை ரிவர்சில் மாற்றி வைத்தால்(அப்பிரதட்சணமாக) பலன் மாறி லாபம் வருகிறது என்பதால்தான்-
நம்ம ஜாக் தெரிந்தோ தெரியாமலோ எதிர்திசையில் எடுத்துக் கொண்டார் என்று சொன்னதும் ஆர்வமாக கேட்பார்கள்.என்ன ஒன்று நம்ம ஜாக் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் அவரது ஜாகதம் கிடைக்காது.கிடைத்திருந்தால் இன்னும் ஒப்பிட்டுப் பார்த்திருந்திருக்கலாம்.
அதன்பின் ஒவ்வொருவருமே ஜாக்கின் இடது பக்கம் அமர்வதற்கு லேசாக தயங்குவார்கள்.ஆனால் ஜாக் மட்டும் அதே புன்னகை மாறாத முகத்துடன் ஹம்மிங் செய்து கொண்டே வருவார்-
"உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது"
ConversionConversion EmoticonEmoticon