ஆனால் நான் ஜோதிடத்தை ஒரு இன்ஜினியரிங் என்றுதான் குறிப்பிடுவேன்.இன்ஜினியரிங் படித்தாலோ என்னவோ என்னைப் பொறுத்தவரை ஜோதிடத்தை ஒரு பொறியியலாகவே பார்க்கத் தோன்றுகிறது.
கர்மா என்ற ஒன்றைக் கண்டு அனைவரும் அலறுபவர்களாகவே இருக்கிறார்கள்.மேலும் முன்ஜென்ம வினை என்பதும் அதனால் ஏற்படும் தோஷங்களில் பல தோஷங்கள் பரிகாரத்திற்கு உட்பட்ட சிறிய தோஷங்கள் என்றும் சில வகை தோஷங்கள் பரகாரத்திற்கு உட்பட்டவயே என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
இதில் குழந்தை இல்லாதிருப்பது.நீண்ட நாட்பட்ட நோய்கள்.தொடர்ந்த வியாபார நஷ்டம்.பங்குச்சந்தையில் திரும்த் திரும்ப தோல்வி பணஇழப்பு போன்றவைகளை பரிகாரத்திற்கு உட்படாத தோஷங்கள் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மையில் யோசித்துப் பார்த்தால் இறைவன் என்பவன் முதலில் கருணையே வடிவானவன் என்றுதான் உலகிலுள்ள அனைத்து மதங்களும் சொல்கின்றன.அப்படியானால் கருணையே வடிவான இறைவன் எப்படி ஒரு மனிதன் முற்பிறவியில் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களுக்காக அப்போதே அறிவூரை சொல்லி திருத்தாமல் அடுத்த பிறவி வரை காத்திருந்து அந்த மனிதனை எப்படி கருணையே உருவான இறைவன் தண்டிப்பான்.ஆக இறைவன் ஒருவனை தண்டிப்பான் கஷ்டப்படுத்துவான் என்பதே தவறான கருத்து.
மேலும் வெறும் நாமசங்கீர்த்தனத்திற்கு மட்டுமே மிகப்பெரிய ஹோமங்கள் யாகங்கள் செய்வதைக் காட்டிலும் அதிக சக்தி உள்ளது என்றம் ராம..ராம.. என்று சொல்லிக் கொண்டிருந்தாலே எந்த தோஷமும் பாவமும் விலகி விடும் என்றால் எப்படி சிலவகை தோஷங்கள் மட்டும் பரிகாரத்திற்கு உட்படாததாக இருக்கும்.
எனவே யாராவது சில தோஷங்கள் பரிகாரத்திற்கு உட்படாதவை.கங்கையில் சென்று முழுகி எழுந்தாலும் கூட சரியாகாது என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம்.
மீண்டும் ஒரு பிறவியை இறைவன் கொடுத்திருப்பதே முற்பிறவியில் செய்வத பாவங்களை ஜோதிடத்தின் வழியாகவூம் இறைவழிபாட்டின் வழியாகவூம் திருத்திக் கொண்டு இந்த பிறவியில் கிடைத்த வாழ்க்கையை முழுமையாகவூம் இனிமையாகவூம் அனுபவி;ப்பதற்கே என்பதை புரந்து கொள்ளுங்கள்.
எனவே எந்த தோஷமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு பரிகாரம் உண்டு.அதை கண்டறிந்து கொடுப்பதில்தான் இருக்கிறது.நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருக்கிறது.திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.குழந்தை பிறப்பது தள்ளிப்போகிறது.ஷேர் டிரேடிங்கில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் வருகிறது.என்ன தொழில் செய்தாலும் இரண்டு ஆண்டுகள் ஓஹோ என்று நடக்கிறது.அதன்பின் என்ன காரணம் என்று தெரியாமலே நொடித்துப் போய் விடுகிறது.வீடு கட்டுவதில் பிரச்சனை இருக்கிறது என்பது போன்ற அனைத்துமே பரிகாரத்திற்கு உட்பட்டவைதான்.
நமது தளத்தின் வாயிலாக என்னிடம் வரும் அன்பர்கள் அனைவரும் நான் கொடுக்கும் பரிகாரத்தைப் பயன்படுத்தி நலமாக இருக்கிறார்கள்.
பெருமைக்காகச் சொல்லவில்லை.மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு அன்பர் சென்னையிலிருந்து ஜாதகபலனுக்காக தொடர்பு கொண்டார்.அவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தார்.திடிரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.அதாவது வேலை போய் விட்டது.நம்மிடம் ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரத்திற்காக அணுகியிருந்தார்.
சில பரிகாரங்கள் (செலவில்லாத சூட்சுமப்பரிகாரங்கள்) கொடுத்திருந்தேன்.அவற்றை அவர் செய்ய ஆரம்பித்த ஒரே மாதத்தில் இரண்டு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் இருந்து அவருக்கு மீண்டும் வேலைக்கான அழைப்பு வந்து விட மறுபடி சென்னையிலேயே ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டதாய் மிகவூம் மகிழ்வூடன் மின்னஞ்சல் செய்திருந்தார்.
ஒருவருக்கு வேலை கிடைக்காமல் இருப்பதை விட நல்ல வேலை கிடைத்து அது பாதியில் கையை விட்டுப் போய் விடுவதுதான் மிகவூம் வேதனையான விஷயம்.திரும்பவூம் அவருக்கு வேலை கிடைத்ததில் கிரகங்களின் ஒத்துழைப்பும் ஒரு சரியான பொருத்தமான பரிகாரத்தை எடுத்துக் கொடுத்ததுத மட்டும்தான் எனது வேலை.அவருக்கு வேலை திரும்பவூம் கிடைத்ததற்கு காரணம் அந்த பரிகாரம்தான்.
அதனால்தான் சொல்கிறேன்.
எல்லா தோஷங்களும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே என்பதால் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.இந்த பிறவியூம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாகவே எண்ணுங்கள்.
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரகாரங்கள் பெற விரும்புவோருக்கான விபரங்கள் நமது தளத்தின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றை படித்துப் பாருங்கள்.தேவையெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon