நிச்சயமாக யோகா தியானம் ஆகிய இரண்டும் ஷேர் டிரேடர்களுக்கு உதவூம்.எப்படி உதவூம் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ஏன் ஷேர் டிரேடர்களுக்கு நஷ்டம் வருகிறது என்று பார்ப்போம்.பின்வரும் காரணங்களால்தான் ஷேர் மார்க்கெட்டில் உள்ள முதலீட்டாளர்களுக்கும் தினசரி டிரேடிங் செய்பவர்களுக்கும் நஷ்டம் வருகிறது.
1.ஹோம் வொர்க் செய்யாதது.அதாவது திட்டமிடாதது.
2.வொர்க்கிங் கேபிடல் இதுதான் என்று உறுதி செய்து கொள்ளாதது.
3.அதிக ஆசை.அதாவது பேராசைப்படுவது.
4.பயம்
5.பதட்டமடைவது
6.திடீர் திடீரென்று முடிவூகளை மாற்றிக் கொள்வது
7.திடீரென முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் அப்படியே அரைத்த மாவை அரைப்பது மாதிரி தேமே என்று உட்கார்ந்து கொண்டிருப்பது.
சரி இதற்கு காரணம் என்ன என்று பார்ப்போம்.
உஙூ'களது உடலின் இயக்கம் எப்படியோ நடைபெறுகிறது.உறங்கி விழிக்கிறீர்கள்;.காலைக்கடன்களை முடித்து தயாராகிறீர்கள்.சாப்பிடுகிறீர்கள்.உறங்குகிறிர்கள்;.மறுபடி அதே ரொட்டீன்.இப்படித்தானே போகிறது உங்களது வாழ்க்கை.என்றாவது இந்த செயல்களை நின்று கவனித்திருக்கிறீர்களா?
கடற்கரைக்கு செல்லும்போது எதுவூம் செய்யாமல் நின்று கொண்டோ அமர்ந்து கொண்டோ அந்த கடலலையூம் அந்த கடல் அலைகளையூம் மட்டும் சும்மா வெற்றுப் பார்வையால் பார்த்துக் கொண்டே இருந்து பாருங்கள்.உங்களது மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டு விடும்.
அதே போன்ற ஒரு பார்வையை உள்ளுக்குள் நீங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால் அதுதான் தியானத்தின் முதல்படி.அதே போல யோகா என்பது ஒன்றுமல்ல.உங்களது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ;ஒரு அசைவை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.
நீங்களும் வாழும் வாழ்க்கையில் அதிகபட்டசமா கால்களை மட்டும்தான் அதுவூம் வீட்டுக்குள் சில அடிகள் நடப்பதற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறர்கள்.அதன்பின் நீங்கள் பயன்படுத்துவது விரல்களையூம் கண்களையூம் மட்டும்தான்.லாப்டாப் டேப்லட் மற்றும் மொபைல்களில் பயன்படுத்துவதற்கு.மற்றபடி உங்களது உடலின் எந்த பகுதியையூம் நீங்கள்அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.
பயன்படுத்தாத புத்தகங்கள் செல்லரித்துப் போகும்.பயன்படாத விவசாய நிலம் புல்லரித்துப் போகும்.பயன்படாத உடலின் பாகங்கள் கொழுப்பாலும் பயன்படாத குளுக்கோசாலும் மதமதத்துப் போகும்.அதன் பக்க விளைவால்தான் சோம்பல் வருகிறது.சோம்பல் வந்ததும் புத்தி விழித்துக் கொண்டு பயப்படுகிறது.அந்த பயமே பதட்டமாக வந்து உங்களை எதிலும் தவறாக முடிவெடுக்கத் தோன்றுகிறது.அந்த தவறான முடிவூகளால் ஷேர் டிரேடிங்கிலும் பிசினசிலும் நஷ்டம் வந்து சேர்கிறது.
இப்போது இதை எப்படி சரி செய்து கொள்வது என்று பார்ப்போம்.இரண்டு வித சூட்சும யோகா டெக்னிக்கை கற்றுத் தருகிறேன்.செய்து பாருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.தனியாக ஓரிடத்தில் போய் அமர்ந்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை.இதற்கென்று விரிப்பு விரித்து பத்மாசனத்திலோ வஜ்ராசனத்திலோ அமர்ந்தாக வேண்டுமென்ற கட்டயமில்லை.
சாதாரணமாக எப்படி வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம்.பேருந்தில் பயணம் செய்யூம் போதும் இதை செய்யலாம்.
முதல் வகையில் உடலினுள் உள்ள போக்குவரத்தை சீர்செய்வது:
கண்களை இதமாக மூடிக்கொண்டு உங்களது கவனத்தை உங்களது பின்புறம் முதுகெலும்பின் நுனியில் செலுத்துங்கள்.அரை செகன்ட் அந்த இடத்தையே அதாவது முதுகெலும்பின் நுனியையே மனதால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் அங்கிருந்து மேலாக முதுகெலும்பின் வழியாக உங்களது பார்வையை உள்ளுக்குள்ளாக மேலே செலுத்துங்கள்.இந்த டிராவல் உங்களது முதுகெலும்பை இதமாக வருடி விடுவது போன்று இருக்கட்டும்.கைகளால் தொட்டுப் பார்க்க வேண்டாம்.பார்வையை உள்ளுக்குள்ளாக செலுத்தினால் போதும்.பின் மேலே வந்ததும் பின் கீழ்நோக்கி பார்வையை மனதால் செலுத்துங்கள்.
இது போல மேலும் கீழுமாக கீழும் மேலுமாக பார்வையால் உங்களது முதுகெலும்பை மனதால் வருடுவது போல செலுத்திக் கொண்டிருந்தால் போதும்.இதை வேகமாக செய்யக் கூடாது.மிக மிக மெதுவான பயணமாக இந்த உள்நோக்கிய பார்வை இருக்க வேண்டும்.
முதலில் ஒரு நிமிடம் வரை செய்தால் போதும்.
இந்த சூட்சும யோகா பழக்கமான பிறகு ஐந்து நிமிடம் வரை செய்தால் போதும்.இப்போது சூட்சும யோகா என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.உடலை அசைத்து ஒரு குறிப்பிட்ட போசில் உட்கார்ந்து செய்வது சாதாரணமான யோகா.இது உடலை அசைக்காமல் உங்களது பார்வையைப் பயன்படுத்தி பார்வையில் உள்ள சக்தியைப் பயன்படுத்தி உடலில் யோகாவை செய்வது சூட்சும யோகா.இதை எங்கிருந்தும் நான் எடுக்கவில்லை.இந்த சூட்சும யோகா என்பது எனது பயிற்சி வகுப்பிற்கு வரும் அன்பர்களுக்காக நானே சொந்தமாக கண்டுபிடித்து வடிவமைத்தது.பலன் நிறைந்த இந்த சூட்சும யோகாவை செய்து பாருங்கள்.
அடுத்த பதிவில் எப்படிப்பட்ட பயம் பதட்டமாக இருந்தாலும் அதை எப்படி சில நிமிடங்களில் நிறுத்தி மனதை சமநிலைப்படுத்துவது என்பதைப் பற்றி சொல்லித் தருகிறேன்.
ConversionConversion EmoticonEmoticon