பொதுவாக நவம்பர் 23ம் தேதி இரவூ எனது கனவில் (சில சமயம் இல்யூஷன் போல பகலிலும்) பாபா வருவதுண்டு.வருவது மட்டுமில்லாமல் நடக்கப்போகிற சில நிகழ்வூகள் குறித்தும் (எனது வாழ்வில் நடப்பது மட்டுமல்லாமல் பொதுவாக சில நிகழ்வூகள் குறித்தும்) பிரிமானிஷன் போல அவர் சொல்வதுண்டு.இந்த அனுபவம் 25 வருடங்களுக்கும் மேலாக எனக்கு நடந்து வருகிறது.
அப்படி அவரது பிறந்தநாளன்று கனவில் வரும்போது அவரது வழக்கமான கோல்டுஆரஞ்சு உடையை அணியாமல் துரய வெள்ளுடை அணிந்து வருவார்.
இந்த வருடமும் அவர் அது போல வருவார் என்று எண்ணியிருந்தேன்.ஏனெனில் அவரிடம் கேட்பதற்கென்று எனக்காகவூம் எனது ஜோதிட மற்றும் ஷேர் டிரேடிங் வாடிக்கையாளர்களுக்காகவூம் சில கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தேன்.கனவில் பேசுவது எப்படி ஞாபகம் இருக்குமென்று சிலர் எண்ணலாம்.ஆனால் அந்த கனவூ நிஜம் போலவே இருக்கும்.அப்படி ஒரு கனவூ வருவதற்கு முன்பாகவே வீட்டில் யாரோ ஒருவர் நம்முடன் இருப்பது போன்ற உணர்வூ வந்து விடும்.
நாம் சாதாரணமாக அமர்ந்திருக்கும்போது நம்மை பின்னால் இருந்து பார்த்தால் நமது முதுகில் ஒரு வித உணர்வை நாம் உணர்ந்து உடனே திரும்பிப் பார்ப்போம் அல்லவா அது போன்ற உணர்வை உணர முடியூம்.
இது போன்ற 'நடமாட்டம்' ஒரு வார காலமாகவே இருந்ததால் எப்படியூம் இந்த வருடம் பாபா வருவார் என்று எண்ணியிருந்தேன்.இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
பல மாதங்களுக்கு முன்பு ஒடிசாவிலிருந்து ஒரு அன்பர் நமது மெயின்வெப்சைட்டின் வாயிலாக அறிமுகமானார்.அவரிடம் கொடுத்து என்னிடம் கொடுக்கச் சொன்னதாக தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.ஒரு பௌர்ணமியன்று அந்த புத்தகம் என்னிடம் வந்து சேர்ந்தது.டாக்டர் பத்மாவதி என்ற பெண்மணி எழுதிய அந்த புத்தகத்தின் பெயர்"பத்ரா கல்யாணம்" இந்த புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்பது அந்த புத்தக ஆசிரியரான அந்த அம்மையாரின் விருப்பம்.அந்த புத்தகத்தை இன்னும் நான் எடுத்துக் கூட பார்க்கவில்லை.காரணம் எனக்கு தெலுங்கு தெரியாது.கற்றுக் கொண்டுதான் மொழி பெயர்க்க வேண்டும்.
ஆந்திராவில் அந்த புத்தகம் மிகவூம் பிரபலமானது.திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை மற்றும் திருமணமாகி பிரச்சனைகள் உள்ள பெண்கள் அந்த புத்தகத்தை வாசித்தால் உடனே அந்த தடைகள் அகன்று விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த புத்தகத்தைப் பற்றியூம் பாபா கனவில் வந்தால் அவரிடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
நினைத்தபடி 23ம் தேதி பாபா என் கனவில் வரவில்லை.
மிகுந்த வருத்தமாகி விட்டது எனக்கு.வரவில்லையே.எப்படியூம் எப்போதும் துரய வெள்ளுடை அணிந்து நவம்பர் 23ம் தேதி வந்து விடுவாரே.இப்போது ஏன் வரவில்லை என்ற குழப்பத்துடனே இருந்தாலும் பாபாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் கொடுத்திருந்த "காம்போ" ஆஃபர்களுக்கு ஏராளமான அன்பர்கள் ஆதரவூ தெரிவித்து நமது தளத்தின் "காஸினோ டிப்ஸ்"ப்ளானிற்கும் தபால்வழிப் பயிற்சியிலும் நேற்று இணைந்திருந்தார்கள்.
ஆனால் பாபா வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லா வேலைகளையூம் முடித்தபடி நேற்றிரவூ உறங்கச் சென்றேன்.
நள்ளிரவூ.
மணி சுமார் 12.39 இருக்கும்.
சட்டென்று ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.
கனவூ இதுதான்.
என்னை யாரோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.அப்புறம் அந்த இடத்தைப்பார்த்தால் ஒரு மிகப் பெரிய கார் ஷோரூம்.அங்கே வரிசையாக பல வண்ணத்தில் பலவிதமான கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அதில் ஒரு ஸெடான் ரக காரின் வலது புறம் ஒரு சின்ன குறுஞ்சிரிப்புடன் பாபா நின்று கொண்டிருக்கிறார்.அதே துரய வெள்ளை உடை.அவரது தோற்றம் அவரது கடைசி காலத்தில் தளர்ந்த உடலுடன் இருக்குமல்லவா அதே போன்ற தோற்றத்தில் இருந்தது.ஆனாலும் கண்களில் லேசர் கூர்மை.
என்னை நோக்கி வலது கையை நீட்டுகிறார்.
அவரருகே ஒரு புத்தம் புதிய ஸெடான் கார் இருக்கிறது.
என்னிடம் ஒரு மாருதி கார் இருக்கிறது.இப்போது மிகவூம் பழசாகி விட்ட அந்த கார் போதும் வேறெந்த ஆடம்பரமும் வேண்டாம் என்ற எண்ணத்துடன்தான் இத்தனை நாளும் இருந்து வந்திருக்கிறேன்.
இப்போது பாபா கனவில் வந்து புத்தம் புதிய காரை ஷோரூமில் வைத்து காண்பித்து கையை என்னை நோக்கி நீட்டுகிறார்.
என்ன சொல்ல வருகிறார் பாபா?
அவர் என்ன சொல்ல வருகிறாரோ வழக்கப்படி கனவில் வந்து விட்டாரே அதுவே சந்தோஷமாக இருக்கிறது.
ConversionConversion EmoticonEmoticon