வாஸ்து மீன்கள் வளர்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும் அதில் உள்ள நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது.என்னுடைய சொந்த அனுபவத்தில் சில வாஸ்து மீன்களை வைத்திருந்ததிலிருந்து சொல்கிறேன்.
ஒரு மஞ்சள் நிற ப்ளவர்ஹார்ன் ரக மீன் வைத்திருந்திருந்தேன்.அதற்கு நிஃப்டி ஃபிஷ் என்றே பெயர் வைத்திருந்தேன்.காலையில் பங்குச்சந்தை துவங்கும் நேரத்தில் இன்றைக்கு சந்தை மேலே போகுமா கீழே போகுமா என்றால் அது மேலே போய் நீர் மட்டத்தில் தனது தலையிலுள்ள உருண்டையா பகுதியை காண்பித்து விட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தால் அன்றைக்கு நிஃப்டி டிரேடிங்கில் லாங் போய் விடுவோம்.
மதிய நேரத்தில் மறுபடியூம் அதன் அருகில் போய் சந்தை எப்படி இருக்கும்?மேலேயே நிற்குமா? இறங்கி விடுமா என்று கேட்டால் அது ஒரு பல்டியடித்து கீழே வந்து அலைந்தால் சந்தை இறங்கத் துவங்கி விடும் என்று ஷார்ட் செல்லிங் செய்து நிஃப்டியில் காசு பார்த்து விடுவோம்.
இப்போது நீங்கள் கேட்கலாம்.
அந்த மீனிடம் என்ன மொழியில் கேட்பீர்கள்.முதலில் அதற்கு காது கேட்குமா?முதலில் காது இருக்குமா? நிஃப்டி என்றால் என்ன என்பதையூம் பங்குச்சந்தை என்றால் என்ன என்பதையூம் ஒரு வாஸ்து மீன் புரிந்து வைத்திருக்குமா?
பகுத்தறிவாகப் பார்த்தால் இதெல்லாம் உடான்;ஸ்.ஏதோ என்றைக்கோ ஒன்றிரண்டு நாட்கள் கேட்டு கேட்டது நடந்து விட்டால் உடனே வாஸ்து மீன் வளம் பணம் தருமா என்று ஒரு பதிவூ எழுதி விடுவதா என்று கேட்க நீங்கள் நினைக்கலாம்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.அத்தனை நாளுமே அந்த மஞ்சள் நிற ஃப்ளவர் ஹார்ன் மீன் குறி சொன்னது போல நிஃப்டி பற்றி குறிப்பால் உணர்த்தியது.வேறு ஷேர்கள் பற்றி கேட்டுப் பார்த்தால் அது தந்த தகவல்கள் சரியாக இல்லை.நிஃப்டிக்கு மட்டும் சரியாக இருந்தது.
இது நடந்தது நான்கு வருடங்களுக்கு முன்னால்.அப்புறம் அந்த வாஸ்து மீனை வந்து பார்த்ததும் மிகவூம் விரும்பிக் கேட்ட ஒரு திரைப்பட இயக்குநரிடம் கொடுத்து விட்டேன்.
வாஸ்து மீன்கள் வளர்த்தால் பணம் வருமா என்று கேட்டால் வரும் என்றுதான் சொல்கிறார்கள்.ஆனால் சும்மா உட்கார்ந்திருந்தால் பணம் வராது.வாஸ்து மீன் உள்ள இடத்தில் நெகட்டிவ் சக்திகள் வெளியேற்றப்பட்டு பாசிட்டிவ் சக்திகள் சூழ்ந்து கொண்டு விடுவதால் அந்த அறையில் உட்கார்ந்திருக்கிற நீங்கள் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள்.புதிதாக சிந்திப்பீர்கள்.அதன் பலனாகத்தான் பணம் வருகிறதே தவிர சும்மா மீன் வைத்திருப்பதால் பணம் வராது.
பங்குச்சசந்தையைப் பொறுத்தவரை நிஃப்டி மற்றும் நிஃப்டி ஆஃப்ஷன் அதாவது எண்கள் தொடர்பான டிரேடிங்கை செய்பவராக நீங்கள் இருந்தால் மஞ்சள் நிறத்தில் இருக்கிற மாதிரியான ப்ளவர்ஹார்ன் வாங்கலாம்.எவ்வளவூக்கு எவ்வளவூ அதன் தலையில் உள்ள உருண்டையான அமைப்பு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்ப லாபம் வரும். கமாடிட்டியில் தங்கத்தில் டிரேடிங் செய்பவர்களும் இது போன்ற மஞ்சள் நிற ப்ளவர்ஹார்ன் வாங்கி வளர்க்கலாம்.
ஈக்விட்டி டிரேடர்களுக்கு இந்த மீனை விட நியோ என்று சொல்லப்படுகிற பச்சை நிற சாயல் உள்ள ப்ளவர்ஹார்ன் மீன் வளர்ப்பது பொருத்தமாக இருக்கும்.
ப்ளவர்ஹார்ன் ரக மீன்களின் பின்புறத்தில் மேலே உள்ள நீண்ட வால் போன்ற அமைப்பு அதன் பிரதான வாலை விட நீளமாக இருந்தால் அதன் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும்.
இன்ட்ரா டே டிரேடர்களைப் பொறுத்தவரை ஷார்ட் செல்லிங் செய்வதுதான் உங்களது குறிக்கோள் என்றால் அரோனா வகை வாஸ்து மீனை நீங்கள் வளர்க்கலாம்.அரோனா வகை வாஸ்து மீன் சிறிது ஆக்ரோஷமாக இருக்கும்.
பக்கவாட்டில் நகரும் சந்தையிலும் நீங்கள் பணம் பண்ண வேண்டுமானால் நீங்கள் வளர்க்கும் அரோனா மீனிற்கு சிறிய சிறிய நண்டுகளை உணவாகக் கொடுக்க வேண்டும்.
ராசிக்கல் அணிவது போல உங்களது ராசிக்கேற்ற மீன்களையூம் வளர்க்கலாம்.அதற்கு சீன வாஸ்து மீன்களை விட சிங்கப்பூரிலிருந்து கிடைக்கும் மொஸைக் வகை வண்ண மீன்களை அதற்கென்று சில ரகங்கள் உள்ளன.அவற்றை உங்களது ராசிக்கேற்பவூம் நியூமராலஜிப்படி உங்களது எண்களுக்கேற்பவூம் வளர்க்கலாம்.
மேம்போக்காகப் பார்த்தால் ஷேர் டிரேடிங்கிற்கு வாஸ்து மீன் வளர்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை போல தெரியூம்.ஆனால் இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.நேரம் கிடைக்கிறபோது அவற்றை அடுத்தடுத்த பதிவூகளில் எழுதுகிறேன்.
ConversionConversion EmoticonEmoticon