"உங்களது கேப்ஷன் எதுவாக இருக்கும்"
பெரிய ஞானிகள் முதல் சாதாரண சிந்தனையாளர்கள் வரை மிகப்பெரிய சவாலான கேள்வியாக இருப்பது "நான் யார்" என்ற கேள்விதான்.இந்த நான் என்பது உடலா அல்லது மனமா போன்ற தத்துவார்த்தங்களுக்குள் இப்போது உங்களை 'நான்' அழைத்துச் செல்ல விரும்பவில்லை.
முன்பெல்லாம் ஒரு அலுவலகத்திலோ ஒரு இடத்திலோ யாரையாவது தேடி ஒருத்தர் நேரில் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஏன் முன்பெல்லாம் என்றால் இப்போது அனைவரது கையிலும் செல்பேசி இருப்பதால் யாரும் யாரையூம் தேடிச் செல்வதில்லை.ஒரு மிஸ்டு கால் போதும் என்றாகி விட்டது.
அப்படி தேடிச் செல்லும் நபரைப் பற்றி அவரது பெயரைக் குறிப்பிட்டு
"ஏங்க ராமசாமி வந்திருக்காருங்களா" என்று கேட்டால் அங்கிருக்கும் நபர் அத்தனை பெரிய மனிதர்கள் கூட்டம் அடங்கிய அலுவலகத்தில் யார் ராமசாமி என்று யோசிப்பார்.உடனே இப்படி கேட்பார்.
"ஓ..அந்த கருப்பா தடிச்சவரா இருப்பாரே அவருங்களா.."
இல்லையென்றால்"ஒல்லியா டிவிஎஸ்50ல சபாரியில வருவாருங்களே..அவரா"
அதுவூம் இல்லையென்றால் "நெத்தியல தழும்பு இருக்குமே..அய்யப்பனுக்கு மாலை போட்டிருப்பாரே.கான்டீனான்ட நின்னு அரசியல் போட்டிருப்பாரே.அவரா..தலைவர் படம் போட்ட மோதிரம் கூட கையில இருக்குமே"
என்று விதவிதமாக அடையாளம் சொல்வார்கள்.
அப்படியானால் ராமசாமி என்ற பெயர்?
அது சும்மா அலுவலக பதிவேட்டிலும் ரேஷன் கார்டிலும் ஒரு பெயராகப் பதிவூ செய்யப்பட்டிருப்பதற்கு மட்டும் பயன்பட்டிருக்கும்.
ஆக பெயர் முக்கியம்தான்.ஆனால் அதைத்தான்டி ஒரு அடையாளம் முக்கியமாகப்படுகிறது.அதனால்தான் நடிகர்கள் தங்களது பெயருடன் அடைமொழியை சேர்த்துக் கொள்கிறார்கள்.நடிகர் மட்டுமல்ல.சாதாரண மனிதர்களுக்கு கூட அடைமொழி வந்து அவர்களது பெயரை அடைகாக்க ஆரம்பித்து விடுகிறது என்று போன வாரம் தெரிந்து கொண்டேன்.
எங்களது பகுதியில் ஒரு நபர் இருப்பார்.சற்று கரப்பான்பூச்சித்தனமாக பெரிய மீசை வைத்திருப்பார்.அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களிடம் தவணை கொடுத்து பணம் வசூலிப்பதுதான் இவரது வேலை.பத்து வட்டி வாங்குவார்.டிவிஎஸ்50லில் வெள்ளையூம் சொள்ளையூமாக வருவார்.இவர் பெயர் என்ன என்றே ஏரியாவில் யாருக்கும் தெரியாது.பொத்தாம் பொதுவாக 'மீசைக்காரன்' என்றே அழைப்பார்கள்.மீசைக்காரனைக் காட்டி குழந்தைகளுக்கு தாய்மார்கள் சோறு ஊட்டுவதும் உண்டு.
கொஞ்சகாலமாக அந்த நபரை மீசைக்காரன் என்று சொல்வதை இங்குள்ள பெண்கள் விட்டு விட்டனர்.பதிலாக குழந்தைகளை பயமுறுத்துவதற்கு "முட்டைவீரன்"கிட்ட பிடிச்சிக்கொடுத்துடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
யாரந்த முட்டை வீரன் என்று பார்த்தால் அதே மீசைக்காரன்தான் இப்போது முட்டை வீரன் ஆகியிருக்கிறார்.பருத்தி வீரன் மாதிரி முட்டை வீரன்.இந்த மீசைக்கார நபர் இப்போதெல்லாம் அந்த பகுதியில் உள்ள சத்துணவூக்கூடத்திற்கு சென்று அங்கு வேலை பெண்களுக்கு தவணையில் பணம் கொடுத்திருப்பதால் தனக்கு ஆறு முட்டையை இலவசமாக தினமும் கொடுத்து விட வேண்டுமென்று மிரட்டி வருகிறாராம்.இது போதாதா.முட்டை வீரன் என்று பெயர் வைத்து விட்டனர்
தன்பெயர் மீசைக்காரன் இல்லை.முட்டைவீரன்தான் தன் பெயர் என்பது அந்த முட்டை வீரனுக்கே இன்னும் தெரியாது.
எதற்குச் சொல்கிறேன் என்றால் நீங்கள் யாரென்று நீங்கள்தான் இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் இந்த உலகமே உங்களுக்கு ஒரு 'கேப்ஷன் பெயரை" கொடுத்து விட்டு நீங்கள் இவ்வளவூதான் என்று உங்களை வளர விடாமல் செய்து விடும்.
எனவே நீங்கள் யாரென்று பாருங்கள்.உங்களது தனித்தன்மை என்னவென்று பாருங்கள்.நீங்கள் படித்த படிப்பிற்கு மீறி நீங்கள் பார்க்கும் வேலையை விடவூம் அதிகமாக உங்களது வளர்ச்சிக்காக என்ன செய்ய முடியூம் என்று பாருங்கள்.அதனை வரிசைப்படுத்துங்கள்.அதில் எது முதன்மையாக இருக்கிறதோ அல்லது எது உடனடியாக உங்களுக்கு பணத்தையூம் புகழையூம் கொண்டு வந்து தருமோ அதை செய்ய தயாராகி விடுங்கள்.
முன்பெல்லாம் எங்காவது சென்றால் யாரையாவது சந்தித்தால் விசிட்டிங் கார்டை பரிமாறிக்கொள்வதுண்டு.இப்போது அதனை செல்பேசி பிடித்துக் கொண்டு விட்டது.அந்த விசிட்டிங் கார்டில் நீங்கள் யார்.நீ;ங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒரு படத்துடன் போட்டிருப்பீர்கள்.
இப்போது அது போன்ற ஒரு விசிட்டிகார்டை தயார் செய்யூங்கள்.ஏற்கனவே ஒரு முறை இது போன்ற ஒரு விசிட்டிங் கார்டு பற்றி எழுதியிருக்கிறேன்.இப்போது நீங்கள் யார் உங்களுக்கான கேப்ஷன் என்ன என்பதை மற்றவர்கள் அறியூம் விதத்தில் நீங்கள் பேசுகிற வார்த்தைகளிலோ(இந்த வார்ததைகள்தான் கீவேர்டுகளாக உங்களுக்கான பி;ம்பத்தை ஏற்படுத்தும்) உங்களது உடையணியூம் விதத்திலோ உங்களது உடல்மொழியிலோ உருவகப்படுத்துங்கள்.இதுவே உங்களை மற்றவர்களிமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதோடு மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்;க்கவூம ஆரம்பித்து விடும்.
உங்களை நீங்கள் சரியாக மற்றவர்களிடம் முன் நிறுத்த ஆரம்பித்து விட்டால் உங்களது தொழிலில் உங்களது வேலையில் நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.நீங்களும் ஒரு 'தல'தான்.
செய்து பாருங்கள்.உங்களுக்கான டிமான்ட் உயர்வை கண்கூடாக உணர்வீர்கள்.
ConversionConversion EmoticonEmoticon