'எடிட் செய்து பாருங்கள்"
வாருங்கள் ஒரு ப்ராக்டிக்கல் அசைன்மன்ட்டை செய்து பார்ப்போம்.ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.கண்களை இறுக மூடிக்கக் கொள்ள வேண்டாம்.டிவி ஓடிக்கொண்டிருந்தால் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கட்டும்.அக்கம்பக்கத்தில் சப்தமோ பேச்சுக்குரலோ கேட்டுக் கொண்டிருந்தால் அதுவூம் அப்படியே இருக்கட்டும்.யோகாவோ தியானமோ செய்கிற மாதிரியான முயற்சிகள் எதுவூம் வேண்டாம்.நீங்கள்ள சும்மா உட்கார்ந்திருந்தால் போதும்.
இப்போது நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யூங்கள்.பெரிதாக ஒன்றுமில்லை.உங்களது வாழ்க்கையை பின்னோக்கி சின்னஞ்சிறு ப்ளாஷ்பேக் போல ரிவர்ஸில் ஓட்டிப் பாருங்கள்.
அதாவது இன்றைய தேதியிலிருந்து நேற்று அதற்கு முன் தினம்.அதற்கும் முன்தினம்.போன வாரம்.அதற்கும் முந்தைய வாரம்.போன மாதம்.அதற்கும் முந்தைய மாதம் என்று கடந்த ஒரு வருட வாழ்வை ரீவைண்ட் செய்து பாருங்கள்.நீங்கள் விரும்பினால் இன்னும் சில ஆண்டுகள் கூட பின்னோக்கிச் சென்று ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்க்கலாம்.
அப்படி ரீவைண்ட் செய்து படமாக ஓட்டிப்பார்க்கிறபோது அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஒரு திரைப்பட எடிட்டிங் செய்பவர்களைப் போல கவனித்துப் பாருங்கள்.
அவற்றை மனதின் ஒரு ஓரத்திலேயே ஒரு தாளில் எழுதுவது போல தொகுத்து வைத்துக் கொண்டே வாருங்கள்.உதாரணமாக பின்வருவது போன்ற தலைப்புகளில் அவற்றை அடக்க முடியூமா என்று பாருங்கள்.
சந்தோஷமான தருணங்கள்
எதிர்பாராத தோல்விகள்
இடைஞ்சல்கள்
நண்பர்களோ உறவினர்களோ செய்த துரோகங்கள்
சின்னச்சின்ன வெற்றிகள்
எதிர்பாராத பணவரவூகள்
எதிர்பாராத தண்டச் செலவூகள்
தேவையற்ற விரையங்கள்
புதிய நண்பர்களின் தொடர்பு
விட்டு விலகிச் சென்ற நண்பர்கள்
எதிர்பாராது வந்து உதவியவர்கள்
திடீர் பணவரவூ
திடீர் லாபவரவூ
திடீர் பிரிவூ
திடீர் உடல்நலக்குறைவூ
சந்தோஷமான கொண்டாட்டமான தருணங்கள்
இது போல ஒரு பட்டியலை தயார் செய்து அதில் அந்த குறிப்பிட்ட கடந்த கால நிகழ்வூகளை அடக்க முடியூமா என்று பாருங்கள்.அப்படி அடக்க முடிந்தால் இந்த அசைன்மன்ட்டில் பாதி வேலை முடிந்து விட்டது.
இப்போது எழுந்திருங்கள்.எழுந்து சென்று ஒரு காபியோ டீயோ அல்லது ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீரோ அருந்தி விட்டு வந்து அமருங்கள்.மறுபடியூம் மனதில் குறித்து வைத்துள்ள அந்த பட்டியலைப் பாருங்கள்.
இப்போது ஒரு திரைப்பட எடிட்டர் போல நீங்கள் உங்களது கடந்த கால வாழ்வில் நடந்த நிகழ்வூகளை எடிட் செய்யப் போகிறீர்கள்.எப்படி தெரியூமா? அந்த பட்டியலில் உள்ள நெகட்டிவ்வான விஷயங்களை மட்டும் உங்களது பட்டியலில் இருந்து வெட்டி எறியப்போகிறீர்கள்.அப்படி வெட்டி எறிய முடிந்து விட்டால் அதன்பின் மறுபடி உங்களது மனப்பட்டியலைப் பாருங்கள்.அதில் பாசிட்டிவ்வான நிகழ்வூகள் மட்டுமே இருக்கும்.
இப்போது மறுபடியூம் வசதியாக நன்றாக அமர்ந்து கொள்ளுங்கள்.பட்டியலில் மீதமுள்ள பாசிட்டிவ்வான விஷயங்களை மறுபடியூம் ரீவைண்ட் செய்வது போல ஓட்டிப் பாருங்கள்.
இப்படி செய்வது முதலில் கஷ்டமாக இருக்கும்.ஏனென்றால் மனம் என்பது ஒரு கட்டவிழ்த்து விட்ட முரட்டுக்குதிரை.நீங்கள் எதையெல்லாம் வெட்டி எறிந்தீர்களோ அதன் மீதுதான் அதன் கவனம் செல்லும்.அப்படி மனக்குதிரை அடம் பிடித்தால் பிடிக்கட்டும்.அதைப் புறக்கணித்து விட்டு அந்த பாசிட்டிவ் நிகழ்வூகளின் மீது கவனம் செலுத்தி அதை ரீவைண்ட் செய்ய முடியூமா என்று பாருங்கள்.
செய்ய முடிந்தால் உங்களது அசைன்மன்;ட் முக்கால்வாசி முடிந்து விட்டது.இப்போது அந்த கடந்த கால நிகழ்வூகளில் உள்ள அதிகம் சந்தோஷமான தருணங்களையூம் அதிகம் பணம் தொடர்பான வரவூகள் அடங்கிய தருணங்களையூம் ஹைலைட் போல மீண்டும் ரீவைண்ட் செய்ய முடியூமா என்று பாருங்கள்.
முடிந்தால் அது போதும்.
எடிட்டிங் முடிந்து விட்டதா என்றுதானே கேட்க வருகிறீர்கள்.முடியவில்லை.இன்னொரு எடிட்டிங் பாக்கியிருக்கிறது.அதுதான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றை எடிட் செய்யூம் முயற்சி.
எதிர்காலத்தில் அதாவது நடக்கப்போகிற நிகழ்வூகளை எடிட் செய்ய முடிந்தால் அது விதியை கட்டுப்படுத்துவதைப் போல அல்லவா? அதை மட்டும் செய்ய முடிந்து விட்டால் நீங்களே ஒரு பெரிய ஆள் ஆகி விடலாம் அல்லவா.ஒரு கார்ப்பரேட் சாமியார் போல கோடிகளில் புரள முடியூமல்லவா?
பொதுவாக எதிர்காலத்தை யாராலும் எடிட் செய்ய முடியாது.ஆனால் விருப்பங்களை தேர்வூ செய்ய முடியூமல்லவா?
இது இப்போது உங்களுக்கு புரியாமல் இருக்கும்.பின்வரும் உதாரணத்தைப் பார்த்தால் புரியூம்.
ஒரு திருமண நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.திருமணம் நடந்து முடிந்து பந்திக்கு சென்று அமரும் போது மிகப் பெரிய தலைவாலை இழை.அருகில் தண்ணீர் பாட்டில்.பதார்த்தங்களை கொண்டு வந்து வைத்துக் கொண்டே வரும் போது உங்கள் இலைக்கு அருகில் வரும் போது-
இனிப்பு வேண்டாம்.உடல் எடை விஷயத்தில் கவனமாக இருப்பதால் இனிப்பு வேண்டாம்.உப்பு சிறிது போதும்.பாயாசம் இரண்டு கப் வையூங்கள்.அதென்ன உருளைக்கிழங்குபால்கறியா? இன்னொரு தரம் வையூங்கள் என்று உங்களது விருப்பத்தைச் சொல்லி விட்டால் நீங்கள் கேட்டதுதானே பந்தியில் கிடைக்கிறது.சாப்பிடுவதற்கு முன்பாகவே இதைச் சொல்லி விட்டால் அதன்படிதானே வைக்கிறார்கள்.சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக இது போல வேண்டும் வேண்டாம் என்று மனதார நினைத்து விட்டால் அது போல வைப்பார்களா என்று கேட்கக் கூடாது.அது போல வைப்பார்கள்தான்.ஆனால் அது மிகுந்த தொடர்ச்சியான பயிற்சிக்கு பிறகே மனதைத் தயார் செய்த பிறகே அது போல நடக்கும்.அதற்கு பல வருடங்களாகும்.
இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் எது வேண்டும்.எது வேண்டாம் என்று நீங்கள் சொல்லி விட்டால் எதிர்காலத்தில் எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது மட்டுமே வரும்.எது வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ அது வராது.ஏனெனில் அது ப்ரீ எடிட்(pre-edit) செய்யப்பட்டிருக்கும்.
இது கஷ்டமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.சிறிது சிறிதாக இந்த முயற்சியை செய்து பாருங்கள்.உதாரணமாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதிடம் சொல்லிப் பாருங்கள்.
பணம் வரவேண்டும்.மேன்மேலும் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.எதிலும் எப்போதும்.
இதை உங்களது விருப்பத்தேர்வாக உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.மந்திரங்கள் சுலோகங்கள் எல்லாம் ஒரே ஒரு தடவை சொல்லிப் பாருங்கள்.வேலை செய்யாது.திரும்பத் திரும்ப அவை சொல்லப்படும்போதுதான் அவை வேலை செய்ய ஆரம்பிக்கின்றன.அது போல உங்களது விருப்பத் தேர்வை-
பணம் மேன்மேலும் பணம் வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.உள்ளுக்குள் எதிரொலிக்கச்செய்து கொண்டே இருங்கள்.
பணம் வரும்.
மேன்மேலும் பணம் வரும்.வளரும்.
காசா பணமா? சொல்லித்தான் பாருங்களேன்.
ConversionConversion EmoticonEmoticon