இந்த பதிவை எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் வெகு காலமாக வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.இன்றைக்கு எழுதி விடலாம் என்று தோன்றியது.
அமானுஷ்யம் என்றால் ஆவிகள்...பேய்கள்..பிசாசுகள்..டிமான்டிகள்...காஞ்சாக்கள் மொட்டசிவாக்கள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.ஷேர் டிரேடிங்கில் ஈடுபட்டு ஷேர் டிரேடிங்கில் திறமையாக செயல்பட்டு தற்போது ஆயூள் முடிந்ததன் காரணமாக அமரர் ஆகி விட்டவர்கள் அல்லது உங்களது வீட்டில் நன்றாக வாழ்ந்து ஆயூள் முடிந்து தெய்வமாகி விட்டவர்கள் என்று பொருள்.இவர்களைத்தான் அமானுஷ்ய சக்தி கொண்டவர்களாக நினைத்து அவர்களால் உங்களது ஷேர் டிரேடிங்கிற்கு அவர்களிடமிருந்து உதவியைப் பெற முடியூமா என்று தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த பதிவூ.
பொதுவாக ஷேர் டிரேடர்களுக்கு ஜோதிடரீதியில் சில பரிகாரங்களை சொல்வதற்கு மிக மிக அரிதாக இந்த முறையை கடைபிடித்து அதில் மிகுந்த வெற்றியூம் பெற்றிருக்கிறேன்.அப்படி கொடுக்கப்பட்ட பரிகாரத்தை கடைபிடித்த அன்பர்கள் இன்னல்கள் அகன்று நல்ல நிலைமைக்கு வந்தும் இருக்கிறார்கள்.
இப்போது ஷேர் டிரேடிங்கிற்கான அமானுஷ்ய உதவி பெறும் முறை.இதனை எழுதும்போது எனது குளிரூட்டப்பட்ட அறைக்குள் நான் மட்டும்தான் தனியாக இருக்கிறேன்.பொதுவாக இது போன்ற நேரத்தில் என் அறையில் பாபா இருப்பார் (என்று நான் திடமாக நம்பிக்கொண்டிருப்பவன்).இப்போது இதனை எழுதும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.
சரி விஷயத்தை சொல்கிறேன் கேளுங்கள்.
யாருக்கு இந்த அமானுஷ்ய முறையில் ஷேர் டிரேடிங்கிற்கு வேண்டிய உதவியைப் பெற வேண்டுமோ அவரது ஜாதகம் வேண்டும்.இதனை தனியாகச் செய்யக் கூடாது.உடன் அவரது நண்பரோ உறவினரோ குடும்ப உறுப்பினரோ யாராவது இருக்க வேண்டும்.அவநம்பிக்கை கூடாது.கேலி பேசக்கூடாது.அரட்டை அடிக்கக் கூடாது.
அந்த அறையில் மெலிதாக ஒரு ஊதுவர்த்தியோ ரூம்ஃப்ரஷ்னரோ இருக்கட்டும்.சத்தமில்லாமல் அமைதியான இரவூ நேரத்தில் (அதற்காக 12 மணிக்கெல்லாம் முயற்சி செய்து பயந்து போகாதீர்கள்) இதனை செய்ய வேண்டும்.
சிறிது பழங்கள் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் பால் வைத்துக் கொள்ளுங்கள்.சாக்லேட்டுகள் கூட வைத்துக் கொள்ளலாம்.அது உங்கள் விருப்பம்.
யாருக்கு செய்யப் போகிறௌமோ அவரது ஜாதகத்தை ஒரு சிலேட்டில் சாக்பீஸ் கொண்டு ராசிக்கட்டத்தையூம் அம்சக் கட்டத்தையூம் மட்டும் வரைந்து அதில் உள்ள கிரகங்களைக் குறித்தால் போதுமானது.
அதன்பின் கண்களை மூடிக்கொண்டு முதலில் விநாயகரையூம் அதன்பின் உங்களது குலதெய்வத்தையூம் அதன்பின் உங்களது இஷ்ட தெய்வத்தையூம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்போது அந்த ராசிக் கட்டத்தில் லக்கினத்திலிருந்து எண்ணிக் கொண்டே வந்தால் ஒன்பதாவதாக வரும் கட்டத்தில் உங்களது வலது கை ஆள்காட்டி விரலை வைத்துக் கொள்ளுங்கள்.அத்துடன் இன்னொரு விரலை ஏழாவது கட்டத்திலும் இன்னொரு விரலை பதினோராவது கட்டத்திலும் வைத்து அழுத்திக் கொண்டு தியானம் செய்வது போல கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
எதுவூம் பேச வேண்டாம்.
ஷேர் டிரேடிங்கில் சரியாக டிரேடிங் செய்வதற்கு புரியாமல் தவிக்கிறேன்.எனக்கு யாராவது வந்து உதவூங்கள்.என்பதை மட்டும் திரும்பத் திரும்ப சத்தமில்லாமல் மனதார சொல்லிக் கொண்டே இருங்கள்.
உங்களது கவனம் கலைந்து நீங்களாகவே கண்களைத் திறந்து பார்க்கும் வரை இதனை மனதார சப்தமின்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.
போதும்.
உங்களது அமானுஷ்ய பிரார்த்தனை முடிந்தது.
நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி ஆவியோ பேயோ உடனே வந்து உங்களது விரலைப் பிடித்து நகர்த்தவோ சிலேட்டில் எதையூம் எழுதிக் காட்டவோ நாளைக்கு ஏறப்போகிற ஷேரின் பெயரை எழுதிக் காட்டவோ நாளைக்கு நிஃப்டி ஏறுமா எத்தனை பாயின்ட் ஏறும் என்றெல்லாம் எழுதிக் காட்டவோ செய்யாது.
இங்கே என்ன நடக்கிறது என்பதை சொல்கிறேன்.
இது போல ஒருவர் ஒரு அமானுஷ்ய பிரார்த்தனையை செய்யூம்போது அவரது குடும்ப முன்னோர்கள் யாராவது ஒருவர் வந்து உதவி செய்ய முனைவார்கள்.அப்படி வருகிற முன்னோருக்கு எப்படி ஷேர் டிரேடிங் செய்யத் தெரிந்திருக்கும் என்று நினைக்கலாம்.அவருக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை.ஷேர் டிரேடிங் நன்றாகத் தெரிந்திருக்கும் வேறொரு ஆத்மாவிடம் அந்த முன்னோர் இது போல தன் குடும்பத்தில் ஒருவர் வேண்டுகிறார்.அதற்கு உதவி செய்ய முடியூமா என்று கேட்பார்.அதன் பயனாக உதவிகள் கிடைக்க 'வாய்ப்பிருக்கிறது'.
சரி எதற்காக ஒன்பது ஏழு மற்றும் பதினோராவது கட்டங்களை விரல்களால் தொட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றால் ஏழாவது இடம் என்பது ஜோதிடரீதியாக ரேஸ் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கான இடம்.ஒன்பதாம் இடம் என்பது முன்னோர்களுக்கான(பித்ருக்கள்) இடம்.பதினோராம் இடம் என்பது லாபஸ்தானம்.
எப்படி அமானுஷ்ய உதவி கிடைக்கும் என்று பார்ப்போம்.
இது போல ஒரு அமானுஷ்ய பிரார்த்தனையை செய்து முடித்தபின் உடனே யாரும் உதவி விட மாட்டார்கள்."மாஸ்"தனமாக பிரேம்ஜி மாதிரி யாரும் வந்து நிற்கவூம் மாட்டார்கள்.ஆனால் பித்ருக்கள் என்பவர்கள் கனவில் வருவார்கள்.அதுவூம் நேரடியாக வராவிட்டாலும் சில சங்கேதக் குறிப்புகள் போல கனவில் சில அறிவூரைகளை வழிகாட்டுதல்களைச் செய்வார்க்ள.அது மட்டுமல்லாமல் நீங்கள் வெளியே செல்கிறபோது சில சகுன வார்த்தைகளாகச் சில குறிப்புகளைச் சொல்வார்கள்.
சரியாகச் சொல்வதென்றால் கோவில்களுக்கு வெளியிலும் குளக்கரையிலும் நீர்நிலைகளின் அருகிலும் அரசமரம் வேப்பமரத்தின் அருகிலும் அமர்ந்திருக்கிற வயதானவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் இது போன்ற மறைமுகக் குறிப்புகள் கிடைக்கும்.
இதனை முதலில் புரிந்து கொள்வது கடினம்.அர்த்தம் எல்லாமே மறைபொருளாத்தான் இருக்கும்.அவர்களே தாங்கள் பேசியதற்கான அர்த்தத்தை உணரமாட்டார்கள்.அதனால் அவர்களிடம் போய் எதற்காக இப்படி சொன்னீர்கள் என்று அந்த பெரியவர்களை வற்புறுத்தாதீர்கள்.
நீங்கள் புரிந்து கொண்டாலும் சரி.புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி இந்த அமானுஷ்ய பிரார்த்தனையை நீங்கள் செய்து முடித்ததும் தானாகவே நாளாவட்டத்தில் உங்களது ஷேர் டிரேடிங் தொடர்பான பிரச்சனைகள் தானாகவே சரியாகி விடுவதை நீங்களே அனுபவத்தில் பார்ப்பீர்கள்.
இதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் மாதம் ஒரு முறை இது போல அமானுஷ்ய பிரார்த்தனையை செய்து வாருங்கள்.இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் கேலி பேச வேண்டாம்.
ஏனெனில் இது அனுபவ உண்மை.
ConversionConversion EmoticonEmoticon