இந்த தலைப்பைப் பார்த்து விட்டு இந்த பதிவை வாசிக்கப்போகிறவர்களுக்கு நான் சொல்வது அதிர்ச்சியாக இருக்கும்.
சிறுமுதலீட்டாளர்களால் ஒருபோதும் கோடீஸ்வரர்களாக முடியாது.
இதற்கு காரணம் பங்குச்சந்தையோ பணமோ அல்ல.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சிறுமுதலீட்டாளர்களே.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு சிறிய முதலீட்டாளர்.அவருக்கு லேசாக தலைவலி.காய்ச்சல் வரும்போல இருக்கிறது.உடனே அவர் என்ன செய்கிறார் என்றால் பேஸ்புக்கில் அவரது நண்பரான இன்னொரு சிறுமுதலீட்டாளருக்கு ஒரு மெசேஜ் தட்டி விடுகிறார்.அவரது நண்பர் உடனே மேலத்தெருவில் ஒரு ஆள் இலவசமாக பாரசீட்டமால் மாத்திரை தருகிறாராம்.போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று.
இவர் மேலத்தெருவிற்குச் செல்கிறார்.
வழியிலேயே இன்னொரு சிறுமுதலீட்டாளர் பேப்பர் படித்தபடி வருகிறார்.அவரிடம் இவர் மேலத்தெரு செல்லும் விஷயத்தைச் சொல்ல தானும் வருகிறேன் என்று இருவரும் மேலத்தெரு சென்று இலவசமாக பாரசீட்டமால் மாத்திரைகளை ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொண்டு திரும்பும்போதே அந்த நண்பர் சொல்கிறார்.
கீழத்தெருவில் கால்போல் மாத்திரை காய்ச்சலுக்கு ஒரு ஆள் இலவசமாக தருகிறாராம்.அதையூம் வாங்கிக் கொள்ளுவோமா என்று.
உடனே கீழத்தெரு.
இருவரும் கால்போல் மாத்திரை வாங்கிக்கொண்டே திரும்பும்போது வாட்ஸ்அப்பில் இன்னொரு சிறுமுதலீட்டாளர்.
செய்தி பறக்கிறது.
வாட்ஸ்அன்பர் தெற்குத்தெருவில் காய்ச்சல் தலைவலிக்கு சூரணம் யாரோ இலவசமாகத் தருகிறார் என்று சொல்லி விட்டு கீழத்தெருவிற்கு வந்து கால்போல் மாத்திரை வாங்கிக்கொள்ள இவர்கள் இருவரும் தெற்குச் தெரு சென்று காய்ச்சல் சூரணம் வாங்கிக் கொள்கிறார்கள்.
அப்புறம் பார்த்தால் தெற்குத் தெரு இலவச சூரணவரிசையில் இவர்களைப் போலவே நாலைந்து சிறுமுதலீட்டாளர்கள்.ஒருவருக்கு காய்ச்சல்.இன்னொருவருக்கு வயிற்றுப்போக்கு.மற்றவர்களுக்கு காதுவலி.
ஆனால் சூரணம் இலவசம் என்பதால் அதனை வாங்கிக்கொள்ள நிற்கிறார்கள்.
அப்போது இலவச மாத்திரை கொடுக்கிற ஒரு சிறுமுதலீட்டாளராக இருந்து இதெல்லாம் உதவாது என்று தானே ஒரு போலி மருத்துவராகி விட்ட சிறுமுதலீட்டாளர்.
அட அப்ரசண்டிகளா...வடக்குத் தெருவில் இடக்குமுக்கு பக்கம் போனீர்களானால் எந்த விதமான வியாதிக்கும் அற்புத குணமளிக்கும் சர்வரோகநிவாரணியை இலவசமாகத் தருகிறார்கள்.
ஆனால் அந்த சர்வரோகநிவாரணியை நான் பயன்படுத்தினேன்.அது எனக்கு பலன் தந்தது என்று பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட வேண்டும்.யாராவது தோண்டித் துருவி நீ உண்மையிலேயே சர்வரோகநிவாரணியை பயன்படுத்தினாயா என்று கேட்டால் இல்லை.நான் ச்சும்மா மருந்து சாப்பிட்ட மாதிரி பேப்பர்ல எழுதி வைச்சிக்கிட்டேன்.அற்புதமா வேலை செஞ்சது மருந்து.அதாவது பேப்பர் ட்ரீட்மன்ட்ல என்று போடனும்.அப்பதான் உங்களுக்கு சர்வரோகநிவாரணி இலவசமாக கிடைக்கும் என்றதும்-
அங்கே கூட்டம் அம்மிக் கொண்டிருக்கிறாது.
கடைசியில் நம்ம ரங்காவூம் பில்லாவூம் பார்க்கில் வந்து உட்காருகிறார்கள்.
கை நிறைய இலவச மாத்திரைகள்.சூரணங்கள்.சர்வரோக நிவாரணிகள்.
இப்போது தலைவலி இல்லை.காய்ச்சல் கூட வராது போலிருந்தது.
"சும்மா சாப்பிடுவோம்.இலவசமாக கிடைச்ச மாத்திரையை விட்டுடக்கூடாது"
என்று சாப்பிடுகிறார்கள்.
தலைகிறுகிறுத்து விழுகிறார்கள்.
இது ஏதோ பள்ளிக்கூட ஆண்டு விழா நாடகம் போல இருக்கிறதல்லவா?இதுதான் நடக்கிறது பங்குச்சந்தையில்.அதனால்தான் சிறிய முதலீட்டாளர்கள் கடைசி வரை சிறிய முதலீட்டாளர்களாகவே இருக்கிறார்கள்.
சரி இதனையே ஜோதிடரீதியாகப் பார்த்தோமானால் பின்வரும் அம்சங்கள் முக்கியமானவை.
1.சிறுமுதலீட்டாளர்கள் என்பவர்களே அதிகமாக பணவசதி இல்லாதவர்கள் - அதாவது குருவில் அருள் ஜாதகத்தில் கிடைக்கப்பெறாதவர்கள்.
2.சிறுமுதலீட்டாளர்களாகவே அவர்கள் இருப்பதற்கு காரணம் அவர்களது குறுகிய மற்றும் குழப்பமான மனநிலை-இதற்கு காரணம் சாதகமற்ற நிலையில் சந்திரன் ஜாதகத்தில் இருப்பது.
3.சிறுமுதலீட்டாளர்கள் மெதுவாகவே பணவளர்ச்சி காண்பவர்களாக இருப்பார்கள் - இதற்கு காரணம் சனி.
4.சிறுமுதலீட்டாளரகள் பிச்சைப்பாத்திரம் ஏந்தாத அளவிற்கு எதையூம் யாசித்துப் பெறுபவர்களாக இருப்பார்கள்-இதற்குக் காரணம் சாதகமற்ற நிலையில் ஜாதகத்தில் உள்ள ராகுவூம் கேதுவூம்தான்.
5.சிறுமுதலீட்டாளர்கள் இன்ட்ரா டே டிரேடிங்கிலேயே மூழ்கி மொன்னையாகிப் போகிறவர்களாக இருப்பார்கள்-இதற்குக் காரணமும் சந்திரன்தான்.
ஆக மொத்தத்தில் சிறிய முதலீட்டாளர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது சந்திரனும் சனியூம்தான்.
ஒரு சிறுமுதலீட்டாளரை கோடீஸ்வரராக மாற்ற வேண்டுமென்றால் அதனை அவர்களது ஜாதகத்தை சீர் செய்வதிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் ஜாதகத்தை ஷேர் டிரேடிங்கிற்காக பார்ப்பது என்பது எளிதான வேலை அல்ல.சவாலான வேலை.இதற்குரிய கட்டணத்தை தருவதற்கு சிறிய முதலீட்டாளர்கள் முன்வர மாட்டார்கள்.
தெருமுனையில் தந்திப்பேப்பருடன் பத்துக்கு பத்து அறையில் சாம்பிராணி மணக்க உட்கார்ந்திருக்கிற அமெச்சூர் ஜோதிடரிடம் அம்பது நுரறு கொடுத்து ஜாதகத்தை பார்த்துக் கொள்ளலாமே என நினைப்பார்கள்.அது போன்ற ஜோதிடர்கள் கோச்சாரப்படி மேலோட்டமாக ஜாதகத்தை வாங்கிப் பார்த்து விட்டு இன்ன கோவிலுக்குச் செல்லுங்கள்.இன்னும் மூன்று மாதத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி அம்பது நுரறை வாங்கிக் கொண்டு விடுவார்கள்.
ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலனும் சூட்சுமப்பரிகாரங்களும் பெற நமது கட்டணம் ரூ 10555 ஆகும்.இந்த கட்டணத்தில்தான் உங்களுக்குரிய திருப்புமுனையைக் கண்டுபிடித்து கிரகங்களை சீரமைத்துத் தர இயலும்.
இவ்வளவூ கட்டணமா என்று யோசித்தால் கடைசி வரை அப்படியே இருக்க வேண்டியதுதான்.நமது மெயின்வெப்சைட்டில் ஷேர் டிரேடிங்கை சூதாட்டம் போல மேற்கொள்ள விரும்பும் பெரிய முதலீட்டாளர்களுக்கு இதை விட பெரிய கட்டணம்தான்.ஆனால் வடநாட்டிலுள்ள அன்பர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் நீங்கள்?
ConversionConversion EmoticonEmoticon