"இன்றைக்கு வளர்ந்தீர்களா?"
ஒரு மனிதனின் வளர்ச்சி என்பது தற்போதையச் சூழலில் அவனிடம் உள்ள பணபலத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நீங்களே உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பலவிதமான அனுபவங்களை வைத்து உணர்ந்திருப்பீர்கள்.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பணபலம் என்பது ஒவ்வொரு காலாண்டிலும் அலசி ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படுவதோடு வழிகாட்டுதல் என்ற முறையில் அடுத்த காலாண்டிலும் அடுத்த வருடம் இதே காலாண்டிலும் என்னவாக இருப்போம்.எவ்வளவூ சம்பாதித்திருப்போம்.எவ்வளவூ கையிருப்பு ரொக்கமாக வைத்திருப்போம் என்றும் சொல்லப்படுகிறது.இப்படி வழிகாட்டுதலாகச் சொல்லப்படுவதை கட்டாயப்படுத்தியூம் நிதித்துறை வைத்திருக்கிறது.
ஆனால் ஒரு தனி மனிதனான உங்களுக்கு?
உங்களது வருமானக்கணக்கு என்பது அவ்வப்போது உங்களது ஆடிட்டர் பார்த்து தோராயமாக ஏதாவது எழுதி சுமார் வரி கட்டுவதோடு முடிந்து போய் விடுகிறது.
உண்மையில் உங்களது நெட்வொர்த் அதாவது மொத்த மதிப்பு எவ்வளவூ? அந்த மொத்த மதிப்பின் தற்போதைய நிலை என்ன? இன்றைய தினம் அந்த மொத்த மதிப்பு உயர்ந்திருக்கிறதா குறைந்திருக்கிறதா என்றெல்லாம் கேட்டால் இந்த கேள்வியே இந்த பதிவே உங்களுக்கு அலுப்புத் தட்டுவதாக இருக்கும்.
ஒவ்வொரு பிறந்தநாளன்றும் கேக் வெட்டும்போது அந்த கேக்கை வெட்டுவதற்குள் ஒரு நிமிடம் நகர்ந்து நின்று யோசியூங்கள்.இந்த வருடம் வளர்ந்தீர்களா?எவ்வளவூ வளர்ந்திருக்கிறீர்கள்?இந்த வளர்ச்சி போதுமா? என்று யோசித்து வி;ட்டு கேக்கை வெட்ட ஆரம்பியூங்கள்.
ஆனால் இந்த வருடத்திற்கு ஒரு முறை கேக் வெட்டும்போது யோசிப்பதை நான் சிபாரிசு செய்ய மாட்டேன்.காரணம் ஒரு வேளை ஒரு வருட இடைவெளியில் உங்களது வளர்ச்சி சரியில்லை என்றால் அதனை சரிப்படுத்துவதற்கு இன்னும் ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும்.அதற்கு பதிலாக ஹார்லிக்ஸ்காரர்கள் போல தினமும் யோசித்து விட்டால்?
இன்றைக்கு ஹார்லிக்ஸ் குடித்தீர்களா என்று அவர்கள் விளம்பரப்படுவதன் நோக்கம் அதிகமான பேர்கள் ஹார்லிக்ஸ் வாங்க வேண்டும்.ஒரு வேளை இன்றைக்கு மறந்து விட்டு அல்லது இன்று ஒரு நாள் காபியோ டீயோ குடித்து விடப் போகிறார்களோ என்று முன்கூட்டியோ யோசித்து உங்களை மறக்காமல் ஹார்லிக்ஸ் குடிக்க வைக்கும் முயற்சியே அந்த விளம்பரம்.
நீங்களும் ஏன் அது போல உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ளக் கூடாது?
அதே கேள்விதான்
இன்றைக்கு வளர்ந்திருக்கிறீர்களா?
வருடத்திற்கு ஒரு முறை அல்லது காலாண்டிற்கு ஒரு முறை என்றால் வரவூ -செலவூக் கணக்கை நோண்டிப் பார்க்கலாம்.எவ்வளவூ வளர்ச்சி என்பதை தோராயமாகக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
தினமும் எப்படி கணக்கிடுவது?
தினமும் சாப்பிடுகிறௌமே அது எதற்காக?
தினமும் சாப்பிடாவிட்டால் சக்தி கிடைக்காதே.வேலை செய்ய முடியாதே.சம்பாதிக்க முடியாதே என்பீர்கள்.
சரிதானே.
அப்படியானால் தினமும் சேமிக்கலாம் அல்லவா?
தினமும் செலவூகளைக் கட்டுப்படுத்தலாம் அல்லவா?
தினமும் வேண்டுமென்றே சில செலவூகளைச் செய்யலாம் அல்லவா?
தினமும் சேமிக்கலாம்.சரி.
தினமும் செலவூகளைக் கட்டுப்படுத்தலாம்.சரி.
அதென்ன தினமும் சில செலவூகளைச் செய்வது?
ஒரு வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு ஆடம்பரமான பொருளை நீங்கள் வாங்கியே ஆக வேண்டும்.அது ஒரு காஸ்ட்லில பேனாவாக இருக்கலாம்.உடையாக இருக்கலாம்.பூட்ஸாகக் கூட இருக்கலாம்.அது மிக மிக உயர்ந்த பணக்காரர்கள் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.அவற்றில் ஒன்றே ஒன்றை நீங்கள் வாங்கியே ஆக வேண்டும்.அதனை ஒரே நாளில் வாங்க முடியாவிட்டாலும் இன்ன பொருளை இன்ன விலைக்கு வாங்கப் போகிறேன்.அதற்காக இந்த பணத்தை வீட்டிலேயே ஒரு டப்பாவில் சேர்த்து வைக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சேர்த்துக் கொண்டே வாருங்கள்.
இது எதற்காக என்றால் பணரீதியாக உங்களுக்கும் ஒரு லக்ஸரி வாழ்க்கைக்குமான சிறிய இணைப்பை சிறிய பாலத்தைப் போடுவதற்காக.இதனால் மனரீதியாக உங்களுக்கும் பணஉலகத்திற்கும் ஒரு இணைப்பு ஏற்படும்.
மற்றபடி சேமிப்பது.செலவூகளைக் கட்டுப்படுத்துவது என்றெல்லாம் உங்களது இஷ்டம் போல செய்யூங்கள்.
தினமும் உங்களது உடல் எடையை உங்களது இரத்த அழுத்தத்தை சோதித்துப் பார்த்துக் கொண்டே வருவது போல தினமும் உங்களது கையிருப்பை சொத்து மதிப்பை பார்த்துக் கொண்டே வாருங்கள்.
இன்னமும் எப்படி தினமும் வளர்ந்திருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளத் தெரியவிலலை என்றால் எப்படி என்று யோசியூங்கள்.எப்படி என்று மறுபடி மறுபடி உங்களிடமே கேள்வி கேளுங்கள்.அப்படியூம் தெரியவில்லை என்றால் என்னிடம் பேஸ்புக்கிலோ நமது தளத்தின் வாயிலாகவோ தொடர்பில் இருங்கள்.பணரீதியாக ஏதும் சந்தேகமோ ஆலோசனையோ வேண்டுமென்றால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்.
ஏனென்றால் மிகப் பெரிய பணஉலகில் நான் மட்டுமே தனியாக இருக்க விரும்பவில்லை.அங்கே உங்களுக்கான இடத்தையூம் நான் தயார் செய்ய விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon