எனது சொந்த அனுபவத்தில் இருந்தே இதனை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.எஃப்அன்ட்ஓ என்பது 2001ல்தான் தேதியப் பங்குச்சந்தையில் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு முன்பெல்லாம் ஈக்விட்டி மட்டும்தான் இருக்கும்.அதுவூம் முப்பதைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் என்எஸ்ஸியே (NSE) கிடையாது.சென்னைப் பங்குச் சந்தையில் பங்குகளை கூவிக் கூவி விற்பார்கள்.வாங்குகிற பங்குகளின் நிலைமை அதன் சர்ட்டிபிகேட் கையில் வரும்போதுதான் (அதன் ஃபேட் FATE அதாவது விதி தெரியூம் வரை காத்திருக்க வேண்டும்) அது நல்ல பங்கா வெத்து வேட்டா என்பது தெரியூம்.
அப்போதிருந்தே இன்று வரை என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.ஒரு கம்பெனியில் வேலை பார்த்தால் பண்டிகை கால போனஸ் வரும்.அதை வைத்து தீபாவளியை கொண்டாடி விடலாம்.நாம்தான் பங்குச்சந்தையை முழுமையான நம்பியிருக்கிறௌமே அதனால் நமக்கு நாமே ஒரு "போனஸ் தொகை"யைப் பெற ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டுக் கொள்ளலாம் என்று முடிவூ செய்தேன்.
ஈக்விட்டியில் வாங்கிய பங்குகளை இன்ட்ரா டே டிரேடிங்கிலோ அல்லது பொசிஷனல் டிரேடிங்கிலோ லாபநோக்கம் கருதி விற்கும்போது அவற்றில் 5 பங்குகளை மட்டும் விற்காமல் டிமேட் கணக்கில் அப்படியே கிடக்கட்டும் என்று விடுவேன்.இப்போதும் கூட ஆஃப்ஷனில் ஒரு பங்கை லாபத்தில் விற்கும்போது உதாரணமாக எஸ்பிஐ கால் ஆஃப்ஷனை விற்றால் ஈக்விட்டியில் 5 எஸ்பிஐ பங்கை வாங்கிப் போட்டுக் கொண்டு விடுவேன்.
இப்படி சில்லறை சில்லறையாக வாங்கிச் சேர்த்துக் கொண்டே வரும் பங்குகளை "ஆட் லாட்"(Odd Lots) பங்குகள் என்று அழைப்போம்.அதனை தீபாவளி வருவதற்கு சில வாரங்கள் முன்பாக எடுத்து அவற்றின் மதிப்பைக் கூட்டிப் பார்ப்பேன்.அந்த மதிப்பே சில லட்சங்களில் இருக்கும்.
தீபாவளி போனஸாக அந்த ஆட் லாட் பங்குகளில் பாதியை மட்டும் எடுத்து விற்று பணமாக்கி பண்டிகையைக் கொண்டாடி விட்டு மீதிப் பாதியை அப்படியே விட்டு வைத்து விடுவேன்.
அது எதற்கு?
சில வருடங்கள் அந்த பாதி ஆட் லாட் பங்குகளை அப்படியே விட்டு வைத்தால் அவை மிக பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும்.பல லட்ச ரூபாய்கள் மதிப்புள்ளதாக அவை உயர்ந்திருக்கும்.அதனை வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கவோ நகைககள் வாங்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு சொந்த உதாரணம்:
1990 கால கட்டத்தில் சத்யம் கம்ப்யூட்டரின் ஷேர் விலை ரூ 38 ஆக இருந்தது.அதனை சில முறை வாங்கி விற்று லாபம் பார்த்தபோது அவற்றில் ஐந்து ஐந்து பங்குகளாக நான்கு முறை சேர்த்ததில் 20 பங்குகள் சேர்ந்தது.
அதன்பின் இந்த 20 பங்குகளுக்கு ஒன்றுக்கு ஒன்று என்ற போனஸ் கொடுத்தார்கள்.ஆக இருபது பங்குகள் நாற்பது பங்குகளாகக் குட்டி போட்டன.
அதன்பின் சில ஆண்டுகளில் பங்குகளாக மாற்றக் கூடிய டிபென்சர்களை ஒன்றுக்கு ஒன்று என இலவசமாகக் கொடுத்தார்கள்.
ஆக 40 பங்குகள் 80 பங்குகளாக வளர்ந்தன.
அதன்பின் பங்கின் முகமதிப்பை 10லிருந்து 2ஆகப் பிரித்தார்கள்.ஆக இருக்கிற 80 பங்குகளை 5ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
எனவே முதலில் ஐந்து ஐந்தாகச் சேர்ந்த 20 பங்குகள் அப்போது 400 பங்குகளாகி விட்டன.
சத்யம் கம்ப்யூட்டர் மோசடியில் சிக்கும் சில மாதங்களுக்கு முன்பாக இதன் பங்கு மதிப்பு அதாவது ஒரு பங்கின் விலை ரூ 540ல் இருந்தது.இதற்கிடையே இன்னொரு முறை ஒன்றுக்கு ஒன்று என்ற இலவச போனஸ் பங்குகள் வேறு கிடைத்திருந்தது.ஆக மொத்த பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகி விட்டது.
ஆக 800 பங்குகளின் மதிப்பு என்னவானது?
சுமார் நான்கு லட்சங்களாகியிருந்தது.
முதலில் செய்த முதலீடு என்பது ஐந்து ஐந்தாக (அதாவது காசு கொடுத்து வாங்கவில்லை.லாபத்தில் கிடைத்ததில் மிச்சம் மீதியாக வைத்திருந்த ஐந்து ஐந்து பங்குகள்) இருபது பங்குகளுக்கு சுமார் ரூ 760 மட்டும்தான் முதலீடு.கையிலிருந்து காசு போடாமல் செய்த முதலீடு.
இது ஒரு உதாரணம் மட்டுமல்ல.இதே போல வேறு சில பங்குகளிலும் இது போல ஆட் லாட்களை வெவ்வேறு பங்குகளில் செய்த முதலீடுகள் ஜாக்பாட்டை தந்து கொண்டேதான் இருக்கின்றன.
இதெல்லாம் தெரியாமல் நம்மைப் பற்றி பொறாமைப் பிடித்த வயிற்றெரிச்சல்காரரான 'புல்லுவாகனம்" டேமேஜ் செய்யூம் விதத்தில் பேஸ்புக்கில் கமன்ட் போட்டு வருகிறார்.
இது போல நிறைய பங்குகள் இப்போதும் கிடைக்கின்றன.அவற்றை நீங்கள் பெற விரும்பினால் நமது "மில்லினேர் பங்குகளுக்கு" சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு முக்கியமான அறிவூரை என்னவென்றால் எதை விற்றாலும் அதில் சில பங்குகளைப் பிடித்துப்போட்டுக் கொண்டே வாருங்கள்.அவை எதிர்காலத்தில் கை கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் கால போனாஸாகவூம் அமைந்து உங்களை குதுரகலப்படுத்தும்.
ConversionConversion EmoticonEmoticon