"ஆடம்பரம் அதி நவீனம்..."
ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களிம் கேட்க விரும்புகிறேன்.
'இன்றைக்கு வளர்ந்திருக்கிறீர்களா?'
வளர்ச்சி என்பது உடலுக்கா மனதிற்கா பணவரவிற்கா என்று பதிலுக்கு நீங்கள் திருப்பிக் கேட்டால் நீங்கள் ஓரளவிற்கு விழிப்பு நிலையில் இருக்கிறீர்கள்.உடலுக்கான வளர்ச்சி என்பது குறிப்பிட்ட வயது வரைதான்.அதன்பின் உடலுக்கான முதிர்ச்சி மட்டும்தான் தொடர்ந்து வரும்.ஆனால் மனதிற்கான வளர்ச்சி என்பது எல்லையில்லாதது.அதைப் போல பணத்திற்கான வளர்ச்சியூம் அதுபோல்தான்.அதுவூம் எல்லையில்லாதது.
டிவியில் வந்து கொண்டிருக்கும் இந்துலேகா விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடிய எண்ணையை விற்கக் கூடிய நிறுவனம்.கேரளாவைச் சேர்ந்த இந்த விளம்பரங்களைப் பார்க்கும் போது ஏதோ இதுவூம் இன்னொரு விளம்பரம்தான் என்ற வகையில் அதில் வரும் மாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.ஆனால் இன்றைக்கு என்ன சேதி?
இந்த நிறுவனத்தை ஹிந்துஸ்தான் யூனிலீவர் விலைக்கு வாங்குகிறது.
என்ன விலைக்கு தெரியூமா?
500 கோடி ரூபாய்களுக்கு!
500 கோடிகள் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம்.எதையெல்லாம் சாதிக்கலாம்.சாதாரண தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் ஒரு எண்ணைக்கே ஐநுரறு கோடி விலை என்றால் எல்லா திறமையூம் இருக்கும் ஆனால் அந்த திறமைகளை நீங்கள் உணராதால் அப்படியே இருக்கிறீர்கள் என்பது வேறு விஷயம்.சரியாக உங்களை வெளிப்படுத்திக் கொண்டு விட்டால் உங்களது மதிப்பு எத்தனை கோடியாக இருக்கும்?
நேற்று கூட ஒரு வயிற்றெரிச்சல் பிடித்த பொறாமைக்கார அன்பர் பேஸ்புக்கில் என்னைப் பற்றி எழுதியிருந்தார்.இந்த டி.ஏ.விஜய் என்ன ராக்கேஷ் ஜூன்ஜூன்வாலா மாதிரி வாரன்பஃபட் மாதிரி பெரிய ஆளா?அவர்களைப் போல இவரது பெயர் செய்தித்தாள்களில் அடிபடுகிறதா என்று.
அதைப் படித்ததும் அந்த பொறாமைக்கார அன்பர் பொதுக்கழிப்பிடத்தில் கிறுக்கும் மனநிலை கொண்டவர் என்பதும் அவரது தாழ்வூமனப்பான்மை காரணமாக அவ்விதம் எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது.
நான் எதற்காக ராக்கேஷ்ஜூன்ஜூன்வாலா மாதிரியோ வாரன்பஃபட் மாதிரியோ வரவேண்டும்.இதுவரை எந்த நாட்டிலுமே இல்லாத அளவிற்கான ஒரு புதிய நபராகத்தான் நான் இருக்க ;விரும்புகிறேன்.இன்னொருத்தர் மாதிரி என்று நினைப்பதே கேவலமான விஷயமாகக் கருதுகிறேன்.
அந்த பொறாமைக்கார-தாழ்வூமனப்பான்மைக்கார அன்பருக்கு நன்றி!
என்ன சொல்ல வந்தேன்?
உங்களது மதிப்பு எத்தனை கோடிகளாக இருக்க வேண்டும்.அதை உணராமல் ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்திக் கொண்டு மிடில்கிளாசில் சிக்கிக் கொண்டு திரிகிறீர்கள்.
ஒரு சின்ன அசைன்மன்ட் செய்து பாருங்கள்.உங்களை நீங்களே உணர்வீர்கள்.ஆனால் இதற்கு சில ஆயிரங்கள் செலவாகும்.நேரே கடைத்தெருவிற்குச் செல்லுங்கள்.அங்கே ஒரு சுமாரான ஜவூளிக்கடையில் போய் உங்களுக்கு மிக மலிவான விலையில் முடிந்தால் தள்ளுபடியில் ஒரு சட்டைத்துணி மற்றும் பான்ட் பிட் எடுத்துக் கொள்ளுங்கள்.அதன்பின் நகரிலேயே பிரபலமாகவூம் பெரியதாகவூம் உள்ள ஒரு ரெடிமேட் ஷோரூமிற்குச் செல்லுங்கள்.அதில் ஒரு காஸ்ட்லியான பிரான்டட் சட்டையூம் பான்ட் அல்லது ஜீன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வாங்கிய சட்டைத்துணி பான்ட் பிட்டை உங்களது ஏரியாவில் உள்ள ஒரு சுமாரான டெய்லரிடம்(சுமாரான என்றால் பிரான்ட் வேல்யூ இல்லாத) தைக்கக் கொடுங்கள்.
துணி வைத்து வந்ததும் அதை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள்.நிச்சயம் கசகசவென்று உணர்வீர்கள்.ஒரு காஸ்ட்லியான ரெஸ்ட்டாரென்ட்டிற்குச் செல்லுங்கள்.அங்குள்ள பேரரின் பார்வையே உங்கள் மீது கேவலமாக விழுவதை உணர்வீர்கள்.வியர்த்து விறுவிறுத்துதான் அங்கேயிருந்து வெளியேறுவீர்கள்.அதன்பின் இன்னொருநாள் அந்த காஸ்ட்லியான ரெடிமேட் ஆடைகளை அணிந்து கொண்டு அதே ரெஸ்ட்டாரென்ட்டிற்குச் செல்லுங்கள்.வித்தியாசத்தை உணர்வீர்கள்.கம்பீரமாகவூம் ஒரு கனவான் போலவூம் உங்களை நீங்களே உணர்வீர்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் மிகப்பெரிய பணஉலகிற்குள் நீங்கள் வரவேண்டுமென்றால் நீங்கள் முதலில் ஒரு பெரும் பணக்காரராக இருக்க வேண்டுமென்பதில்லை.சிறுகச் சிறுக உங்களுக்கும் மிகப்பெரிய பணஉலகிற்கும் ஒரு விர்ச்சுவல் தொடர்பை ஏற்படுத்தலாம்.உதாரணமாக முதல்கட்டமாக ஒரு காஸ்ட்லியான பார்க்கர் பேனாவை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள்.உங்களது டூவீலருக்கான ஹெல்மெட்டை சுமாரான விலையில் சுமாரான டிசைனில் 'நல்லா உழைக்குமா"(இப்படி கேட்பது பணஉலகைப் பொறுத்தவரை கேவலமான கெட்ட வார்த்தை) என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே குறைந்த விலையில் வாங்காதீர்கள்.அமர்க்களமான அட்டகாசமான டிசைனில் காஸ்ட்லியாக ஒரு ஹெல்மெட் வாங்கித்தான் பாருங்கள்.ஓட்டுகிற வண்டி பழசானாலும் உங்கள் ஹெல்மெட் உங்களை ஒரு ஹீரோவாகக் காட்டி விடும்.ஒரு காஸ்ட்லியான மணிபர்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.கோடி ரூபாய்கள் கொடுத்து ஒரு டாப்என்ட் ஆடி கார் வாங்க முடியாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு காஸ்ட்லியான கைக்கடிகாரம் வாங்கிக் கொள்ளலாம் சில பல ஆயிரங்களில்.
இது போன்ற சின்னச் சின்ன அடிகளை சின்னச் சின்ன ஆடம்பரங்கள் வாயிலாக எடுத்து வைத்துக் கொண்;டே வாருங்கள்.
மிகப் பெரிய பணத்தைக் கொண்டிருக்கும் உலகத்திற்கான வாசல் உங்களுக்காக திறந்து கொள்ள ஆரம்பிக்கும்.
ConversionConversion EmoticonEmoticon