சிலபேர் என்னிடம் ஜாதகம் பார்க்க அணுகும்போது வருத்தத்துடன் கேட்கும் கேள்விகளில் ஒன்று.என்ன சார் பாவம் பண்ணினேன்.இத்தனை கஷ்டம் வருது.நல்ல வாய்ப்புகள் எல்லாம் தட்டிப்போய்கிட்டே இருக்கு.என்னை விட திறமை குறைவானவன் எல்லாம் கல்யாணம் கார் அபார்ட்மன்ட் ஃபாரின் ட்ரிப் என்று செட்டிலாகிக்கொண்டே இருக்கிறான் என்பார்கள்.
கடவூள்தான் எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் என்றால் ஏன் அவர் பாவப்பட்ட மனிதர்களைப் படைக்க வேண்டும்.படைக்கும்போதே ஒருவனை நல்லவனாகப் படைத்து விட்டால் அவன் பாவம் செய்யமாட்டான் அல்லவா.அதன்பிறகு அடுத்த பிறவியில் அவனது கர்மா பாதிக்கப்படாமல் நன்றாக இருப்பான் அல்லவா.ஆக தவறு படைத்த கடவூளின் மீது இருக்கிறதா இல்லை மனிதனின் மீது இருக்கிறதா என்று நேற்று கூட எங்களுடன் திருச்செந்துரர் பரிகாரப் பயணத்திற்கு வந்திருந்த ஒரு அன்பர் (திரைப்பட உதவி இயக்குநர்) கேட்டார்.
அவரிடம் நான் சொன்னேன்.
நீங்கள் 'கண்ணதாசத்'தனமாக யோசிக்கிறீர்கள்.
தவறு கடவூளின் மீது கிடையாது.
அவர் அனைவரையூம் சமமாகத்தான் படைத்து வருகிறார்.ஜோதிடத்தில் அஷ்டவர்க்கம் பயன்படுத்திப் பார்த்தால் எந்த மனிதரின் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கான மொத்த மதிப்பெண் 337தான் வரும்.டாடாபில்லாவூக்கும் இதுதான்.டாணாக்காரருக்கும் இதுதான் மதிப்பெண்.ஜோதிடத்தின் உதவியூடன் உங்களை வாழ்க்கையை எப்படி விக்கிரமாதித்தன் போல சமயோசிதமாக பயன்படுத்திக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும் என்று சொன்னேன்.
புரியவில்லை அய்யா என்றார்.
இது பற்றி நமது தளத்தின் மற்ற வாசகர்களுக்கும் புரியட்டுமே என்றுதான் இந்த பதிவூ.
நீங்கள் வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது சொந்த தொழில் செய்பவராக இருக்கலாம்.சிறிய தொழிற்சாலையோ அல்லது வணிக நிறுவனமோ வைத்து நடத்துபவராக இருக்கலாம்.
உங்களது ஜாகதத்தில் தொழில் ஸ்தானம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.வழக்கமாக எல்லா ஜோதிடர்களும் என்ன செய்வார்கள் என்றால் அந்த தொழில் ஸ்தானத்திற்குரிய கிரகத்திற்கும் அதன் அதிதேவதையாக குறிப்பிட்ட கடவூள் அம்சத்திற்கும் பரிகாரங்கள் செய்யச் சொல்வார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் அதுதான் அந்த ஸ்தானம் பாதிக்கப்பட்டிருக்கிறதே அதன்பிறகும் எதற்காக அதன்மீது சுமையை இறக்கி வைக்க வேண்டும்.ஒரு விளையாட்டுக் குழுவில் ஒருவன் நோஞ்சானாக இருக்கிறான் என்றால் அவனை உட்கார வைத்து விட்டு சப்ஸ்டிட்டியூட்டை களமிறக்க வேண்டும்.அது போல உங்களது ஜாதகத்தில் வலுவான கிரகம் எது என்று பார்த்து அதனை களமிறக்க அந்த வலுவான கிரகத்திற்குத்தான் பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
சரி கோச்சார ரீதியில் சனியோ குருவோ ராகு கேதுவோ உங்களது தொழில் ஸ்தானத்தை பாதிக்கப் போகின்றன என்று வைத்துக் கொள்வோம்.அல்லது ஜாதகரீதியிலேயே உங்களது தொழில்ஸ்தானத்தை இதுபோன்ற கிரகங்கள்(குறிப்பாக சனி) பாதித்துக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது பின்வருமாறு ஒரு சூட்சுமப்பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதனை நான் என் பாணியில் 'சாணக்கியப் பரிகாரம்" என்று குறிப்பிடுவேன்.
உதாரணமாக நிறைய தொழில் செய்பவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.அவர்கள் நடத்தும் நாலைந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஒன்றிரண்டு அல்லது மிகக் குறிப்பாக ஒரே ஒரு நிறுவனம் அதிகம் கவனிக்கப்படாமல் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கும்.இதனை அவர்கள் இன்கம்டாக்ஸ் கட்டும்போது வரிகளை அட்ஜஸ்ட் செய்து கொள்வதற்காக நடத்துகிறார்கள் என்றுதான் நினைப்பீர்கள்.அவர்களும் அதுபோன்ற காரணத்திற்காகத்தான் நடத்துபவர்களாக இருப்பார்கள்.ஆனால் அவர்களே அறியாமல் ஒரு சூட்சுமப்பரிகாரமாக இதனை செய்து வருபவர்களாக இருப்பார்கள்.
இன்னும் சுருக்கமாக இதனை புரியூமாறு சொல்கிறேன்.
உதாரணமாக சனி கிரகம் கோச்சார ரீதியிலோ ஜாதகரீதியிலோ உங்களது தொழிலை பாதிக்க வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் உங்களது மெயின் பிசினஸை அது பாட்டுக்கு போகட்டும் என்று கவனிப்போடு உரிய முறையில் நடத்தி வாருங்கள்.அத்துடன் புதிதாக ஒரு பிசினஸ் துவங்குவதாக சும்மா பெயருக்கு ஆரம்பியூங்கள்.ஆரம்பித்ததோடு சரி.அதில் எதுவூம் முதலீடு செய்யாமல் எதுவூம் செலவூ செய்யாமல் விட்டு விடுங்கள்.
எப்போதுமே நாமே கூட பழையதை விட்டு விடுவோம்.புதிதாக என்ன இருக்கிறது என்றுதான் பார்ப்போம்.அதைப் போல அந்த கிரகங்கள் உங்களது புதிய தொழிலைத்தான் நசுக்கப் பார்க்கும் என்பதால் சும்மா போக்கு காண்பிப்பது போல ஒரு பிசினஸை அந்த கிரகத்திற்கு காட்டி விட்டு அவற்றின் கவனத்தை திருப்பி விடுங்கள்.
அப்படி செய்தால் அந்த கிரகங்களின் பார்வை கவனம் எல்லமே நீங்கள் சும்மா டுபாக்கூராக காண்பிக்கிற தொழிலின் மீதுதான் இருக்குமே தவிர உங்களது மெயின் பிசினஸ் பாதிக்கவே பாதிக்காது.
சரி இது போல கிரகங்களை ஏமாற்றினால் அவை கோபம் கொள்ளாதா?இது முறையா?தவறில்லையா என்றெல்லாம் கேட்க வேண்டாம்.கிரகங்கள் என்பதை கடவூளால் எழுதப்பட்ட கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.கிரகங்கள் சிந்திப்பதில்லை.தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் அவை செய்யூம்.மனிதன் இது போல அழுகுணி ஆட்டம் ஆடினால் நீ வேறுவிதத்தில் அவனை அணுகவேண்டுமென்று தான் எழுதிய ப்ரோக்ராமில் இன்னொரு மாட்யூலை கடவூள் எழுதவில்லை.ஏனெனில் அத்தனை அப்பாவித்தனமானவர்தான் கடவூள்.அப்பாவித்தனம் என்றால் அன்பானவர்.குறுக்குவழியில் எல்லாம் அவர் யோசிக்கமாட்டார்.நீங்களும் நானும்தான் இப்படி யோசிப்போம்.
இப்படியெல்லாம் நாம் மாற்றி யோசித்து கிரகப்பிடியில் இருந்து தப்பிப்பது எல்லாம் தவறு கிடையாது.இவையே நமக்கு கிரகங்கள் கொடுத்த சிந்தனைதான் என்றே பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த டாபிக் பற்றி விரிவாக எழுத வேண்டும்.பின்னர் எழுதுகிறேன்.
ConversionConversion EmoticonEmoticon