இப்போது சிறிய டிரேடர்களில் இருந்து துவங்குவோம்.
பத்தாயிரம்.
இந்த பத்தாயிரம்தான் உங்களது துருப்புச்சீட்டு.இதை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டம் ஆடப்போகிறீர்கள்.இந்த பத்தாயிரம் போனால் போகட்டும் என்று ரிஸ்க் எடுக்கவூம் தயங்காதவர்கள் மட்டும் மேலே படியூங்கள்.மற்றவர்கள் இப்போதே பதிவை வாசிப்பதிலிருந்து விலகிக் கொள்ளவூம்.
பத்தாயிரம் ரூபாய்.
ஆஃப்ஷன் டிரேடிங்.
இன்ட்ரா டே டிரேங் மட்டும்தான்.
இதனை இரண்டு விதத்தில் அணுகப்போகிறௌம்.
பத்தாயிரத்தை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொள்வது.
ஆயிரம் ரூபாய் என்பதை தனியாகவூம் மீதமுள்ள ஒன்பதாயிரம் ரூபாய் என்பதை தனியாகவூம் பிரித்துக் கொள்ளவூம்.
இந்த ஒன்பதாயிரம் ரூபாயை (பெரிய டிரேடர்களாக இருந்தால் தொண்ணுரறாயிரம் ரூபாய் ) இன்ட்ரா டே டிரேடிங்கில் ஈடுபட வைத்து இதில் சிறுகச்சிறுக லாபம் என்று முயற்சிக்கப்போகிறௌம்.உதாரணமாக ரூ 4.00 என்ற விலையில் 1000 லாட் அளவூள்ள ஒரு பங்கை ஆஃப்ஷனில் வாங்கினால் இரண்டு லாட் ரூ 8000க்கு வாங்குவது.மீதமுள்ள ஆயிரம் அப்படியே இருக்கட்டும்.இதில் ஒரு லாட்டிற்கு 30 பைசா நிகரலாபம் வந்தால் கூட போதும் என்று நினைத்தால் இரண்டு லாட்டிற்கு நிகரலாபமாக ஒரு நாளைக்கு ஒரே டிரேடிங்கில் ரூ 600 கிடைக்கிறது.
அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 500 முதல் ரூ 1000 வரை 20 நாட்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 500தான் என்று வைத்துக் கொண்டால் கூட போட்ட முதல் பத்தாயிரத்திற்கு லாபமாக இன்னொரு பத்தாயிரம் ரூபாய் இந்த ஒன்பதாயிரம் ரூபாயிலிருந்து கிடைத்து விடுகிறது.
சரி இதுவரை நடந்தது இன்ட்ரா டே டிரேடிங்கிற்கான திட்டம்.
தனியாக எடுத்து வைக்கச் சொன்ன அந்த ஆயிரம் ரூபாய் எங்கே என்றுதானே நினைக்கிறீர்கள்.அதற்குத்தான் வருகிறௌம்.
ஆயிரம் ரூபாய்.
ஆனால் இன்ட்ரா டே டிரேடிங் கிடையாது.
இந்த ஆயிரம் ரூபாய் போனால் போகட்டும் கவலை இல்லை என்ற மனப்பாங்குடன் இதனை அணுக வேண்டும்.
ஒரே ஒரு அவூட் ஆஃப் மணி பங்கு.
லாட் அளவூ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அதில் ஒரு பங்கைப் பிடித்துப் போட வேண்டும் டெலிவரியாக.
எதற்காக என்றால் இந்த சிறிய விலை ஆஃப்ஷன் பங்கு ஜாக்பாட் அடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
திரும்பப் படித்துப் பாருங்கள்.
ரூ 1.00 விலையூள்ள 1000 லாட் அளவூள்ள பங்காக இருந்தால் ஒரு லாட் வாங்கினால் போதும். லாட் அளவூ 500 ஆக இருந்தால் இரண்டு லாட் வாங்க வேண்டும்.இதுவே பங்கின் விலையே ஐம்பது பைசாவாகவூம் லாட் அளவூ 1000 ஆகவூம் இருந்தால் இரண்டு லாட் வாங்க வேண்டும்.லாட் அளவூ 500 ஆக இருந்தால் நான்கு லாட்கள் வாங்க வேண்டும்.
சரி வாங்கியபின்?
சும்மா அடைக்காத்து வர வேண்டியதுதான்.இரண்டு வாரத்திற்குள் இந்த பங்கு ஜாக்பாட் லாபமாக அதாவது ரூ 1.00க்கு வாங்கியது ரூ 10.00க்கு சென்று விட்டால் பத்து மடங்கு லாபம் கிடைத்து நீங்கள் போட்டிருந்த ஆயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாயாகி விடும்.
இன்ட்ரா டேயாக செய்ததில் பத்தாயிரத்திற்கு பத்தாயிரம் லாபம் வந்தது.அதனை வெளியே எடுத்து விடுங்கள்.இந்த ஜாக்பாட்டில் ஒரு பத்தாயிரம் வந்தால் அதனை போட்ட முதலுடன் இணைத்து விட்டால் அடுத்த மாத முதலீட்டிற்கு இருபதாயிரம் தயார்.
அடுத்த மாதமும் இதே ஸ்ட்ராட்டஜிதான்.
இருபதாயிரம் நாற்பதாயிரமாக உயர்ந்து மூன்றாவது மாத முதலீட்டிற்கு நாற்பதாயிரம் கிடைத்து நான்காவது மாதம் எண்பதாயிரமாக மாறும்.இது அதற்கு அடுத்த மாதம் ஒரு லட்சத்தி அறுபதாயிரமாகும்.அதன்பின் அதுவூம் இரட்டிப்பாக இப்படியே சென்று கொண்டிருந்தால் எங்கே போய் நிற்கும்.
சரி இதெல்லாம் கேட்க வாசிக்க நன்றாக இருக்கிறது.நிஜத்தில் நடக்குமா? என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்.
பொறுமை.சகிப்புத்தன்மை.துணிச்சல்.நம்பிக்கை.பாதியில் விழுந்தாலும் மீண்டும் மறுமுதலீடு செய்து எழுந்தரிப்பது என்று இருந்தால் இது நடக்கும்.
அவசரம்.பயம்.அவநம்பிக்கை.எதையூம் ஓசியிலேயே எதிர்பார்த்தல்.பேராசை இதெல்லாம் இருந்தால் இந்த திட்டம் பலிக்காது.நடக்காது.
ஆனால் நடக்கும் என்ற மனம் இருந்தால் நடக்கும்.
சரி இப்போது என்ன மாதம்?
ஜூன் மாதம் நடக்கிறது.
தீபாவளி எந்த மாதம் வருகிறது?
நவம்பர் முதல் மாதத்தில் தீபாவளி வருகிறது.
அதற்கு ஏன் இப்போதே திட்டமிடக்கூடாது.
தீபாவளி மட்டுமல்ல.அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு கார் வாங்குவதற்கோ வீடு வாங்குவதற்கோ ஏன் திட்டமிடக்கூடாது.
திட்டமிடுவதோடு நின்றுவிடாதீர்கள்.
நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீம் எதிலாவது இணைந்து கொள்ளுங்கள்.பொறுமையாக நிதானமாக அவசரமின்றி முன்னேறுங்கள் அளவூ கடந்த பணவளத்துடன்.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon