"விவாயம்தான்..செய்யூங்கள்..."
பணம் பற்றிய மனோதத்துவ ரீதியிலான இந்த கட்டுரைகள் பற்றி பலரும் ஆச்சர்யப்படும் விதத்தில் பாராட்டுதல்களை நமக்கு தெரிவித்து வருகிறார்கள்.சில ஆசிரியர்கள் தங்களது வகுப்பில் இந்த கட்டுரைகளை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார்கள் என்பதும் மகிழ்வான விஷயமான இருக்கிறது.
நமது நாட்டில் பணக்காரர்கள் குறைவாகவூம் மிடில்கிளாஸ் ஆட்கள் அதிகமாகவூம் இருப்பதற்குக் காரணம் பாடத்திட்டங்களில் பணம் பற்றிய பாடங்கள் எதுவூம் இருப்பதில்லை.வெற்றிகரமான தொழிலபதிர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் இருப்பதில்லை.அதனால் வழக்கமான பாடங்களை வழக்கமாகப் படித்து வழக்கமான வாழ்க்கை வாழ மாணவர்கள் பழகிக் கொள்கிறார்கள்.
பணம் என்பதை மிக அதிக அளவில் சம்பாதிப்பது என்பதற்கு ஒரு அளவூகோல் வைத்தால் என்ன அளவில் நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்புவீர்கள்.
ஒரு லட்சம்.
ஒரு கோடி.
பல கோடிகள்...
அல்லது அதுக்கும் மேலே?
லட்சங்கள் எல்லாம் மதிப்பிழந்து போய் விட்டன.ஒரு கோடி என்பது இன்னும் கொஞ்ச நாட்கள் லைம்லைட்டில் இருக்கும்.அதன்பின் ஒரு கோடி என்பதும் மதிப்பிழந்து விடும்.சரி ஒரு வாதத்திற்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
எல்லா மனோதத்துவ சுயமுன்னேற்ற புத்தகங்களும் சொல்வது போல ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கப்போகிறேன் என்று கரூணாஸ் ஸ்டைலில் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தால் எதுவூம் நடக்கப்போவதில்லை.செயலில் இறங்க வேண்டும்.அப்படி செயலில் இறங்கும்போது சின்னச் சின்னதாக ஏன் ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் அந்த ஒரு ரூபாய் என்பது நீங்கள் சம்பாதிக்கப்போகும் ஒரு கோடி ரூபாயின் ஒரு அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.அழுக்கடைந்து போன பத்து ரூபாய் உங்களது கப்போர்டில் கிடந்தாலும் அதனை ஏதோ மீந்து போன பத்து ரூபாய் என்று நினைக்கக் கூடாது.அந்த பத்து ரூபாயூம் நீங்கள் சம்பாதிக்கப்போகும் ஒரு கோடி ரூபாயின் ஒரு அங்கம்தான்.பழைய செய்தித்தாள்களை கட்டி வைத்திருக்கிறீர்கள்.அதை எடைக்கு போடப்போகிறீர்கள் என்றாலும் அந்த கட்டி வைக்கப்பட்டிருக்கும் செய்தித்தாள்களும் நீங்கள் சம்பாதிக்கப் போகும் ஒரு கோடி ரூபாயின் ஒரு அங்கம்தான்.
சரி இதெல்லாம் இருக்கட்டும்.
நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கப்போகிறீர்கள் என்பதுதான் மெயின் கதை.அதற்கான திரைக்கதையை உங்கள் மனதில் நீங்கள் கற்பனையாக எழுதிக் கொண்டே வர வேண்டும்.
இதைச் செய்யப் போகிறேன்.அதைச் செய்யப் போகிறேன்.இதனால் அது கிடைக்கும்.அது இன்னும் பெரிதாகும்.அப்படி பெரிதாகும்போது அதனைக் கொண்டு இதைச் செய்ய வேண்டும்.இவற்றைச் செய்வதால் இன்னும்..இன்னும்..பெரிதாக வளரும் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் மனதில் கற்பனைக் குதிரையை ஓட்டுங்கள்.அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கட்டும்.அதில் லாஜிக் மீறல் இருந்தாலோ நிஜத்தில் இதெல்லாம் நடக்காது என்று உங்களது 'அறிவூஜீவித்தனமான' மனதிற்குத் தோன்றினாலோ அதனைச் சொல்லாதீர்கள்.அது பாட்டுக்கு உங்களது கனவூ விரியட்டும்.
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு உங்களது மனதில் ஒரு திட்டம் இருக்கிறது.நல்லது.அந்த திட்டம் அப்படியே இருக்கட்டும்.
ஆனால் அந்த திட்டத்தை உங்களது மனதிலுள்ள அந்த திட்டத்தின் வரைபடத்தை அந்த திட்டத்தின் திரைக்கதையை அவ்வப்போது மனதிற்குள் சென்று பார்த்து வர வேண்டும்.
இது எப்படி என்றால் ஒரு விவசாயம் செய்கிறீர்கள்.தரிசு நிலமென்று தெரிந்துதான் அதனை பண்படுத்தி சீர் செய்து விதை விதைக்கிறீர்கள்.அதன்பின் விவசாயத்தில் ஒவ்வொரு படியாக எப்படி வேலை செய்வீர்களோ எப்படி அதனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வீர்களோ அதைப் போல எப்படி அடிக்கடி சென்று உங்களது பயிர் நன்றாக விளைந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வீர்களோ அதைப் போல உங்களது மனதிலுள்ள ஒரு கோடி ரூபாய் திட்டத்தையூம் அவ்வப்போது அசை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நேரம் கிடைக்கிறபோதெல்லாம் என்பது மட்டுமல்ல.நேரம் கிடைக்காவிட்டாலும் பயணம் செய்யூம் போதோ துரங்குவதற்கு சற்று முன்னாலோ எங்காவது எதற்காக காத்திருக்கும் நேரத்திலோ நீங்கள் உங்களது மனதை அணுகி அங்குள்ள உங்களது ஒரு கோடி ரூபாய் திட்டத்தை மனக்கண்களால் பார்த்துக் கொண்டே வர வேண்டும்.ரசித்து நம்பிக்கையூடன் அந்த திட்டம் நடக்கப்போவதாய் நம்பிக் கொண்டே அவ்வப்போது பார்த்து வர வேண்டும்.
அப்படிப் பார்த்தால்..பார்த்துக் கொண்டே இருந்தால்...
உங்களது முதல் ஒரு கோடி நிஜமாகவே உங்களைத் தேடி வரும்.வாழ்த்துக்கள்.வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon