"ஏதாவது செய்து கொண்டே இருங்கள்"
ஒரு குறிப்பிட்ட வயது வரை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அதன்பின் ஒரு வேலைக்குச் செல்கிறீர்கள்.அதன்பின் திருமணம் செய்து கொள்கிறீர்கள்.வீடு கார் பிள்ளைகளுக்கான படிப்பு என்று வாழ்க்கை அதன்போக்கில் செல்கிறது.இந்த வாழ்க்கை நிறைவாக இருக்கிறதா?நிறைய பணம இருக்கிறதா?திருப்தியாக இருக்கிறதா? என்று கேட்டால் உங்களிடம் பதில் இல்லை.
போதுமென்ற மனம் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் எந்த வாழ்க்கையூம் திருப்தியாகவூம் நிறைவாகவூம் இருக்கலாம்.அவர்களை இங்கே கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.ஏனென்றால் மிகப்பெரிய பணஉலகில் போதுமென்ற மனம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடமில்லை.
நிறைய பணம் வேண்டும்.வளமாக வாழ்க்கை வேண்டும்.
ஒரு அல்ட்ரா லக்ஸரியான வாழ்க்கை எப்போதும் வேண்டும் என்று நினைப்பவர்களையூம் அப்படிப்பட்ட வாழ்க்கைக்காக ஏங்குபவர்களை மட்டுமே இங்கே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.இந்த விருப்பம் உங்களுக்கும் இருந்தால் அதை இந்த பிறவியிலேயே இன்னும் சில பல ஆண்டுகளிலேயே அடைந்து விட வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஏதாவது ஒரு வேலையில் இருக்கிறீர்களா?
நல்லது.நீங்கள் இந்த கனவூ வாழ்க்கைய அடைய சுமாரான வாய்ப்புகளே உள்ளன.
ஏதாவது ஒரு தொழிலை சுயமாக செய்கிறீர்களா?
மிகவூம் நல்லது.நீங்கள் இந்த கனவூ வாழ்க்கையை அடைய போதுமான வாய்ப்புகள் உள்ளன.
எதைச் செய்தாலும் போதுமான வருமானம் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
மிக மிக நல்லது.
உங்களுக்குத்தான் இந்த கனவூ வாழ்க்கையை அடைவதற்கான 100 சதவீத வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
எதையாவது செய்து கொண்டே இருங்கள்.தொழிலோ வேலையோ வியாபாரமோ எதை வேண்டுமானாலும் செய்து கொண்டே இருங்கள்.அதில் திருப்தி இல்லையென்றாலும் இதெல்லாம் வேலைக்கு ஆவாது என்று யார் சொன்னாலும் அதை நிறுத்தாதீர்கள்.தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.அந்த வேலை அல்லது தொழிலில் எதையாவது புதிதாக செய்து பார்க்க முடியூமா என்ற சோதனை முயற்சியையூம் அவ்வப்போது செய்து கொண்டே வாருங்கள்.எல்லாரும் என்ன சொல்வார்கள் என்றால் புதிதாக எதையூம் செய்யாதே.மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்து விட்டு போனால் போதும்.எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
இது சரிதான்.எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைப்பது கூட சரிதான்.ஆனால் கையைக் கடிக்காத அளவிற்கு சின்னச் சின்னதாய் எதையாவது புதிதாக செய்து பார்க்கலாமே.இதைத்தானே பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களது பொருளை மார்க்கெட்டில் மறுசந்தைப்படுத்தும்போது செய்கிறார்கள்.முற்றிலும் புதிய சுவையில்...புதிய கண்கவர் பாக்கிங்கில்...புதிய டிசைனில்...என்று இது போன்ற முயற்சிகளை நீங்களும் சின்னச் சின்னதாக செய்து பார்க்கலாம்.
இப்படி செய்கின்றபோது எதெல்லாம் தவறாகப் போய்விடுகிறதோ அதெல்லாம் தேவையில்லை போலிருக்கிறது என்று முடிவூ செய்து அதனை மறுபடியூம் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
இன்னும் சுலபமாகப் புரிய வேண்டுமென்றால் ஒரு உதாரணமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.
கோடி கோடியாய் விலை மதிப்புள்ள ஒரே ஒரு வைரத்தைக் கண்டு பிடிப்பதற்காக ஆயிரம் அல்லது பத்தாயிரம் கண்ணாடிக் கற்களை தோண்டியயெடுப்பதில் தவறில்லைதானே.அதாவது மண்ணைத் தோண்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.கண்ணாடிக் கற்கள்தான் கிடைக்கின்றன.பத்து கண்ணாடிக் கற்கள்.நுரறு கண்ணாடிக் கற்கள்.ஆயிரம் கண்ணாடிக் கற்கள்.அதற்கும் மேல் அதிக எண்ணிக்கையில் கண்ணாடிக் கற்கள்தான் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.சளைக்காமல் இந்த முயற்சியில் ஈடுபடும்போது என்றைக்காவது ஒருநாள் ஒரு விலையூயர்ந்த வைரம் கிடைக்கும்போது அத்தனை களைப்பும் தோல்வியூம் ஸ்விட்ச் போட்ட மாதிரி அகன்று போய் விடும்.
எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.அதில் முடிந்த வரை புதிய முயற்சிகளை உள்ளடக்கிக்கொண்டே வர வேண்டும்.அதில் எத்தனை முறை தோல்விகள் வந்தாலும் கவலையில்லை.முயற்சிகள் மட்டும் அதே களத்தில் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தானே விடாமுயற்சி வெற்றி தரும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.அதை இப்படி சுற்றி வளைத்துச் சொல்வானேன் என்று நீங்கள் கேட்கலாம்.இதற்கு முன் சொன்னவர்கள் விடாமுயற்சி என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார்கள்.நான் அத்துடன் ஏதாவது புதுமையாக சேர்த்துக் கொண்டே வாருங்கள் என்கிறேன்.எப்போதோ வரப்போகிற பிரம்மாண்டமான வெற்றிக்கு சின்னச்சின்ன தோல்விகளை பலி கொடுத்துக் கொண்டே வரலாம் என்று சொல்கிறேன்.
இந்த உலகம் என்பது ஒரு மடத்தனமானது.தன் அருகிலேயே இருப்பவனை அது எப்போதும் கவனிப்பதே இல்லை.எங்கோ உலகின் ஒரு மூலையில் இருப்பவனை தலையில் துரக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும்.தொடர்ந்த முயற்சிகளின் பலனாக என்றைக்காவது நீங்கள் வெளியில் பிரபலமாக அறிப்படும்போது அதே உலகம் ஈ என்று இளித்துக் கொண்டு உங்கள் முன் வந்து நிற்கும்.
எனவே இப்போது நீங்கள் கவனிக்கப்படாதவராக இருந்தாலும் பரவாயில்லை.இப்போது நீங்கள் அதிகம் சம்பாதிக்காதவராக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் எப்போதுமே தொடர்ந்த முயற்சிகளையூம் அதில் அவ்வப்போது புதுமைகளைப் புகுத்துவதையூம் மட்டும் நிறுத்தாதீர்கள்.
தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே வாருங்கள்.
அது உலகை உங்களை நோக்கி இழுப்பதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம்.உலகை மட்டுமல்ல பெரும் பணத்தையூம் செல்வத்தையூம் வளமான வாழ்வையூம் உங்களை நோக்கி இழுப்பதற்கான முயற்சியாக இருக்கலாம்.
எனவே எதையாவது செய்து கொண்டே இருங்கள்.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
(முற்றும்)
ConversionConversion EmoticonEmoticon