இப்போது ஒரு மானசீகமான பிராக்டிக்கல் பயிற்சி செய்யப்போகிறீர்கள்.ஒரு வீடு.அது உங்களது வீடுதான்.அந்த வீட்டின் ஒரு அறை.முக்கியமான பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளும் அறை.அந்த அறையில் ஒரு பீரோ இருக்கிறது.அந்த பீரோவின் உள்ளே உங்களை திணித்துக் கொள்ளுங்கள்.உங்களை பீரோவில் திணித்துக் கொண்டபின் அந்த அறையில் விளக்கை அணைத்து விட வேண்டும்.
இருட்டு.புழுக்கம்.அருகில் யாருமில்லை.
உங்களை நீங்கள் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
யாரும் வந்து உங்களைப் பார்ப்பதில்லை.அவ்வப்போது உங்கள் வீட்டிலிருந்து யாராவது வந்து பீரோவை திறப்பார்கள்.அவர்களுக்கு வேண்டுமளவிற்கு உங்களது கை விரல்களில் ஒன்றிரண்டையோ அல்லது சில சமயத்தில் கையையோ ஒடித்து எடுத்துக் கொண்டு மறுபடி உங்களை அதே பீரோவில் வைத்துப் பூட்டி விடுவார்கள்.
மூச்சு முட்ட மரணஅவஸ்தையில் உள்ளே அடைபட்டிருக்கிற உங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
என்ன புரிகிறதா?
பீரோவில் பணத்தை வைத்து பூட்டாதீர்கள் என்று சொல்வதற்கு எதற்காக இத்தனை கிலோமீட்டர் சுற்றி வளைத்துச் சொல்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்.
பீரோவில் பணத்தை வைத்துப் பூட்டாதீர்கள்.மறைவான எந்த இடத்திலும் மறைத்தோ ஒளித்தோ வைக்காதீர்கள் என்றால் அப்போதுதானே பணம் பத்திரமாக இருக்கும் என்பீர்கள்.பணம் வைப்பதற்கான இடம்தானே பீரோ என்பீர்கள்.
அது பணம்தானே.வெறும் காகிதம்தானே என்பீர்கள்.
அது காகிதம்தானே என்று வைத்துக் கொண்டால் ஆயூதபூஜையன்று எதற்காக உங்களது வண்டி வாகனத்திற்கு பொட்டு வைத்து பூ வைத்து வாழைமரம் கட்டி வழிபடுகிறீர்கள்.அது வெறும் இயந்திரம்தானே.அதற்கு உயிரா இருக்கிறது.அதற்கு மாலை மரியாதை வேண்டும் என்று அது கேட்டதா இல்லையே.அப்புறம் எதற்காக ஆயூதபூஜையன்று விசேஷ கவனிப்பு?
பணம் என்பதை நீங்கள் ஒரு உயிருள்ள பொருளாக உணரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.பணம் என்பது ஒரு அச்சிடப்பட்ட காகிதம்.அதற்கு உயிர் கிடையாது என்று எனக்கும் தெரியூம்.உங்களுக்கும் தெரியூம்.ஆனால் அதற்கு உயிர் இருப்பதாக உருவகப்படுத்திக் கொண்டால் அந்த பணத்தின் மீது ஒரு பரிவூ வரும்.ஒரு அன்பு வரும்.அதனை அலட்சியமாக கையாள மாட்டீர்கள் என்பதால்தான் சொல்கிறேன்.
பணத்தை அலட்சியமாகக் கையாள்பவர்களிடமும் பணத்தை அரக்கத்தனமாக சிக்கனம் கஞ்சத்தனம் என்ற பெயரில் அடக்கி பதுக்கி மறைத்து வைப்பவர்களிடம் பணம் வளரவே வளராது.அங்கிருந்து தப்பித்து செலவினம் என்ற பெயரில் வெளியே செல்லவே பார்க்கும் என்றுதான் சொல்ல வருகிறென்.
இன்னொரு விஷயத்தையூம் கவனியூங்கள்.
யாராவது நண்பரோ அலுவலத்தில் வேலை பார்ப்பவரோ திடீர் விருந்தினரோ உங்களிடம் கடனாக கைமாத்தாக பணம் பெறுவதற்காக ஆயிரமோ இரண்டாயிரமோ கேட்டால் உடனே என்ன சொல்வீர்கள்.
பணமே இல்லையே.ரொம்ப டைட்டா இருக்குஇநானே எங்க கடன் வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.ஒரு நாளைத்தள்ளறதே பெரிய சிரமமா இருக்குன்னு சொல்வீர்கள்தானே.
இங்கேதான் தவறு இருக்கிறது.
பணம் இல்லையென்று சொன்னால் அதை உங்களிடம் உள்ள ஒரு மட ரோபோ அதை அப்படியே நம்பும்.இவன் வேற மாதிரி.முன்னேற வழியில்லாதவன்.பணம் சம்பாதிக்க வக்கில்லாதவன் என்று அந்த மட ரோபோ அப்படியே உள்ளே தன் பதிவேட்டில் எழுதி வைத்துக் கொள்ளும்.அந்த மட ரோபோதான் உங்களது ஆழ்மனம்.அங்கே ஒரு முறை எழுதி வைத்து விட்டால் அதை ஆண்டவனே வந்தாலும் மாற்றுவது கடினம்.
இதற்கு பதிலாக என்ன சொல்லலாம்.
ரொம்ப நன்றாக இருக்கிறேன்.கையில் இருந்த பணம் எல்லாம் சரியான முதலீட்டில் இருக்கிறது.புத்திசாலித்தனமாக வாங்கிய பொருட்கள் அல்லது வீட்டிற்கான இஎம்ஐக்காக சென்று கொண்டிருக்கிறது.இப்போது கையில் பணம் இல்லாவிட்டாலும் நன்றாக சந்தோஷமாக இருக்கேன்.காரணம் எனது உபரியாக உள்ள பணம் நன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.இப்போது உங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் பணம் கை வசம் இல்லாவிட்டாலும் எனது பணம் என்பது வளர்ந்து கொண்டே இருக்கிறது.
நான் நன்றாக இருக்கிறேன்.ஆனால் இப்போது மட்டும் உதவியை என்னிடம் பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டமில்லாதவராக இருக்கிறீர்கள் என்று சொல்லி தப்பிக்கலாம்.
வார்த்தைகளை கவனியூங்கள்.
நீங்கள் அதிர்ஷ்டமில்லாதவராக இருக்கிறீர் என்று சொல்லச் சொல்லவில்லை.உதவி கேட்டு வந்தவர் உதவி பெறுவதற்கு அதிர்ஷ்டமில்லாதவராக இருக்கிறார் என்று சொல்லச் சொல்கிறேன்.
மானே தேனே பொன்மானே போட்டபின் இதையூம் எழுதனுமா என்றெல்லாம் கேட்காமல் உங்களது மட ரோபோ இதையூம் பதிவூ செய்து கொள்ளுங்கள்.
அதாவது உங்களது நண்பரோ உறவினரோ அவர்கள்தான் அதிர்ஷ்டமில்லாதவர்கள்.ஆனால் நீங்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்.உங்களது பணம் சரியான இடத்ததில் சரியானபடி வேகமாக வளர்ந்து வருகிறது.எனவே நீங்கள் ஒரு எதிர்கால கோடீஸ்வரர் என்று தன் பதிவேட்டில் எழுதிக்கொள்கிறது.
பொதுவாக என்ன சொல்கிறேன் என்றால் பணத்தைப் பரிவோடு பாருங்கள்.அன்போடு நடத்துங்கள்.மதிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.கட்டின மனைவியையே அப்படி நடத்துவதில்லை.வெறும் காகிதத்தை அப்படி நடத்த முடியூமா என்று சந்தேகித்தால் பணம் உங்களை அலட்சியமாக நடத்தும்.இவனிடம் நாம் இருப்பதற்கு பதிலாக வெளியே தப்பபித்து சென்று விடலாம் என்று வெளியே சென்று விடும்.
இப்போது ஒரு விஷயத்தை கவனியூங்கள்.
பணத்தோடு பழகினால் பணம் அருகிலேயே இருந்தால் பெரும் கோடீஸ்வரர் ஆகி விடலாம் அல்லவா.ஆனால் ஏன் வங்கிகளில் பணிபுரிபவர்களால் ஒரு பெரும் கோடீஸ்வரர் ஆக முடியவில்லை.ஒரு வாரன்பாஃபட் ஒரு பில்கேட்ஸ் ஒரு அம்பானி ஒரு மிட்டல் போன்று எந்த வங்கிப் பணியாளராலும் எந்த வங்கி மேலாளராலும் ஏன் வரமுடியவில்லை.
இதற்கு ஒரே காரணம் அவர்கள் வங்கிகளில் பணத்தை வெகு அலட்சியமாக நடத்துவார்கள்.பணத்தை கொண்டு வந்து வங்கியில் செலுத்து காத்திருக்கும் பணத்தை கையிலேயே வைத்திருக்கும் மக்களிடம் முட்டாள்தனமாக எரிந்து விழுவார்கள்.
நான் பேசிப் பழகியவரை வங்கிகளில் பணிபுரியூம் குமாஸ்தாக்களும் சரி வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி சீனியர் மேலாளர்களும் சரி பணம் என்ற விஷயத்தின் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் சேமிப்பு(சிறுசேமிப்பை சொல்லவில்லை) முதலீடு பணத்தைக் கையாளும் திறன் எதுவூம் தெரியாத ......................ஆகவே இருக்கிறார்கள்.
அதனால்தான் வங்கியில் பணிபுரிபவர்களால் அவர்கள் அருகிலேயே அத்தனை பணம் இருந்தும் முன்னேற முடியவில்லை.அது போகட்டும்.
நீங்கள் முன்னேறுங்கள்.நீங்கள் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கிற பணத்தை மேன்மையூடன் நடத்துங்கள்.
பணம் உங்களது நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பணத்தை பீரோவில் பூட்டினாலும் அன்போடு நடத்துங்கள்.யாரிடம் எப்போது பேசினாலும் பணம் இல்லையென்று சொல்லாதீர்கள்.பணம் முதலீட்டில் இருக்கிறது.வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.
நீங்கள் விரும்புகிற பணம் எப்போது உங்களை விரும்ப ஆரம்பிக்கிறதோ அப்போதே நீங்கள் உயர ஆரம்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon