ஆடித் தள்ளுபடியா?
இந்த பணம் என்கிற வஸ்து இருக்கிறதே அதுதான் உலகத்திலேயே புத்திசாலித்தனமானது.ஏன் உங்களை விடவூம் அது புத்திசாலித்தனமானது.தான் எங்கே இருக்க வேண்டுமென்பதை அது மிகச் சரியாக தீர்மாணித்து அங்கே சென்று விடும்.தான் எங்கே இருக்க வேண்டுமென்பது மட்டுமல்ல தான் எப்படி வளர வேண்டுமென்பதும் அதற்குத் தெரியூம்.ஆனால் அதை துரத்திக் கொண்டு ஓடும் உங்களுக்குத்தான் பணத்தின் குணாதியசம் புரியவில்லை.வெற்றாக அதனை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்து விட்டு பாதியில் மூச்சு வாங்க ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் நின்று விடுகிறீர்கள்.
ஏன் பணத்தை உங்களால் துரத்திப் பிடிக்க முடியவில்லை என்று என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் இப்படியே இந்த மிடில்கிளாஸிலோ அல்லது அதிக அவஸ்தையான இடமான அப்பர் மிடில்கிளாஸிலேயே இருக்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?
காலையில் வெளியே கிளம்புகிறீர்கள்.மாலையில் வருகிறீர்கள்.படுத்து உறங்கி விட்டு மறுநாளும் வெளியே கிளம்புகிறீர்கள்.பறவைகள் பறந்து போய் விட்டு கூடு திரும்புவதைப் போல இதுதான் உங்களது ரொட்டீன்.ஆனால் இந்த பணம் இருக்கிறதே அது எப்போதும் எங்கேயூம் அடைந்து கிடக்க விரும்புவதில்லை.அடுத்து அடுத்து இன்னும் இன்னும் என்றும் மேலே மேலே என்றும் பறந்து செல்வதையே விரும்புகிறது.
அதனால் பணத்தின் தன்மை அதன் குணம் புரிந்து விட்டால் அதனை நீங்கள் பெரிய அளவில் கைப்பற்றுவது சுலபம்.
இதனை செய்வதற்கு உங்களிடம் இன்னொரு குணம் அவசியம் இருந்தாக வேண்டும்.இப்போதே கூட நீங்கள் வெளியில் கிளம்பி எங்காவது புத்தகங்கள் விற்கிற கடைகளுக்குச் சென்று பாருங்கள்.அந்த புத்தகக்கடைகளில் சுயமுன்னேற்ற புத்தகங்கள் விற்கிற இடத்திற்குச் சென்று பாருங்கள்.அந்த சுயமுன்னேற்ற புத்ததகங்களை எடுத்து தரும் விற்பனையாளரின் உடைகள் முகம் உடல்மொழி ஆகியவற்றை கவனித்துப் பாருங்கள்.அவரிடம் ஒரு பணப்பற்றாக்குறையூம் தன்னம்பிக்கைக்குறைவூம் கண்களில் எதிர்காலம் குறித்த பயமும் இருக்கும்.அந்த புத்தகக்கடையின் உரிமையாளர் அல்லது மேலாளரிடம் சென்று புத்தக விற்பனை எல்லாம் எப்படி இருக்கிறது என்று கேளுங்கள்.
எங்க?
யார் புத்தகம் படிக்கிறார்கள்.வாசிப்புப் பழக்கமே குறைந்துபோய் விட்டது.சும்மா பெயருக்கு கடையை நடத்திட்டு வர்றௌம் என்றுதான் அங்கலாய்ப்பார்.
ஏனென்றால் அவர்கள் அந்த புத்தகங்களை குறிப்பாக சுயமுன்னேற்ற புத்தகங்களையூம் காகிதக் கொத்துக்களாகத்தான் பாவித்து விற்பனை செய்து வருகிறார்கள்.அவை பணம் தரும் வஸ்து என்பதை அவர்கள் உணர்வதேயில்லை.உணர்ந்திருந்தால் அவர்கள்தான் முதலில் உலகமகா கோடீஸ்வரார்களாகியிருந்திருப்பார்கள்.
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
அதென்ன இன்னொரு குணம்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் புத்தாக்கப் பயிற்சி தருவதற்காக பெங்களுருவிலிருந்து மாதவன் என்றொரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் வந்திருந்தார்.ஒரு ரிஸார்ட் போன்ற இடத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி.பொதுவாக சில அசைன்மன்ட்டுகளும் குழுக்களாகப் பிரிந்து உரையாடுதலுமாகப் பொழுது போனது.ஒவ்வொரு முறை எனது பதில்சொல்லும் பாவனையைப் பார்த்து விட்டு அவர் என்னை தனியாக அழைத்து-
'நீங்க பேசறது.பதில் சொல்றது எல்லாம் வித்தியாசமா இருக்கே"என்றார்.
அவருக்கு நான் அப்போது என்ன காரணம் என்பதை சொல்லவில்லை.இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.
எந்த சுயமுன்னேற்ற புத்தகங்களிலும் எந்த சுயமுன்னேற்றப் பயிற்சியிலும் 'நிகழ்காலத்தில் வாழுங்கள்.எதிர்காலத்தை கற்பனை செய்யூங்கள்" என்பார்கள்.
ஆனால் நான் எப்போதும் எதிர்காலத்தில்தான் வாழ்வேன்.அப்படி எதிர்காலத்தில் வாழ்வதாக பழகிக்கொண்டு யோசிக்கும்போது எனது ஷேர் டிரேடிங்கில் கூட ஒரு பங்கின் அடுத்த கட்ட விலை உயர்வூ எங்கே போய் நிற்கும் என்பதைக் கூட சில சமயங்களில் துல்லியமாக கண்டுபிடிக்க முடிகிறது.
எனவே பணத்தை பெரும் பணத்தை அடைய வேண்டுமென்றால் பணம் என்பதே பணக்காரர்களிடமதான் சென்றடையூம் என்பதால் நீங்கள் முதலில் உங்களை ஒரு பணக்காரராக உணருங்கள்.அப்படி உணர ஆரம்பித்து விட்டால் உங்களது "எதிர்கால" பணக்கார வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று நீங்கள் தீர்மாணித்து விட்டால் அந்த மட சாம்பிராணியான பணம் என்ற அடிமை உங்களிடம் பெரும் திரளாக வந்து குவிந்து விடும்.
எனவே ஆடித்தள்ளுபடியில் ஏதாவது சீப்பாக கிடைக்குமா என்று அலைவதை விட்டுத்தள்ளுங்கள்.பதிலாக ஆடி கார் அதன் டாப் வேரியன்ட்டில் ஒரே பேமன்ட்டில் வாங்க முடியூமா என்று யோசியூங்கள்.
உங்களால் முடியூம்.
வாழ்த்துக்கள்! வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon