"ஒவ்வொரு அடியாக"
பெரிய பணக்காரர்கள் பெரிய தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் பெரிய நெட்வொர்க் உடையவர்கள் தவிர மற்ற எல்லாரும் அவரவர் லெவலுக்கு தினமும் கஷ்டப்பட்டும் சலிப்போடும் பொறுமையோடும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தால் நீங்கள் உங்களது பொருளாதார நிலைமை குறித்து கழிவிரக்கம் சுயபச்சாதாபம் கொள்ள மாட்டீர்கள்.
எத்தனையோ முயற்சி செய்து பார்க்கிறேன்.எதுவூம் நடக்கவில்லை.போகாத கோவில் இல்லை.வேண்டாத தெய்வம் இல்லை.என்ன செய்தாலும் விளங்க மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சில சமயங்களில் உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.
ஆனால் இது உண்மையில்லை.
சற்று பொறுமையாக நிதானமாக அமர்ந்து யோசித்தால் எல்லா கஷ்டங்களும் கானல்நீரைப் போன்றதே.எல்லா தேடல்களும் எல்லா முயற்சிகளும் புதையல் எடுப்பதைப் போன்றதே.
சிலருக்கு மட்டும்தான் சரசரவென்று வாழ்க்கை மேலே போகிறது.சிலருக்கு தினசரி வாழ்வதே கூட ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.ஒரு நாளை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது போன்ற நினைப்பை முதலில் தொலைவில் விட்டெறியூங்கள்.
புதையல் எடுப்பதையே உதாரணமாக வைத்துக் கொள்ளலாம்.கடும் வெய்யில் மற்றும் கடுங்குளிர்.அதாவது பகலெல்லாம் கடும் வெய்யில்.இரவெல்லாம் கடும் குளிர்.இது போன்ற நிலைமையில்தான் கௌபாய் படங்களில் புதையல் எடுக்க அலைவார்கள்.அது போல நீங்களும் உங்களது தினசரி வாழ்வை கவனித்துக் கொண்டே பெரும் பணம் சம்பாதிப்பது மிகப் பெரிய கோடீஸ்வரராவது என்பதை ஒரு புதையல் எடுக்கும் முயற்சியாக நினைத்துக் கொண்டால் சிலருக்கு தேடிய உடனேயே சில அடிகள் தொலைவிலேயே புதையல் கிடைத்து விடலாம்.அந்த புதையலில் மதிப்பு பல லட்சங்கள் இருக்கலாம்.ஆனால் உங்களுக்கு எங்கு தேடியூம் எதுவூம் கிடைக்கவில்லை என்று நினைக்கக் கூடாது.சிலருக்கு தேடிய உடனேயே எதுவூம் கிடைத்து விடாது.தேடலை நிறுத்தாமல் தேடிக்கொண்டே இருந்தால் பல தொலைவூகள் கடந்தபின்னர் பல முயற்சிகள் கடந்த பின்னர் உங்களுக்கும் ஒரு புதையல் கிடைக்கும்.ஆனால் அந்த புதையலின் மதிப்பு தேடிய உடனேயே கிடைத்ததே சிலருக்கு பல லட்ச ரூபாய் அதை விட பல மடங்கு அதிகமாக மில்லியன் ட்ரில்லியன் டாலர் பணமாக உங்களுக்கு ஒரு மெகா-புதையலாகக் கிடைத்து விடக் கூட வாய்ப்பிருக்கிறது.
இதனை நீங்கள் நம்பவேண்டுமென்பதில்லை.
நீங்கள் எந்த துறையில் இயங்குகிறீர்களோ அதே துறையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வாருங்கள்.அருகில் ஒரு குப்பைத் தொட்டியை வைத்துக் கொள்ளுங்கள்.அதில் மானசீகமாக உங்களது வெறுப்பு ஆற்றாமை இயலாமை பொறாமை கவலை அவநம்பிக்கை போன்றவற்றை எல்லாம் போட்டுக் கொண்டே வாருங்கள்.
கடவூள் கூட அப்படித்தான்.
யார் எந்த அளவிற்கு வலிமை கொண்டிருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் எதையூம் கொடுப்பவராக இருக்கிறார்.
கோழிகள் பறப்பதில்லை.அதற்கு நடக்கும் சக்தியை மட்டுமே தந்திருக்கிறார்.அவற்றில் சில பறக்கலாம்.
குதிரைகள் ஓட மட்டுமே செய்கின்றன.அவை நடப்பதில்லை.பறப்பதும் இல்லை.அதனால் அவற்றிற்கு ஓடக்கூடிய சக்தியை மட்டும் கொடுத்திருக்கிறார்.
பறவைகள் மட்டுமே பறக்கின்றன.அதனால்தான் அவற்றிற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறார்.
அதனால் கடவூள் வருகிறாரா.அல்லது வேடிக்கை பார்க்கிறாரா அல்லது உதவூகிறாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.அதனை எதிர்பார்க்கவூம் வேண்டாம்.
முயற்சிகளை மட்டுமே தொடர்ந்து செய்யூங்கள்.இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்பதாக உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.ஏனென்றால் இந்த பொறாமைக்கார சுயநல அவசர உலகில் உங்களை நீங்கள் மட்டும்தான் தட்டிக் கொடுக்க வேண்டும்.மற்றவர்கள் வரமாட்டார்கள்.நீங்கள் வெற்றி பெற்றவூடன் வேண்டுமானால் வந்து ஒட்டிக் கொண்டு ஆதாயம் பார்ப்பதற்காக வருவார்கள்.அதற்காக அவர்களை குறை சொல்ல வேண்டாம்.இது வாழ்வியல் இயல்பு.இது இப்படித்தான் இருக்கும்.
புதையல் வேண்டுமல்லவா?
பெரும் பணம் வெண்டுமல்லவா?
வாழ்க்கையின் உச்சிக்குப் போய் செட்டில் ஆக வேண்டுமல்லவா?
முன்னே செல்லுங்கள்.ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துச் செல்லுங்கள்.ஒரு நாளைக்கு ஒரு அடியாக எடுத்து வைத்தால் கூட போதும்.அதன்பின் தானே உங்களுக்கு வேகம் வந்து விடும்.கார் ஓட்டுவதைப்போலத்தான் இதுவூம்.
இப்போது முதல் கியரைப் போடுங்கள்.
நீண்டசாலைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.அந்த நீண்ட சாலையிலன் முடிவில் உங்களுக்கான புதையலும் காத்திருக்கின்றன.
எனவே..
அட உங்களது முதல் அடியை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டீர்களே.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon