இது ஒரு மீள்பதிவூ:
மேஷம்:
கமாடிட்டியில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கத்தில் துணிந்து தக்க பாதுகாப்பான ஸ்ட்ராட்டஜிகளுடன் டிரேடிங் செய்து இந்த வருடம் காசு பார்க்கலாம்.
பரிகாரம்:முன்னோர்களையூம் மகான்களையூம் வழிபடுங்கள்.
ரிஷபம்: இந்த வருடம் ஷேர்மார்க்கெட்டில் புத்திசாலித்தனத்துடன் ஈடுபடவில்லையென்றால் நஷ்டம் வருவதை தவிர்க்க இயலாது.பொதுவாக லாங் போவதை விட ஷார்ட் செல்லிங்தான்(ஆஃப்ஷனாக இருந்தால் கால் வாங்குவதற்கு பதிலாக புட் வாங்குதல் நலம்) உங்களுக்கு லாபம் தருவதாக அமையூம். ஒரு டிரேடிங்கில் கிடைத்த லாபம் அடுத்த டிரேடிங்கில் அடித்துக் கொண்டு போய்விடும் வாய்ப்பு இருப்பதால் டிரேடிங்கில் கிடைக்கும் லாபப்பணத்தில் பென்னிப் பங்குகளாக ஈக்விட்டியில் வாங்கி வைத்து விடுங்கள்.மறந்தும் கமாடிட்டியில் இந்த ஆண்டு பெரும் பணத்தை போட வேண்டாம்.
பரிகாரம்: முருகனின் திருத்தலங்கள் அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபடலாம்.
மிதுனம்:இன்ட்ரா டே டிரேடிங் செய்யலாம்.நீண்டகால முதலீடும் மேற்கொள்ளலாம்.ஆனால் ஒரு வாரம் ஒரு மாதம் சில மாதங்கள் என்ற குறுகிய கால முதலீடு நஷ்டத்தை தருவதாக இருப்பதான் அதனை தவிர்க்க முயற்சிக்கவூம்.சிறிய முதலீட்டை வைத்துக் கொண்டு ஆஃப்ஷன் போன்ற சிறிய முதலீட்டுக் களங்களில் இன்ட்ரா டே டிரேடிங் செய்ய ஆரம்பித்தால் ஒரு வருடம் முடிவதற்குள் பெரும் தொகை சேரும் வாய்ப்பிருக்கிறது.நீண்டகால நோக்கில் சிறிய பங்குகளை(பென்னி ஸ்டாக் போன்றவை) வாங்கி வைத்தால் கோடீஸ்வர யோகமும் உங்களுக்கு இருக்கிறது.இந்த ஒரு வருடம் உங்களுக்கு ஷேர் டிரேடிங்கில் பொன்னான வருடம்.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரம்:நின்ற கோலத்தில் இருக்கிற மகாவிஷ்ணுவை வழிபடுங்கள்.முடிந்தால் புதன்கிழமைகளில் துளசி மாலை வாங்கி சார்த்துங்கள்.
கடகம்:வீட்டில் எப்போதும் ரொக்கமாக பணத்தை வைக்காதீர்கள்.அது பலன் தராத இனங்களில் செலவாகி விடும்.இந்த ஒரு வருடம் நீங்கள் சரியாக சோர்வின்றி செயல்பட்டால் ஷேர் டிரேடிங்கில் நன்றாக சம்பாதிக்கலாம்.ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கில் இந்த வருடம் உங்களை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.துணிந்து டிரேடிங் செய்யலாம்.வருகிற லாபத்தை தங்க நகைகளாக மாற்றிக் கொண்டே வாருங்கள்.அதாவது திருமணமாகியிருந்தால் உங்களது ஷேர் டிரேடிங் வருமானம் உங்களது மனைவிக்கு நகைகளாக செல்லும்.வாழ்த்துக்கள்!
பரிகாரம்:உங்களது மனைவியின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் உள்ள இடத்திற்கு சென்று அவர்களை உங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.திருமணமாகாதவராக இருந்தால் திருமணம் நடந்து விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்பதால் வேறு பரிகாரங்கள் தேவையில்லை.
சிம்மம்:திமிர் பிடிவாதம் செருக்கு தன்னம்பிக்கை ஆணவம் இப்படி எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.அந்த குணம் உங்களது பிறவிக்குணமாக அமைந்து அதுவே ஒரு நெகட்டிவ்வாகி விடுகிறது.இந்த வருடம் பிடிவாதம் ஈகோ காரணமாகவூம் பொறுமையின்றியூம் என்ன ஆகப்போகிறது இன்னும் வைத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்தாலும் அடிக்கடி ஷேர் டிரேடிங்கில் நஷ்டம் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் உங்களது சுயஜாதகத்தைப் பார்த்து அதற்கேற்ப பரிகாரத்தை செய்து கொண்டும் தக்க ஆலோசனையூடன் ஷேர் டிரேடிங்கில் ஈடுபட்டால் இந்த வருடமும் பொன்னான வருடமே.கிடைக்கிற லாபத்தில் நீண்டநாட்களுக்கான பங்குகளாக வாங்கிப் போடுங்கள்.
பரிகாரம்:ஸ்ரீரடிசாய்பாபா சத்யசாய்பாபா ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்களை வழிபட்டு வாருங்கள்.வியாழக்கிழமைகளில் இயன்றால் கோவிலுக்குச் சென்று நவக்கிரக குருவிற்கு நெய்விளக்கேற்றி வாருங்கள்.
கன்னி:இனி ஷேர் டிரேடிங்கில் இதுவரை இருந்து வந்த நஷ்டம் விரையங்கள் குறைந்து விடும்.இன்ட்ரா டே டிரேடிங்கில் தைரியமாக ஈடுபடலாம்.முடிந்தவரை ஷார்ட் செல்லிங் செய்வது நல்லது.ஆஃப்ஷன் போன்ற சிறிய களத்திலும் நிஃப்டி போன்ற இனங்களிலும் நீங்கள் இந்த வருடம் நன்றாக டிரேடிங் செய்யலாம்.
பரிகாரம்:ஷேர் டிரேடிங்கில் கிடைக்கிற லாபத்திலிருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து அதனை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் இதுவரை இருக்கும் உங்களது கடனுக்காக என்று ஒரு சிறிய சிவப்புத் துணியில் முடிந்து வைத்து விட்டு பின்னர் அதனை எடுத்து அந்த கடன்களுக்காக செலுத்தி விட்டால் இந்த ஒரு வருடத்தில் உங்களது பழைய கடன்களில் பெரும் தொகை அடைபட்டு விடும் வாய்ப்பிருக்கிறது.
துலாம்: இனி விரையச் செலவூகள் உங்களுக்கு குறைந்து போக ஆரம்பிக்கும்.ஊண் உறக்கமின்றி இனி நீங்கள் சுறுசுறுப்பாக ஷேர் டிரேடிங்கில் குறிப்பாக ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் சிறிதளவூ ரிஸ்க் எடுக்கக் கூடிய டிரேடிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.இந்த ஒரு வருடத்தை சற்று துல்லியமாக திட்டமிட்டு ஷேர் டிரேடிங்கில் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.ஏனெனில் சனி உங்களது வாக்கில் அமர்ந்துள்ளான்.உங்களது டிரேடிங்கில் வரும் லாபத்தை நீங்களே கெடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் உரிய சிறப்பு பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.
பரிகாரம்:சிவன் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் சண்டிகேஸ்வரரையூம் தட்சிணாமூர்த்தியையூம வணங்கி வரும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.குலதெய்வ வழிபாட்டுடன் உங்களது வீட்டை எவ்வளவூ சுத்தமாக வைத்துக் கொள்ள முடியூமோ அவ்வளவூ சுத்தமாக வைத்துக் கொண்டு வேண்டாத பழசு பரட்டை சாமான்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருங்கள்.இதுவூம் ஒரு பரிகாரம்தான்.
விருட்சிகம்:இந்த வருடம் ஷேர் டிரேடிங்கில் பலவிதமான ஷேர்களை இழுத்துப் போட்டுக் கொண்டு உங்களை நீங்களே குழப்பிக் கொண்டு ஓவர் டிரேடிங் செய்து நஷ்டமாக வாய்ப்பிருக்கிறது.இதனை தவிர்க்க தகுந்த ஆலோசனையூடன் அளவான டிரேடிங் செய்யூங்கள்.டிரேடிங்கைப் பொறுத்தவரை இந்த வருடம் உங்களுக்கு ஃபார்மாதுறை பங்குகள் அபாரமான லாபம் மட்டுமல்ல ஜாக்பாட் லாபம் தர காத்திருக்கின்றன.உங்களது டிரேடிங்கை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
பரிகாரம்:வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று அங்குள்ள முருகனை வழிபட்டால் நல்லது.அப்படி செல்ல முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் 33 வாரம் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றினால் இந்த வருடம் ஷேர் டிரேடிங்கிலிருந்தே பணம் சம்பாதித்து சொந்தமாக வீடு வாங்க முடியூம் வாய்ப்பு தெரிகிறது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுசு:
சற்று சிக்கலான வருடம்தான்.வித்தியாசமாக எதையூம் செய்கிறேன் என்று நீங்களாகவே உங்களுக்கான தோல்வியை தேடிக்கொள்வீர்கள்.ஸ்பெகுலேட்டிவ்வாக டிரேடிங் செய்யலாம்.வித்தியாசமான எந்த முயற்சிகளையூம் டிரேடிங்கில் கையாளாமல் எல்லோரும் செல்லும் பாதையிலேயே நீங்களும் செல்லுங்கள்.கிடைக்கிற லாபத்தை டிரேடிங் அக்கவூன்ட்டிலேயே விட்டு வைக்காமல் வெளியே எடுத்து நகை சீட்டு அல்லது தங்கக்காசுகள் என்று வாங்கி வைத்து விடுங்கள்.எக்ஸ்போஷரில் டிரேடிங் செய்ய வேண்டாம்.புதிய டிரேடிங் கம்பெனிகளை அவர்கள் எத்தனை பெரிய ஆஃபர் கொடுத்தாலும் நம்பி விட வேண்டாம்.வித்தியாசமான எதையூம் இந்த வருடம் செய்ய வேண்டாம்.
பரிகாரம்:மகான்களையூம் ஜீவசமாதிகளையூம் மனதால் நினைத்து வழிபடுங்கள் பேHதும்.
மகரம்:
இந்த வருடம் சிறப்பாக வருடமாக அமைய வேண்டுமென்றால் அதனை சாமர்த்தியமான முயற்சிகளாலும் சமயோசித புத்தியாலும்தான் சாதிக்க வேண்டியிருக்கிறது.லாங் செல்வதை விட ஷார்ட் செல்லிங் உங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.ஃபார்மா துறை பங்குகள் இந்த வருடம் உங்களுக்கு அட்சயப் பாத்திரம் போல செயல்படும்.கமாடிட்டியில் இந்த வருடம் டிரேடிங் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நிஃப்டியில் ஷார்ட் அடியூங்கள்.நிஃப்டி ஆஃப்ஷனில் புட் எடுத்து டிரேடிங் செய்யூங்கள்.ஒரு சில ரியல்எஸ்டேட் பங்குகளும் உங்களுக்கு கை கொடுக்கும்.
பரிகாரம்:வியாழக்கிழமைகளில் இயன்றால் விரதம் இருங்கள்.மனதிற்குப் பிடித்த மகான்கள் யாரையாவது தியானித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
கும்பம்:
இந்த வருடம் ஷேர் டிரேடிங்கில் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் நிறைய பணத்தை சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது.ஒரு சிலர் இந்த வருடம் ஃபாரெக்ஸ் டிரேடிங்கிலும்(சரியான நிறுவனமாகப் பார்த்து தேர்ந்தெடுத்து டிரேடிங் செய்யூங்கள்) பெரும் பணத்தை அள்ளலாம்.எனவே கிடைக்கிற லாபத்தை சொத்துக்களாக மாற்ற முயற்சி செய்யூங்கள்.
பரிகாரம்:வடக்கு நோக்கிய அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.
மீனம்:
எதிலும் வாக்குவாதம் செய்து உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.நிதானமாக ஒரே சீராக ஷேர் டிரேடிங்கை அமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.அதிகம் ஆசைப்படாமல் கிடைக்கிற லாபத்தை வெளியே எடுத்து வேறுவகையில் பொருட்களாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.தங்க நகைகளில் இப்போது முதலீடு செய்ய வேண்டாம்.கடந்த கால ஷேர் டிரேடிங் நஷ்டங்கள் தீர்வதற்கு உங்களது சுயஜாகத்தின் அடிப்படையில் சிறப்பு பரிகாரங்களை செய்து கொண்டால் ஷேர் டிரேடிங்கின் வாயிலாகவே நீங்கள் நன்றாக சம்பாதிக்க முடியூம்.
பரிகாரம்:திருச்செந்துரர் முருகனை எப்போதும் மனதில் நினைத்திருங்கள்.இயன்றால் ஒரு முறை திருச்செந்துரர் முருகனை சென்று வழிபடுங்கள்.அப்படியே அருகே உள்ள சரவணபவன் அண்ணாச்சியின் 'வனதிருப்பதி' கோவிலுக்குச் சென்று அங்குள்ள பெருமாளையூம் சேவித்து விட்டு வாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon