இந்த தலைப்பை வாசித்ததும் நிச்சயம் இந்த பக்கம் வந்திருப்பீர்கள்.ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்ற சந்தேகம் மனதில் வலுவாக எழுந்திருக்கும்.
அதெப்படி?
ரூ 163 ஒரே வருடத்தில் ஒரு கோடியாகும்?
இதை செய்வதற்கு மந்திரம் கிந்திரம் ஏதும் வேண்டுமா?ஏதாவது ஈமு கோழி போல மோசடி ப்ளானா என்றெல்லாம் குழம்பியிருக்கத் தோன்றும்.
இனி மெதுவாக சொல்வதை கவனித்துக் கொண்டே வாருங்கள்.பங்குச்சந்தை விடுமுறையில்(இன்றைக்கு ஹோலி!) இருக்கும் நாட்களில் நான் பொதுவாக சில விஷயங்களை நமது தளத்தில் எழுதுவதுண்டு.இந்த பொதுக்கட்டுரையை வாசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறதென்று தெரியூம்.
மேற்படி வித்தையை நாம் பங்குச்சந்தையில் செய்து பார்க்கலாம்.அதுவூம் இன்ட்ரா டேயில்தான் (intraday trading) செய்து பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு உங்களுக்கான முதலீட்டுத் தொகை வெறும் ரூ 163தான்.இந்த தொகையில் இன்றைய கால கட்டத்தில் ஒரு டிபன் கூட சாப்பிட முடியாது.ஒரு சினிமாவூக்குக் கூட போக முடியாது.ஆனால் பங்குச்சந்தையில் வாணவேடிக்கை நிகழ்த்த முடியூம்.
எப்படி தெரியூமா?
செயல் திட்டம் இதுதான்.
இன்ட்ரா டே டிரேடிங்தான் செய்ய வேண்டும்.
முதலீட்டுத் தொகை ரூ 163 மட்டுமே.ஆனால் இங்கே ஒரு காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம்.ரூ 163க்கு எதுவூமே செய்ய முடியாது என்பதால் நமக்கு குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தேவை.அதனால் ஆயிரம் ரூபாய்தான் முதலீட்டுத் தொகையாக இருக்கப்போகிறது.பின்னர் நாம் சம்பாதித்ததும் 1000ல் 163ஐக் கழித்து மீதமுள்ள ரூ 837ஐ தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.
இன்ட்ரா டே டிரேடிங்கில் இந்த ஆயிரம் ரூபாயைப் பயன்படுத்தி டிரேடிங் செய்தால் ஒரு நாளைக்கு 3 சதவீத லாபம் வந்தால் போதும்.அன்று மாலை நமது கணக்கில் உள்ள ரூ 1000வூடன் 3 சதவீதமான 1030ஐ மறுநாளைக்கு டிரேடிங் செய்ய பயன்படுத்தப் போகிறௌம்.
ஒரு நாளைக்கு ஒரு டிரேடிங்.
1000 ரூபாயைப் பயன்படுத்தி ரூ 100 விலையூள்ள பங்கினை 10 எண்ணிக்கையில் வாங்கினால் ரூ 1000 சரியாகப் போயிற்று.அந்த பங்குகளை 3 சதவீத லாபத்தில் விற்றால் கிடைக்கும் லாபம் ரூ 30 ஆக இருக்க வேண்டும்.இங்கே ப்ரோக்கரேஜ் தொகையை கணக்கிடவில்லை.
ஒரு நாளைக்கு ஒரு டிரேடிங்.அதில் 3 சதவீத லாபம் என்பது சில சமயங்களில் வொர்க்அவூட் ஆகாது.அதனால் ஒரு நாளைக்கு 3 டிரேடிங் செய்ய வேண்டும்.ஒவ்வொரு டிரேடிங்கிலும் 1 சதவீத லாபம் கிடைத்தால் போதும்.
உதாரணமாக 100 விலையூள்ள பங்கினை ரூ 100க்கு வாங்கி (10 என்ற எண்ணிக்கையில்) ரூ 101க்கு விற்றால் போதும்.இங்கே ஒரு பங்கிற்கு 1 ரூபாய் என்பது லாபம்.இது போல மூன்று முறை ஒரே பங்கிலோ அல்லது வெவ்வேறு பங்கிலோ செய்தால் போதும்.
ஒரு நாளைக்கு ரூ 1000க்கு ரூ 30 லாபம் கிடைக்கும்.
சரி செய்கிற டிரேடிங்கெல்லாம் லாபகரமாகத்தான் இருக்குமா?நஷ்டமே வராதா?ஸ்டாப்லாஸ் ட்ரிக்கர் ஆகி விடாதா என்றெல்லாம் சந்தேகம் கேட்கலாம்.
நஷ்டம் வருவதற்கு 100 சதவீத வாய்ப்பு சந்தையில் இருக்கிறது என்றாலும் நாம் வதவதவென்று அதிக அளவில் இன்ட்ரா டே டிரேடிங் செய்யப்போவதில்லை.
ஒரு நாளைக்கு 3 முறைதான்.அதிலும் ரொம்ப ரொம்ப கவனமாக பார்த்துப் பார்த்து காத்திருந்து விட்டு இது சரியாக வரும் என்று தெரிந்தால்தான் ஆர்டரைப் போடப்போகிறௌம்.
மேலும் 'ஜாபிங்' (Jobbing)என்றொரு முறை இருக்கிறது.இந்த முறையில் டிரேடிங் செய்பவர்களை 'ஜாபர்ஸ்' என்றே அழைப்பார்கள்.வடமாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் பங்குத் தரகு நிறுவனங்களே 'ஜாபர்களை ' சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள்.இவர்களுக்கு கல்வியறிவூ என்று எதுவூம் தேவையில்லை.ஆங்கிலத்தில் வாசிக்க மிக வேகமாக கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
இதை எப்படி செய்கிறார்கள் என்பதை இங்கே பொதுவெளியில் வெளிப்படையாக சொல்ல முடியாது.
வேக வேகமாக ஆர்டர் போடுவது என்பதுதான் இந்த டிரேடிங்கில் உள்ள சூட்சுமம்.ஆனால் நான் சொல்வது நாள் முழுக்க டிரேடிங் செய்ய வேண்டாம்.ஒரு நாளைக்கு மூன்றே மூன்று டிரேடிங்தான்.அதை தப்பில்லாமல் சரியாகச் செய்தால் போதும்.ஒரு நாள் கூட டிரேடிங் தப்பாகாதா?நஷ்டம் வராதா என கேட்கலாம்.அதற்காக வேண்டுமனால் ஒரு நாளைக்கு நான்கு டிரேடிங் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் இந்த திட்டத்தின்படி ஒரு நாளைக்கு மூன்று டிரேடிங் போதும்.
இப்படி செய்தால் முதலீட்டுத் தொகையான ரூ 163 எப்படி வளர்கிறது என்று கீழே கொடுத்துள்ள டேட்டாவைப் பாருங்கள்:
(ரூ 163ஐ வைத்துத்தான் கீழேயூள்ள கணக்கைப் போட்டிருக்கிறேன்.ரூ 1000ஐ கணக்கில் கொள்ளவில்லை)
முதல் நாள் கிடைக்கும் தொகை: ரூ 168 (தோராயமாக)
பத்தாவது நாள் வளர்ந்திருக்கும் தொகை: ரூ 213
ஐம்பதாவது நாள் வளர்ந்திருக்கும் தொகை: ரூ 723
நுரறாவது நாள் வளர்ந்திருக்கும் தொகை: ரூ 3,122
இருநுரறாவது நாள் வளர்ந்திருக்கும் தொகை: ரூ 65,655
முன்னுரறாவது நாள் வளர்ந்திருக்கும் தொகை: ரூ 13,80,901
அதன்பின் கடைசியாக ஒரு வருட முடிவில் வளர்ந்திருக்கும் தொகை: ஒரு கோடியாக இருக்கும்.
இங்கே ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தால் ரூ 163 முதலீடு செய்து முதல் ஒரு லட்ச ரூபாய் என்பது 214வது நாளில்தான் கிடைக்கிறது.அதன்பின்தான் இந்த ஓட்டம் டேக்ஆஃப் எடுத்து வேகமாக முதலீடு வளர ஆரம்பிக்கிறது.அதற்காக ஒரு லட்ச ரூபாய்தான் முதல்போட்டு இதை செய்ய வேண்டுமென்பதில்லை.
சாதாரணமாக ஒரு ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கி நீங்களே ஹாய்யாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு டிரேடிங்கை 163 ரூபாயை மட்டும் முதலாகப் போட்டு செய்து பாருங்கள்.
ஆனால் ஒன்று வேக வேகமாக ஒரு 'ஜாபரைப் போல" உங்களுக்கு டிரேடிங் செய்திருக்க வேண்டும்.
அவநம்பிக்கையை புறந்தள்ளி விட்டு செய்து பாருங்கள்.அடுத்த வருடம் என்னை தேடி வந்து பாராட்டுவீர்கள்.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get more ideas & stock trading tips
1 comments:
Click here for commentsபடிக்க நல்லாத்தான் இருக்கு. சரி, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு கோடி ரூபாயாக மாற்றிவிட முடியுமா?
ConversionConversion EmoticonEmoticon