நேற்றைய பதிவில் ஐடி & சாப்ட்வேர் நிறுவனங்கள் குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் பற்றி எழுதியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.பேஸ்புக் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள் என்றாலும் அதே வேலையில் சிலர் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.வளைத்தளத்தின் ஹிட்டிற்காக இது போன்று எழுதுவதாக தவறாக நினைத்திருக்கிறார்கள்.
ஐடி சாப்ட்வேர் நிறுவனங்களில் நிலைமை அந்த நிறுவனங்களில் உள்ளே கீழ்நிலை நடுநிலை அதற்கு மேற்பட்ட நிலைகளில் பணிபுரிபவர்களுக்கு சரிவர தெரியாது.அந்த நிறுவனங்களின் போர்டில் இருப்பவர்களுக்கும் அந் நிறுவனங்கள் தொடர்பான கணக்குகளை தணிக்கை செய்பவர்களுக்கும் அவர்கள் சார்ந்த பங்குச்சந்தையில் உள்ள நிபுணர்களுக்கும்தான் மேல் விபரங்கள் சரியாகத் தெரியூம்.
ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தால் ஐடி சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது வேலை பத்திரமாக உள்ளதா இல்லை எதிர்காலத்தில் நகர்த்தப்பட்டு விடுமா என்று பரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதம் வரும்போதே கம்பெனிகளில் க்யூ3 ரிசல்ட் சரியில்லாது இருக்கும் போல என்று கிசுகிசுத்தார்களானால் நிலைமை சரியில்லை என்று அர்த்தம்.அலுவலகத்தில் ஸ்டேஷனரிகளுக்கு கட்டுப்பாடு(குறிப்பாக டாய்லட் பேப்பரில்தான் கை வைப்பார்கள்) அலுவலர்களை அழைத்து வரும் கேப்களில் கட்டுப்பாடு(சேர்ந்தாற்போல வாங்களேன்.தனிக் கார் எல்லாம் கிடையாது) இந்த வருடம் ஃபேம்லி டே கிடையாது.எல்டிசிக்கு முனகல் அப்புறம் எச் ஆர் ஆட்கள் எதற்கெடுத்தாலும் குடைந்து கொண்டு கடுப்படித்துக் கொண்டே இருந்தால் என்னவோ சரியில்லை என்று அர்த்தம்.பொதுவாக கம்பெனிக்கு பெருத்த நஷ்டம் வந்திருக்காது. லாபத்தில் அதுவூம் ஐரோப்பாவிலோ சைனாவிலோ எங்கோ ப்ராஜக்ட் கிடைக்காமல்(இப்போதெல்லாம் சைனாவில் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு அங்குள்ள கவர்மென்ட் கான்ட்ராக்ட் கிடைப்பதில்லை தெரியூமா?) போகும்போது அது மிக மிக சின்னதாய் லாபத்தில் துண்டு விழுந்திருக்கும்.ஆனால் இது போல நிறைய ஆர்டர்கள் மிஸ் ஆகிப் போய் கம்பெனி திவாலாகி விடுமோ என்ற அற்பமான கற்பனை பயத்தில் அந்த ஐடி முதலாளிகள் இருப்பார்கள்.இதை எப்படி முயன்றாலும் மறைத்து வைக்க முடியாது.பங்குச்சந்தையில் எதிரொலித்து விடும்.போதாதா.அந்த பங்குகளை அடித்து(ஷார்ட் செல்லிங்) துவைத்து எடுத்து விடுவார்கள்.
இன்னொன்றையூம் ஐடி சாப்ட்வேர் அன்பர்கள் யோசித்துப் பாருங்கள்.நீங்கள் எல்லாம் ஆன்கேம்பஸ் இன்டர்வ்யூவில் உள்ளே வந்தவர்களாக இருக்கலாம்.இந்த வருடம் எத்தனை கம்பெனிகள் ஆன்கேம்பஸூக்கு வந்திருக்கிறாரக்ள்.ஆஃப்கேம்பஸ் என்ற பெயரில் தக்கணியூண்டு ஐடி கம்பெனிகளை எல்லாம் கொண்டு வந்து இன்ஜினியரிங் காலேஜில் ஜாப்மேளா என்று காமடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏழாயிரம் எட்டாயிரம் மாச சம்பளம் தருகிறேன் என்று டை கட்டிய கனவான்களும் கோதுமை கலர் எச்ஆர் பெண்மணிகளும் வேiலை வேண்டுமா என்று இன்டர்வ்யூ செய்கிறார்கள்.
எப்படி தெரியூமா?
வாட்ஸ் யூர் நேம்?
இந்த கேள்விக்கு மட்டும் மவனே நீ பதில் சொல்லு பார்ப்போம் என்று தலை சாய்த்து முறைப்பார்கள்.தன்னுடைய பெயரை தட்டுத் தடுமாறி சொல்லு மாணவர்களுக்கு உடனே ஆஃப் கேம்பஸில் வேலை.
சம்பளம் ஏழாயிரம் வரை.ஆனால் பேசினபடி சம்பளம் கொடுப்பார்களா என்பதை அவர்களிடம் போய் வேலை பார்த்தால்தான் தெரியூம்.
ஐடி சாப்ட்வேர் வேலை என்றால் எச்சிஎல் டிசிஎஸ் சிடிஎஸ் இன்ஃபோசிஸ் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறௌம்.சென்னையில் கிண்டியில் போய் பாருங்கள்.ஒலிம்பியா டெக் பார்க் என்ற இடம் இருக்கிறது.எல்லாம் பிபிஓ கம்பெனிகள்.அதில் நிறைய ஃபேக்(Fake)கம்பெனிகள் இருக்கின்றன.இன்ஜியரிங் கல்லுரரி மாணவர்களுக்கு ப்ராஜக்ட் ரிப்போர்ட் டகால்டியாக காப்பியடித்து அடித்து தருபவர்கள் எல்லாம் தன்னை ஐடி கம்பெனி என்று சொல்லிக்கொண்டு தென்மாவட்டத்து கல்லுரரிகளில் வந்து ஆஃப்கேம்பஸ் நடத்துகிறார்கள்.பாதிக்கு மேல் என்று சொல்ல முடியூமா என்று தெரியவில்லை ஒலிம்பியா டெக் பார்க்கில் போங்கு கம்பெனிகள்தான் இருக்கின்றன.
இந்த புற்றீசல் போன்ற டகால்டி கம்பெனிகள் எல்லாமே ஐடி சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு சிரமதசை என்பதை காட்டிக்கொடுக்கும் காரணிகள்தான்.
எனவே எச்சரிக்கை.
மீண்டும் சொல்கிறௌம்.ஐடி சாப்ட்வேர்கள் அவ்வளவூ செழிப்பமாக இல்லை.பிழைக்கிறவன் பிழைக்கிறான்.மற்றவன் பிச்சைதான் எடுக்கிறான் என்பதுதான் உண்மை.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get intraday updates & stock pics
2 comments
Click here for commentsஆமா ஐ.டி ல பிச்ச எடுக்கிரவனெல்லாம் இவுருகிட்ட அக்கவுண்டு ஓபன் பண்ணுங்க..ஷேர் மார்க்கெட்டுல இவுரு ஒங்களுக்கு கோடி கொடியா சம்பாதிக்க வழி சொல்லுவாரு..
Replyஐ.டி டவுன் ஆனா பிச்ச எடுக்கணும்..சரி ...ஷேர் மார்க்கெட்டு டவுன் ஆனா சுருக்கு மாட்டிக்கனுமே..மாட்டிக்கிரியா??
அன்புள்ள சுணா அவர்களுக்கு.தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.ஐடி டவூன் ஆனா பிச்சை எடுக்கனும் என்று எழுதவில்லை.ஒலிம்பியா டெக் பார்க் போன்ற இடங்களில் இருந்து வந்து ஆஃப்கேம்பஸ் இன்டர்வ்யூவில் நாலு லட்சம் வரை செலவூ செய்து நான்காண்டுகள் இன்ஜினியரிங் படித்த மாணவர்களை மாதம் ரூ ஏழாயிரம் சம்பளத்திற்கென்று இழுத்துப் போய் அடிமாடு போல நடத்துகிறார்களே.அது பிச்சையெடுப்பதற்கு சமம்தானே.யோசித்துப் பாருங்கள்.நான்கு ஆண்டுகள் கனவூகளோடு வங்கிக் கடன் பெற்று நாலு லட்சம் வரை செலவூ செய்து விட்டு வெளியே வந்தால் ஐடி சாப்ட்வேர் வேலை என்று பிபிஓ, ஐஇஎல்டிஎஸ் என்று கொண்டு போய் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் என்று(பல கம்பெனிகள் சம்பளமே கொடுப்பதில்லை.சம்பளம் கேட்டால் வெளியே தள்ளி விட்டு அடுத்த அடிமாட்டை உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள்) சிக்க வைப்பது எத்தனை அநியாயம்.இது குறித்து நாஸ்காமும் மூச்சு விடுவதில்லை.உங்களைப் போல ஐடி சாப்ட்வேர்துறையில் மாதம் ஐம்பதாயிரம் என்று கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு ஆனால் உங்களைப் போலவே கனவூகளுடன் வந்து அடிமாடாகிப் போகிற அப்பாவிகளைப் பற்றி நீங்கள் உரத்து பேசுவதில்லை.ஒரு எதிர்ப்புக் குரல் கூட கொடுப்பதில்லையே.ஷேர் மார்க்கெட் டவூன் ஆனால திரும்ப உடனே மேலே வந்து விடும்.லாஜிக் தெரிந்து டிரேடிங் செய்கிற யாருமே நஷ்டமடைவதில்லை.பேராசையூடன் திட்டமிடுதல் இல்லாமல் வருகிற சிறுமுதலீட்டாளர்கள் மட்டும்தான் காலங்காலமாக ஷேர்மார்க்கெட்டில் நஷ்டமடைகிறார்கள்.மற்றவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Replyஎனினும் கோபப்படாதீர்கள்.பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.புரியூம்.உங்களால் முடிந்தால் ஐடி சாப்ட்வேர் வேலை என்று பாடாவதி கம்பெனிகளில் மாட்டிக்கொண்டிருக்கும் யாராவது ஒரு இளைஞருக்கு ரெஃபரன்ஸ் கொடுத்து உதவி செய்யூங்கள்.தொடர்ந்து நமது தளத்திற்கு வருகை தாருங்கள்.No hard feelings!
ConversionConversion EmoticonEmoticon