"பெட்டிக்கு வெளியே வாருங்கள்"
பங்குச்சந்தை விடுமுறையில் உள்ள நாட்களில் நான் எழுதும் இது போன்ற கட்டுரைப் பதிவூகளுக்கென்றே நமது தளத்திற்கு வருகை தரும் வாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தொடர்பு கொண்டு இன்றைக்கு இன்னும் பதிவூ போடவில்லையா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.இதோ கதவைத் திற காசு வரட்டும் அடுத்த அத்தியாயம்.
நாம் அனைவருமே வசதியாக வாழ ஆசைப்படுகிறௌம்.ஆனால் எப்படிப்பட்ட வசதி என்று யோசித்துப் பார்த்தால் ஒரு வேலை.திருமணம்.குழந்தைகள்.சொந்த வீடு.ஒரு கார் என்று ஒரு சின்ன வட்டம்தான் போட்டுக் கொள்கிறௌம்.இதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலில் வேலை.
வேலை என்றால் புதிதாக வேலை தேடுவோர்கள் ஒரு எம்என்சி கம்பெனியில் நாற்பதாயிரம் ரூபாய் வேலை கிடைத்தால் போதுமென்று திருப்தியடைந்து விடுகிறார்கள்.அதே நேரத்தில் ஏன் வேலை என்பது மாச சம்பளமாக நான்கு லட்சம் என்று கேட்பதற்கு மனம் வரவில்லை.இல்லை அது போன்ற வேலைகள் கிடையாதா?டேய்..கிடைக்கற வேலைக்கே அவனவன் போட்டிக்கு வந்து நிற்கிறான்.இதுல நாலு லட்சத்துக்கு வேலை உங்கப்பனா கொடுப்பான் என்று சப்தம் போடத் தோன்றும்.ஆனால் நாலு லட்சம் சம்பளம் தரும் வேலைகள் இருக்கின்றன.அந்த வேலைகளுக்கான ஆட்களும் கிடைக்காமல்தான் இருக்கின்றன.
பொதுவாக இது போன்ற சுயமுன்னேற்றக் கட்டுரைகளில் வெற்றி பெற்ற அடுத்தவரை உதாரணம் காட்டுவது எனக்குப்பிடிக்காது.ஏனெனில் அந்த நபர் கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் உழைத்து முன்னேறியிருப்பார்.ஒரு கட்டுரையாளனாக ரொம்ப ஈசியாக பார்த்தாயா அவரை என்று எழுதி ஒரு புத்தகத்தை எழுதி காசு பார்த்திருப்போம்.அதனால்தான் அப்படி எழுத பிடிக்காது என்றாலும் ஒரே ஒரு சான்றாக நந்தன்நீலேகனியைப் பார்ப்போம்.அவர் இன்ஜினியரிங் முடித்து வெளியே வந்தபோது கையில் ரூ 200 மட்டும்தான் வைத்திருந்தாராம்.நாராயணமூர்த்தியூடன் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய் அங்கே இங்கே புரட்டி முதல்போட்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதன்பின் எட்டு முறை இன்ஃபோசிஸ் சரிவர நடக்காமல் கம்பெனியை விற்று விடலாமா என்றெல்லாம் யோசித்து இன்றைக்கு காங்கிரஸ் வேட்பாளராக இருக்கும் நந்தனின் சொத்து மதிப்பு ரூ 7700 கோடி.
1980களில் ரூ 200 மட்டுமே வைத்திருந்தவரின் பணம் இன்றைக்கு ரூ 7700 கோடியாகி இருக்கிறது.
நமக்கு இங்கே தேவை: ரூ 200 முப்பத்தைந்து ஆண்டுகளில் 7700 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது.
நான் ஒரு கம்பெனி ஆரம்பிப்பேன்.கையில் வெறும் ரூ 200தான் இருக்கிறது.கம்பெனி ஆரம்பிக்க அங்கே இங்கே பணம் புரட்ட வேண்டும்.அதன்பின் முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இருக்கும் என்று 1980ல் யாரிடமாவது நந்தன்நீலேகனி சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்.
அதே போல்தான் இப்போது உங்களிடம் கையில் வெறும் 100 ரூபாய்தான் இருக்கிறதென்று சொல்லலாம்.நீங்களும் முயன்றால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதிக்கலாம் என்பதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்.
எப்படி இது சாத்தியம் என்பதை நம்ப முடிகிறதோ அது போல மாதம் நான்கு லட்சம் சம்பளம் தரும் வேலையூம் தேடினால் நமக்கு கிடைக்கும் என்பதையூம் நம்பலாம்.நாம்தான் உயர்ந்த பதவிகளுக்கு துணிச்சலோ விண்ணப்பிக்க வேண்டும்.
திருமணம் மனைவி குழந்தைகள் பற்றி நானெழுதும் எழுதவிரும்பவில்லை.ஏனென்றால் இதில் பணம் சம்பந்தப்படக்கூடாது.இங்கே பாசம்தான் முதலில் இருக்க வேண்டும்.அடுத்ததாக வீடு.
ஒரு வீட்டை நாம் எப்படி கட்டுகிறௌம் அல்லது வாங்குகிறௌம்.சாதாரண 2பிஎச்கே எகானமிக் அபார்ட்மன்ட் போதுமென்ற முடிவூக்கு வந்து விடுகிறௌம்.அதற்கே இஎம்ஐ கட்டுவதற்குள் தாவூ தீர்ந்து விடுகிறது.ஆனால் ஏன் ஒரு லக்ஸரி அபார்ட்மன்ட்டிற்கோ சொகுசு வீட்டிற்கோ கற்பனையிலாவது செல்ல மனம் மறுக்கிறது.
மனம் என்ற வார்த்தை வந்து விட்டதல்லவா.இந்த மனம்தான் அனைத்திற்கும் காரணம் பணம் உட்பட.ஒரு சிறிய பெட்டிக்குள் நம் மனதின் வாயிலாக நம்மை நாமே பிராய்லர் கோழிகள் போல அடைத்து வைத்துக் கொண்டு அதிலிருந்து நாம் வெளியே வந்து விடாதபடி உஷாராக நம்மை நாமே காவலும் காத்துக் கொண்டிருக்கிறௌம்.
ஆங்கிலத்தில் எச்ஆர் ஆட்கள் ஒரு வார்த்தை சொல்வார்கள்.
'திங்க் அவூட் ஆஃப் தி பாக்ஸ்'
அப்படியென்றால் நீங்கள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அது தொடர்பான விஷயங்களில் மட்டுமே மனதை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அப்படி இல்லாமல் அந்த பெட்டிக்கு வெளியேயூம் 'திங்க் பண்ண' கற்றுக் கொள்ளுங்கள்.அப்படி வெளியேயூம் சிந்தனை செய்ய கற்றுக் கொண்டவர்கள்தான் ஒரு கம்பெனியில் மேலே மேலே உயர்ந்து ஒரு நாள் அந்த கம்பெனியின் சிஇஓ ஆகவே ஆகி விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்.எல்லா கம்பெனியின் சிஇஓவூம் நேரடியாக சிஇஓவாக(முதல் போட்டவர் தவிர) ஆனதில்லை.கீழேயிருந்துதான் உங்களைப் போல இருந்துதான் மேலே வந்திருக்கிறார்கள்.
எனவே பெட்டிக்கு வெளியே யோசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
பணம் மட்டுமல்ல பணத்தின் சைடு எஃபக்ட்டுகளாக சில விஷயங்கள் இருக்கின்றன.அவை சொகுசான வாழ்க்கை.நல்ல ஆரோக்கியமான மனம் மற்றும் உடல்.சந்தோஷம்.அந்தஸ்து.சமூகத்தில் மதிப்பு.எங்கு சென்றாலும் மரியாதை.இவையெல்லாம் அந்த பணத்தின் சைடு எஃபக்ட்டுகளாக உங்களிடம் வந்து விடும்.
சில பதிவூகளின் முன்னால் ரூ 163 ஐ தினம் பங்குச்சந்தையில் குமுலேட்டிவ்வாக (தினம் மூன்றே டிரேடுகள்தான்) பயன்படுத்தினால் 365 நாட்களில் ஒரு கோடி ரூபாயாக்கி விடலாம் என்று எழுதியிருந்தேனே.அதை செய்து பார்த்திருக்க வேண்டாம்.அட்லீஸ்ட் யோசித்தாவது பார்த்திருப்பீர்களா.உடனே என்னிடம் சில அன்பர்கள் கேட்பார்கள்.
ஏன் நீங்கள் அது போல செய்தீர்களா என்று.நான் என்னை நம்பி வந்தவர்களுக்கு அதாவது என்னிடம் ஆன்லைன் டிமேட் அக்கவூன்ட் துவங்கியவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறேன்.அதன் பயனாக பலபேர் உயர்ந்திருக்கிறார்கள்.திருப்பூரில் வேஸ்ட் காட்டன் பிசினசில் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டேன்.எப்படியாவது வழிகாட்டுங்கள் என்று வந்த ஒரு அன்பரை நான் இழந்ததில் பாதி வரை சம்பாதிக்க வைத்திருக்கிறேன்.அவர் போல நமது வழிகாட்டுதலுடன் ஆன்லைன் டிரேடிங்கில் வெற்றிபெற்றவர்கள் என்று அவர்களது ஃபோட்டோக்களைப் போட்டு சான்றாக காட்டலாம்தான்.ஆனால் அப்படிக் காட்டினால் அது காமடியாகப் போய் விடும்.நம் தளத்திற்கு வந்து கிடைக்கின்ற தகவல்களை வைத்து அப்புறம் ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கி வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே என் வெற்றியாக நான் நினைக்கிறேன்.
சரி சுயபுராணம் போதும்.
சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்து விடுகிறேன்.
எனவே ஒரு பெட்டிக்குள் அடைந்து கிடக்காமல் பெட்டிக்கு வெளியே சிந்தனை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்!
Prof.T.A.Vijey.,ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & free NaMo tips
ConversionConversion EmoticonEmoticon