'மனம் தரும் பணம்..."-4
அது ...இது..எது..என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறிர்களா?இந்த அது..இது..எது..என்பது அனைவரது வாழ்விலும் இருக்கிறது.குறிப்பாக பங்குச்சந்தையில் அனுபவமில்லாமல் டிரேடிங் செய்ய வருபவர்களிடம்தான் அதிகம் காணப்படும்.
அது--அட அந்த பங்கை வாங்கியிருக்கலாமோ?
இது--அட இந்த பங்கு ஏறுகிறதே.வாங்கி விடலாமா?
எது--அட டாலர் விலை கூடுகிறதாமே.எந்த பங்கு ஏறும்.இறங்கும்?
இப்படிப்பட்ட அவேச மனப்பான்மை ஒருவது கேபிடல் என்கிற முதலீட்டுப் பணத்தை சிதறடித்து விடும்.இது எப்படி நிகழ்கிறதென்றால் ஆசை...அதாவது பேராசையை மனம் முழுக்க அடைத்துக் கொண்டு வெகுசீக்கிரமே பெரும்பணத்தை சேர்த்து விடவேண்டுமென்ற ஆர்வத்துடன் ஓவர் டிரேடிங் செய்வதால்தான் வருகிறது.
ஒரு உதாரணமாகப் பார்ப்போம்.
ஒரு சிறுமுதலீட்டாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அவரிடம் முதலீட்டிற்காக ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கிறது.இந்த பணத்தை வட்டிக்கு விடலாம்.வங்கியில் போடலாம்.பங்குச்சந்தையில்தான் போடுவேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்.
ஈக்விட்டியில் முதலீடு என்றால் ரூ 500 விலையூள்ள ப்ளுசிப் பங்கு ஒன்றினை 100 எண்ணிக்கையில் வாங்கி வைத்திருக்கலாம்.ஆனால் வாங்கியதும் விலை குறைந்து போனால் மீண்டும் குறைந்த விலையில் வாங்கி ஆவரேஜ் செய்வதற்கோ ஏதாவது விபரீதமாக நிகழ்ந்து சந்தை சரியூமானால் வந்த விலைக்கு விற்று வந்தால் இவரது முதலீட்டைக் காப்பாற்ற இவரிடம் ரிஸ்க் கேபிடல் இருக்காது.
கையில் இருப்பது வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்தான்.ஆனால் இவரது மனக்கோட்டை என்னவாக இருக்குமென்றால் தினம் இரண்டாயிரம் ரூபாய் என்று டிரேடிங் செய்து ஒரே மாதத்தில் ஐம்பதாயிரத்தை ஒரு லட்சமாக இரட்டிப்பாக்கி விடவேண்டுமென்பதாக இருக்கும்.
இன்ட்ரா டே டிரேடிங்கில் பணத்தைப் போட வேண்டுமென்றால் வரும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு சரியான அளவில் ரிஸ்க் கேபிடல் கையில் இருக்க வேண்டும்.அதாவது ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால் கூடுதலாக ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் ரிஸ்க் கேபிடலாக இருந்தாக வேண்டும்.
இல்லையென்றால் இவரது முதலீட்டை முப்பதாயிரம் ப்ளஸ் இருபதாயிரம் என்று பிரித்து வைத்துக் கொண்டு பார்த்தால் இவரது உண்மையான முதலீடு என்பது முப்பதாயிரம் ரூபாய்தான் என்று சொன்னால் சோர்ந்து போய் விடுவார்.
இன்ட்ரா டே பண்ணின்டிருந்தா நிறைய கிடைக்கும்னு சொல்றாங்களேன்னு இழுப்பார்.தினம் ஆயிரம் இரண்டாயிரம்னு பணம் பண்ணறதுக்குத்தானே இன்ட்ரா டே இருக்குன்னு சொல்றா என்றபடி முனகிக்கொண்டே சென்று விடுவார்.
அப்புறம் யாருடைய பேச்சையாவது கேட்டுக் கொண்டு வருவார்.ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு வெறும மூணாயிரம் நாலாயிரம் இருந்தா போறுமே.அதையூம் பண்ணப்போறேன்.இன்ட்ரா டேயில முப்பதாயிரத்தை போட்ரப்போறேன்.புரோக்கர் ஆபீஸ்ல இருந்து போன் மேல போன் போட்டு அனத்தறான்.முப்பதாயிரம் போட்டா மூணுலட்சத்துக்கு டிரேடிங் பண்ணிடலாமாம்.அலவ் பண்றான்.ஸோ முப்பதாயிரம் இன்ட்ரா டேக்கு.அப்புறம் இருக்கற மீதிப் பணத்துல கமாடிட்டியில மினி தங்கம் டிரேடிங் பண்ணலாமாம்.அதுக்கும் ஒரு லாட்டுக்கு பணம் இருந்தால ஆறு லாட்டுக்கு டிரேடிங் பண்ணின்டுடலாமாம்.மும்பைல இருக்கற என் மாமா பையன் சொல்றான்.
ஆக பணத்தை பல துண்டுகளாகப் போட்டு அதில் ஒரு துண்டுக்கு பல துண்டுகள் எக்போஷர் பெற்று கன்னா பின்னாவென்று நாலா பக்கமும் டிரேடிங் செய்து எக்போஷரில் கிடைத்த நஷ்டம் முதலீட்டுத் தொகை லபக்கென்று விழுங்கி விட ஐம்பதாயிரம் வைத்திருந்தவர் ஒரே வாரத்தில் ஐந்தாயிரம்தான் கணக்கில் இருக்குது என்ற உண்மை ஷாக் அடித்ததும் கொஞ்சம் பேஸ்த் அடித்த மாதிரி விழித்துக் கொண்டு -
இல்லே.விட்டதை பிடிச்சுண்டுடுவேன்.கொஞ்சம் அரியர்ஸ் பணம் நாப்பதாயிரம் வருது.அதை வைச்சு ஃபாரக்ஸ்னு என்னவோ சொல்றா.அதுல ஸ்பெரெட் டிரேடிங் இருக்காம்.ஒரு சுத்து சுத்தினா எங்கேயோ போயிர்லாம்.ரோட்ல போறது பாருங்க ஆடின்னு கார்.அதெல்லாம் ஒரு காரா...நான் வாங்குவேன் பாருங்க ஒன்ரை கோடியில ஒரு கார்...
இது போன்ற மனிதர்களை பங்குச்சந்தை தினமும் சந்தித்து வருகிறது.ஆக ஐம்பதாயிரம் வைத்திருந்தால் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாதா?
தாராளமாக முடியூம்.
நஷ்டம் வராமல்?
ஆம்.நஷ்டம் வராமல்தான்?
அதெப்படி?
மனதை அங்கே இங்கே அலைய விடாமல் எக்ஸ்போஷரில் ஷேர் வாங்காமல் திடுதிடுப்பென்று இன்டரா டே, ஆப்ஷன், கமாடிட்டி, கரன்சி என்று கலந்து கட்டி டிரேடிங் செய்யாமல் எது நமக்கு தேவையோ அதை மட்டுமே கூர்ந்து கவனித்து பொறுமையாக டிரேடிங் செய்தால் ஐம்பதாயிரம் முதலீட்டில் மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம்.அதற்கு மேல் சம்பாதிக்கலாம் என்பது அவரவர் திறமையையூம் பொறுமையையூம் பொறுத்தது.
அதனால் அது..இது..எது.. என்று அலையாமல் எது உங்களது இடம் என்று தெரிந்து பொறுமையாக டிரேடிங் செய்தால் ஜெயிக்கலாம்.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & trading tips
ConversionConversion EmoticonEmoticon