முன்னர் எழுதிய இரண்டு பதிவூகளில் ஐடி & சாப்ட்வேர் துறையின் எதிர்காலம் சரிந்து வருவதாக எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி நான் ஒரு பயத்தை கிளப்புவதாக அன்பர் அமரபாரதி பின்னுரட்டம் இட்டிருந்தார்.பயத்தை கிளப்புவது அல்ல அந்த பதிவூகளின் நோக்கம்.சாப்ட்வேர் துறைகளில் உள்ளே என்ன நடக்கிறது என்பது லேசாகத் தெரிந்ததாலும் கொஞ்சம் சொந்த அனுபவம் இருந்ததாலும்தான் அது போன்ற செய்திகளைத் தந்தோம்.
இப்போது டிசிஎஸ் விடுத்துள்ள அறிக்கையைப் பற்றி சொல்லும் முன் ஒரு சொந்த அனுபவத்திற்குப் போவோம்.இது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.சத்யம் நிறுவனத்தின் பங்குகளை அப்போது அடைகாத்து வைத்திருந்தேன்.ஒரு முறை இன்ட்ரிம் டிவிடென்ட் அறிவித்தார்கள்.ஆனால் எனக்கு டிவிடென்ட் வந்து சேரவில்லை.அதன்பின் ஃபைனல் டிவிடென்ட் அறிவித்தார்கள்.அதுவூம் வந்து சேரவில்லை.டிவிடென்ட் அனுப்பி விட்டதாக காசோலை போன்ற ஒன்றை அனுப்புவார்கள்.ஆனால் அதை வங்கியில் போட முடியாது.அதற்கு பதிலாக அவர்கள் ஆன்லைனில் வங்கிக்கணக்கில் போட்டு விடுவார்கள்.எனது வங்கிக் கணக்கு இருக்கும் பாடாவதி வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் சென்று கேட்டால் அலையவிட்டார்கள்.எப்போது சென்றாலும் நாளைக்கு வாங்களேன் என்று ஜூனியர் விகடனையோ நக்கீரனையோ வாசித்துக் கொண்டே கூலாகச் சொல்வார்கள் யூகோவில்.ஒரு மாதம் அலைந்து திரிந்து கடைசியில் கிடைத்த சேதி கனரா வங்கிதான் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் டிவிடென்ட்டுகளை ஆன்லைனில் செலுத்தும் என்றார்கள்.மறுநாள் கனரா வங்கிக்குச் சென்றால் பொறுமையாக பதில் சொன்னார்கள்.யூகோ வங்கி போல கனரா அசட்டுத்தனமாக இல்லை.சத்யம் கம்ப்யூட்டர் போன்ற பல நிறுவனங்களின் டிவிடென்ட்டுகளை கனராதான் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கிறது.ஆனால் கனராவூக்கு டிவிடென்ட் பணத்தை நிறுவனங்களிடமிருந்து சிட்டி வங்கிதான் பெற்று கனராவூக்கு அனுப்புகிறது.இப்படி டிவிடென்ட் முதலீட்டாளர்களின் வங்கிக்கணக்கில் போய் சேர வேண்டுமென்றால் சத்யம் கம்ப்யூட்டர் சிட்டி வங்கியில் ஆன்லைன் டிவிடென்ட் செலுத்த உறுப்பினராகி உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள்.இந்த விபரங்களை பாடாவதி யூகோ வங்கியினர் தெரிவிக்கவே இல்லை.நானாக தெரிந்து கொண்ட இந்த விபரங்களை மெயிலில் சத்யம் கம்ப்யூட்டருக்கு தெரிவிக்க அவர்கள் பார்ட்டி உஷார் என்று தெரிந்து கொண்டதும் நெஃப்டில் எனக்கு மொத்த டிவிடென்ட்டுகளையூம் செலுத்தி விட்டனர்.
அதன்பின் நானாகவே துப்பறிந்து தெரிந்து கொண்ட சேதி அப்போது சத்யம் கம்ப்யூட்டர் பலபேருக்கு இது போல டிவிடென்ட்டை அனுப்பி விட்டதாகச் சொல்லி டிவிடென்ட்டை அனுப்பவில்லை.
போதாதா?
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவூனத்தின் மீது எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை.அதற்கு பதிலாக சத்யம் கம்ப்யூட்டர் பங்குகளை விற்று விட்டேன்.இது நடந்து சரியாக ஒரு வருடத்தில்தான் ராமலிங்கராஜூவின் ஊழல் வெளியே வர சத்யம் சரிந்தது அப்புறம் டெக்மஹிந்திரா வாங்கியது போன்ற கதைகளை நீங்களும் அறிவீர்கள்.
இதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால் சந்தேகத்தை ஒரு நுரலில் கோர்ப்பது போல சேர்த்துக் கொண்டே வாருங்கள்.
1.எச்சிஎல் சிவநாடார் ஐடி துறையை விட்டு விலகுகிறார் என்ற வதந்தி முதலில் வந்தது.
2.போலாரிஸ் நிறுவனம் கை மாறப்போகிறதென்ற வதந்தி பின்னால் வந்தது.
3.இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு.இன்க்ரிமென்ட் கட்.திறமையற்றவர்கள் வெளியே போகலாம் என்ற அறிவிப்பு கூடவே வந்தது.
4.இன்ஃபோசிஸ் க்யூ3 ரிசல்ட் அப்படி ஒன்றும் அமர்க்களப்படுத்தவில்லை.
5.இப்பொது டிசிஎஸ் தனது க்யூ4 ரிசல்ட் க்யூ3 ரிசல்ட்டை விடவூம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஒரு மீட்டிங் (மிட் க்குவாட்டர் அனலிஸ்ட் மீட்டிங்) போட்டுச் சொல்லி விட்டது.
6.அமெரிக்கா இங்கிலாந்தை விட ஐரோப்பாவில்தான் தங்களுக்கு பிசினஸ் சாதகமாக இருப்பதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
7.வெளிநாட்டில் நல்ல பிசினஸ் 2015ம் ஆண்டில் கிடைத்தாலும் உள்நாட்டில் நிலைமை கவலைக்கிடம் போன்ற அறிவிப்பையூம் டிசிஎஸ் தந்துள்ளது.
இந்த தகவல்களை வைத்துப் பார்த்தால் ஐடி சாப்ட்வேர் துறைகளை பெரிதாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.ஒரு முதலீட்டாளராக நீங்கள் இருந்தால் உங்களது நீண்டகால போர்ட்ஃபோலியோவில் ஐடி துறை பங்குகள் இருந்தால் அவற்றில் பாதியை விற்று விட்டு வேறு துறைகளுக்கு மாறிக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஐடி சாப்ட்வேர் துறைகளிலேயே பணிபுரிபவராக இருந்தால் இப்போதே உஷாராகி விடுங்கள்.பங்குச்சந்தையில் எளிதாக ஆன்லைனில் பணம் பண்ண கற்றுக்கொண்டு பணத்தை பெருக்கிக்கொண்டே வந்தால் பின்னர் வேலையில் ஏதும் தடுமாற்றம் வந்தாலும் ஆடம்பர வாழ்க்கை குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.அப்புறம் உங்கள் இஷ்டம்.
ஆன்லைன் டிரேடிங் அக்கவூன்ட் துவங்க விரும்புவோர் மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள்.இன்ட்ரா டே தகவல்களுக்கு வழக்கம் போல நமது மெயின்வெப்சைட்டிற்கு (Click here to go to main website)அவ்வப்போது வந்து செல்லுங்கள்.
Prof.T.A.Vijey.,M.E.,(Ph.D)
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get "Free intraday tips"
ConversionConversion EmoticonEmoticon