ஈக்விட்டி சந்தைக்கும் ஜோதிடத்திற்கும் கிரகங்களுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ இல்லையோ கமாடிட்டி சந்தைக்கு நிறையவே நேரடி தொடர்பு இருக்கிறது.
ஜூன் மாதம் குருப்பெயர்ச்சி வருகிறதல்லவா அதையொட்டி கமாடிட்டி சந்தை எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.குரு என்ற கிரகம்தான் தங்கத்திற்கு காரகன்.குரு நன்றாக இருந்தால் தங்கம் கிடைக்கும் என்பது பொதுவான விதி.
வரப்போகிற குருப்பெயர்ச்சியில் குரு கடகத்தில் உச்சம் பெறப்போகிறார்.கடகம் என்பது சந்திரனின் வீடு.சந்திரன் என்பவன் நீர்நிலைகள் மற்றும் கணினி வழியாக ஆன்லைனில் தொடர்பு கொள்வதற்கான கிரகம்.மற்றும் தினம் தினம் மாறுதலைக் கொடுக்கும் கிரகமும் கூட.அதனால் கடகத்தில் உச்சம் பெறும் குருவால் தங்கத்தின் விலை மிக மிக உயர்ந்து விட வாய்ப்புகள் இருக்கின்றன.
பொதுவாக பங்குச்சந்தையில் வீழ்ச்சியோ இடர்பாடோ நெகட்டிவ்வான விலையோட்டமோ ஏற்படும் என்றால் அதற்கு காரணம் சனியாகத்தான் இருக்கும்.சனி என்பவன் தண்டிக்கும் கிரகம் மட்டுமல்ல முட்டைக்கட்டை போட்டு மெதுவாக இயங்கும் கிரகம்.சனியின் பார்வையின் பங்குச்சந்தை சிக்கினால் சந்தை மிக மிக மெதுவாக பக்கவாட்டிலேயே ஏறும் அல்லது இறங்கும்.சந்தையில் நிச்சயமற்ற தன்மை என்று சொல்லப்படுகிற வொலடலிட்டி(volatality)அதிகம் இருக்கும்.பங்குச்சந்தைக்கு ஏற்ற இன்னொரு கிரகம் ராகு.இந்த கிரகம்தான் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் மற்றும் ஆபரேடட் ஸ்கிரிப்களை(Operated scrips)மேலே ஏற்றுகின்றன.பங்குச்சந்தையை ஒரு சூதாட்டம் போல சிலர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அனுமதிப்பதும் இந்த ராகுவின் வேலைதான்.
துலாம்மில் உச்சமாக இருக்கிற சனியால் பங்குச்சந்தை கெட்டிருக்க வேண்டும்.மேலும் அங்கே சனியூடன் கூட்டாளியாக உட்கார்ந்திருக்கிற ராகுவால் தாறுமாறான போக்கில் பங்குச்சந்தை இந்த வருடம் சென்றிருக்க வேண்டும்.அப்படி ஏதும் நடந்து விடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்திருப்பது தற்போதய நிலைமையில் மிதுனத்தில் இருக்கும் குருதான்.அது தன் ஐந்தாம் பார்வையால் சனியையூம் ராகுவையூம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் குரு மிதுனத்திலிருந்து கடகத்திற்கு வந்து உச்சம் பெறுகிறது.அதாவது ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெறுகிறது.சனி உச்சமாக தற்போது இருக்கிற துலாம்மிலிருந்து டிசம்பர் மாதம் விருச்சிகத்திற்கு டிரான்ஸ்பரில் செல்லவிருக்கிறது.இதற்கிடையே ராகு பின்னோக்கி நகர்ந்து துலாம்மில் இருந்து கன்னிக்கு வருகிறது.
இந்த நிலைகளை வைத்துப் பார்க்கும்போது உச்சம் பெறுகிற குருவால் தங்கத்தின் விலை நேரடி மார்க்கெட்டை விட (கடகம் சந்திரனின் வீடு என்பதால்) ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதாவது கமாடிட்டி சந்தையில் மிகவூம் மேலே உயரப்போகிறது.டிசம்பர் மாதம் வரை இந்த உயர்வூ சீராக ஒரு கட்டுக்கும் இருக்காது.காரணம் கடகத்திற்கு வரும் குருவால் துலாம்மில் இருக்கும் சனி மற்றும் ராகுவை பார்க்க முடியாது.அதன் ஐந்தாம் பார்வை விருச்சிகத்திற்கு சென்று விடுகிறது.டிசம்பர் மாதத்திற்கு பிறகு குரு சனியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.இதற்கிடையே ராகு கன்னிக்கு வந்து குருவின் பார்வையிலிருந்து விடுபட்டு விடுவதால் கமாடிட்டி சந்தையில் அதிரடியான ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் அதிக அளவில் நடக்க வாய்ப்பிருக்கிறது.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எப்போதெல்லாம் குரு வக்கிரமாகி பின்னோக்கி நகர்ந்து விடுகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கமாடிட்டி சந்தையில் குறையூம்.
இன்னொரு அம்சம் இருக்கிறது.இதை சொல்லக் கூடாதுதான்.கடகம் சந்திரனின் வீடு என்பதால் தண்ணீரால் சூழப்பட்டிருக்கிற அதாவது தீவூ போன்ற நாட்டிலிருந்து தங்கத்தை நேரடியாகவோ பதுக்கலாகவோ கடத்திக் கொண்டு வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் நாலா பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் நாட்டிலிருந்து 'கொண்டு வரப்படும்' தங்கதிற்கு இங்கே நல்ல விலையூம் லாபமும் கிடைக்கும்.
எனவே கமாடிட்டி டிரேடர்கள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தங்கத்தை வேட்டையாட தயாராக இருங்கள்.
Prof.T.A.Vijey.,ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & free stock tips
ConversionConversion EmoticonEmoticon