பங்குச்சந்தையைப் பொறுத்தவரை அது ஈக்விட்டியோ, டெரிவேட்டிவ்வோ, கமாடிட்டியோ 90 சதவீதம் பேர் நஷ்டமடைந்தும் 10 சதவீதம் பேர் லாபமடைந்தும் வருகிறார்கள் என்பதுதான் பொதுவான விதி.ஆனால் சந்தைக்கு வரும் எல்லோருமே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையூடன்தான் வருகிறார்கள்.
ஆனால் ஏன் பணத்தை இழக்கிறார்கள் என்றால் அதற்கு மூன்றே காரணங்கள்தான் இருக்கின்றன.
1. பதட்டமான மனநிலை
2. அளவூக்கு அதிகமான டிரேடிங்(Over trading)
3. பங்குச்சந்தை டிரேடிங் டெக்னிக்குகளை கற்றுக்கொள்ளாதிருப்பது.
சரி ஏன் எப்படி என்றெல்லாம் இங்கே அலச வேண்டாம்.இந்த பதிவூ பங்குச்சந்தையில் பல ஆண்டுகளாக பணத்தை இழந்தவர்களுக்கானது.பணத்தை இழந்தவர்கள் அவர்கள் முதலீடு செய்ய விரும்பிய தொகையை விட அதிக அளவில் பணத்தை இழந்திருப்பார்கள்.
புரியூம்படி சொல்கிறேன்.
முதலில் ஒருவர் சந்தைக்கு ஆர்வமாக வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.அவர் முதலீடு செய்ய விரும்புவது வெறும் நாற்பதாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.இரண்டொரு டிரேடிங்கில் நாலாயிரம் இரண்டாயிரம் என்று லாபம் வந்திருக்கும்.உடனே இன்னும் கொஞ்சம் பணத்தைப் போடலாம் என நினைப்பார்.புரோக்கிங் ஆபீசில் இருக்கும் டீலர் ஒரு பங்கை குறிப்பிட்டு அது அருமையான பங்கு.அதில் பணத்தை போட்டு வைத்தால் பணமழையாகக் கொட்டும்.ஏதாவது பிக்சட் டெபாசிட் இருந்தால் கூட அவற்றையெல்லாம் உடைத்து எடுத்துக் கொண்டு வந்து போடுங்கள். பலமடங்காக முதலீடு திரும்பி வரும் என்பார்.உடனே இவர் அங்கே இங்கே பணத்தைப் புரட்டிக் கொண்டு வந்து போட்டதை கணக்கு எடுத்துப் பார்த்தால் இரண்டு லட்சத்தை தாண்டியிருக்கும்.
முதலீடு செய்ய விரும்பியது நாற்பதாயிரம் மட்டும்தான்.ஆனால் உள்ளே போட்ட தொகை இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
இங்கே யார் செய்தது தப்பு என்ற விவாதம் வேண்டாம்.சில பல ஆண்டுகளின் முன்பு பலபேர் இது போல ஆன்ஆர்எல்(RNRL)பங்கிலும் லோக் ஹவூசிங் பங்கிலும் பணத்தை அள்ளிப் போட்டு விட்டு தவித்தனர்.
இப்போது இவர்களுக்கான மறுவாழ்வூத் திட்டத்திற்கு (இந்த வார்த்தைப் பிரயோகம்.தவறுதான்.இது அவர்களை காயப்படுத்தும் என்றாலும் இதற்கு பொறுத்தமான வேறு வார்த்தைகள் இல்லை) வருவோம்.
இதற்கான வழிமுறைகளாக நான் குறிப்பிடுவது மூன்றே ஸ்டெப்கள்தான்.
1.மனதை இலேசாக வைத்திருங்கள்.
2.சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவியூங்கள்.
3.சின்னச் சின்னதாய் டிரேடிங் செய்யூங்கள்.இங்கே சொன்ன 'சின்னச் சின்னதாய்' என்பது மிகவூம் சின்னச்சின்னதாய் மைக்ரோ அளவிற்கு சின்னச்சின்னதாய் என்று அர்த்தம்.
இதை எப்படி செய்வது என்று இப்போது சொல்கிறேன்.
மனதை இலேசாக வைத்திருப்பது.
இதற்கு யோகா செய்யலாம்.தியானம் செய்யலாம்.வேதாத்ரி மகரிஷியின் வாழும் கலை யோகா செய்யலாம்.அல்லது ஈஷாவின் யோகா முறைகளைச் செய்யலாம்.இதை விடவூம் சுலபமான முறை ஒன்று இருக்கிறது.
அது என்ன தெரியூமா?
நடந்ததெல்லாம் போகட்டும்.நானொன்றும் கெட்டுப் போய் விடவில்லை.அழிந்து போய் விடவில்லை.மீண்டும் எழுவேன் என்பது போல உள்ளுக்குள் சொல்லிக்கொள்ளலாம்.உங்களுக்கு எது நடந்தாலும் அதற்கு சம்பந்தமில்லை என்பது போல விலகி நின்று கவனிக்கலாம்.மொத்தத்தில் கவலைப்படாமல் அமைதியாக இருந்து பார்க்கலாம்.
சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பது
ஒரு கார் அதுவூம் ஒரு சொகுசுக்கார் வாங்க வேண்டும் என்பது உங்களது லட்சியமாக இருக்கலாம்.தற்போதைய சூழ்நிலையில் அது முடியாமல் இருந்தால் கார்களாக படத்தில் வருகிற ஆங்கிலப் படத்தை டிவிடியில் போட்டு ரசிக்கலாம்.ஆடம்பரமான கோட் சூட் வாங்க முடியாமல் இருக்கலாம்.ஆனால் மிகவூம் விலை உயர்ந்த ஒரு லீகூப்பர் ஷூக்களை மட்டும் வாங்கலாம்.ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அமர்க்களமாக செல்ல முடியாதிருக்கலாம்.ஆனால் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரெஸ்டாரென்ட்டிற்கு சென்று காபி மட்டும் அருந்தி விட்டு வரலாம்.லக்ஸரியான பொருட்களை வாங்க முடியாதிருக்கலாம்.ஆனால் ஒரு காஸ்ட்லியான பேனாவை வாங்கலாம்.இவை கூட வேண்டாம்.மழையில் நனைந்து கொண்டே ஐஸ்க்ரீமையோ டார்க் சாக்லேட்டையோ சுவைக்கலாம்.பார்க்கிற அனைவருக்கும் தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு புன்னகையை தந்து கொண்டே செல்லலாம்.உங்களிடம் பழகுகிறவர்களிடம் இதமான சொற்களை பயன்படுத்தலாம்.எப்படியோ அதிக செலவில்லாமல் சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கலாம்.இதனால் மனமும் உடலும் ஒரு புள்ளியில் சிங்க்(sync)ஆகி அதன்பின் யோசிக்கிற எதுவூம் சரியாக வருகிற மாதிரி நல்ல வெற்றிகரமான சிந்தனைகள் மனதில் உதிக்கும்.
சின்னச் சின்னதாய் டிரேடிங் செய்வது
இதை ஒரு விளையாட்டாக தியானம் போல தவம் போல என்றெல்லாம் பெரிய வார்த்தைகளைப் போட்டு உங்களை பயமுறுத்தவில்லை.பங்குச்சந்தையை தினமும் கூர்ந்து நோக்குங்கள்.புதிதாக ஒரு டிமேட் கணக்கை துவங்கி வைத்துக் கொள்ளுங்கள்.அந்த கணக்கில்தான் இந்த விளையாட்டை செய்யப் போகிறீர்கள்.
முன்பெல்லாம் நுரறு ஐநுரறு ஆயிரம் என்ற கணக்கில் பங்குகளை வாங்கி விற்றிருப்பீர்கள்.இப்போது அதெல்லாம் வேண்டாம்.எந்த பங்காக இருந்தாலும் ஒரே ஒரு எண்ணிக்கையில் மட்டும் வாங்குங்கள்.
ஆம்.ஒரு நேரத்தில் ஒரே ஒரு பங்கு.ஒரே ஒரு எண்ணிக்கையில்.இதைச் சொன்னால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும்.
ஆனால் இது எதற்காக என்று சொல்கிறேன்.முதலில் ஒரு பங்கு வாங்கும் பழக்கத்தை மேற்கொண்டபின் அந்த ஒரே ஒரு பங்கை எப்படி லாபத்தில் விற்பது என்று பாருங்கள்.வாங்கும்போதே த நன்றாக கவனித்து ஒரே ஒரு பங்கை வாங்கி பின் அதை விற்று லாபத்தை கண்ணில் பாருங்கள்.இது போல நாலைந்து முறை செய்தபின் அதுதான் எல்லாம் சரியாக வருகிறதே என்று முன்பு போல அதிக எண்ணிக்கைக்குப் போய் விடாதீர்கள்.
ஒரு பங்கு வைத்தியம் என்றே இதை நான் சொல்வேன்.இதை என்னிடம் எனது ஒரு நாள் பங்குச்சந்தை-பணம் பற்றிய பயிற்சி வகுப்பிற்கு வருபவர்களிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
இதை எதனோடு ஒப்பிடலாம் என்றால் ஒரு பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு போன ஒருவர் ஆக்சிரன்ட்டில் அடிபட்டு படுக்கையில் விழுந்து விட்டால் அவருக்கு சிகிச்சை செய்யூம்போது உடனே விடுவிடுவென்று நடக்கவோ ஓடச் சொல்லவோ மாட்டார்கள்.சின்னச் சின்னதாய் அடியெடுத்து சில அடி துரரம் மட்டும்தான் தினமும் நடக்கச் சொல்வார்கள்.
அது போலவே இங்கும் சொல்கிறேன்.
ஒரு நாளைக்கு ஒரு பங்கில் ஒரு எண்ணிக்கையில் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு பங்கில் ஒரு எண்ணிக்கை என்பதில் ஒரு நாளைக்கு மூன்று வெவ்வேறு பங்கில் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இங்கே இன்னொரு விஷயம்.
இதை தினமும் செய்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை.எப்போதெல்லாம் மனது லேசாக இருப்பது போல உணர்கிறீர்களோ அப்போது செய்தால் போதும்.
எவ்வளவூ காலத்திற்கு இந்த "பங்குச் சிகிச்சை" என்று கேட்கலாம்.
ஒரு மூன்று மாதம் போதும்.
அதன்பின் உங்களது மனது இந்த டிரேடிங்கில் தன்னிச்சையாக ஈடுபடத் தொடங்கி விடும்.நெரிசல் மிகுந்த டிராஃபிக்கில் டூவீலரோ காரோ ஓட்டும் போது மனது வேறு சிந்தனையில் இருந்தாலும் அது பாட்டுக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது போல உங்களது மனதும் டிரேடிங்கை டிரைவிங் செய்வது போல தன்னிச்சையாக சரியாக செய்து விடும்.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப்பயிற்சியில் இந்த வாரம் சேர்ந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்.பயிற்சியில் சேர விரும்புவோர் சேரலாம்.புதிய டிரேடிங் டெக்னிக்குகளை இந்த பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம்.விபரங்களுக்கு மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get the list of 'top performing shares'
ConversionConversion EmoticonEmoticon