வங்கிகளில் பணிபுரியூம் அன்பர்களே இது உங்களுக்கான எக்ஸ்க்ளுசிவ் பதிவூ.பொதுவாக வெளியே செல்லுவதற்கு எனக்குப் பிடித்தமான இடங்கள் என்றால் கோவில்கள், ஆங்கிலப்படங்கள் ஓடும் தியேட்டர் அதன்பிறகு வங்கிகள்.தியேட்டர்களை இப்போது யூடியூப் (Youtube) கைப்பற்றி விட்டது.கோவில்களில் நெரிசல்.ஆனாலும் கோவில்கள் அதுவூம் பெருமாள் கோவில்கள் எனக்குப்பிடித்தமான இடங்கள்.அதற்கு அடுத்தபடியாக நான் வங்கிகளுக்குச் செல்லும்போதுதான் மிக உற்சாகமாக உணர்வேன்.
எப்படி கோவில்களில் தெய்வசந்நிதானத்தின் ஆன்மிக உணர்வூ மனதை சாந்தப்படுத்துகிறதோ அதே போல வங்கிகளில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மனதை உற்சாகப்படுத்துகிறது.
ஆனால் வங்கிகளில் பணிபுரிபவர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு மனக்குறை உண்டு.கையருகே பணத்தை கட்டுக் கட்டாக வைத்திருந்தாலும் பணத்தையூம் அதன் ஆற்றலையூம் இவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் மனக்குறைக்கான காரணம்.இதை அவர்களுடன் சொல்லியூம் இருக்கிறேன்.
இந்த பதிவை வாசிக்கும் வங்கித்துறை அன்பர்களே.நீங்கள் எல்லாம் வங்கியில் பணத்தை பிக்சட் டெபாசிட் போட்டிருப்பீர்கள்.அப்படி பிக்சட் டெபாசிட் போடுவது நல்ல பழக்கம்.நானும் அதை செய்து வருகிறேன் என்றாலும் அதை விட நல்ல யூக்தி வங்கி டெபாசிட்டில் போடாமல் வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்வதுதான்.இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவூ எழுதியிருந்தேன்.அதை வாசித்த ரங்கராஜன் என்ற அன்பர் சென்னையிலிருந்து பேசினார்.இதை முதல்ல பாங்க்காராளுக்கு சொல்லும் என்றார்.அதனால்தான் இந்த பதிவூ.
இரண்டே உதாரணங்கள் தருகிறேன்.வங்கியில் பணிபுரியூம் உங்களுக்கு மற்ற வங்கிகளின் நிலைமையூம் செவிவழிச்செய்தியாக அவ்வப்போது வந்து போகும்.அது போல அந்த வங்கிகளின் பங்கு மதிப்பு குறையூம்போதும் ஏறும்போதும் கூட அதே போல செவி வழிச்செய்தியாக தகவல்கள் கிடைக்கலாம்.
கீழ்க்காணும் இரண்டு வங்கிகளைப் பாருங்கள்.
பாங்க் ஆஃப் பரோடா.தற்போது சந்தையில் சக்கை போடு போடுகிறது.
பஞ்சாப் நேஷனல் பாங்க்.இதுவூம் நன்றாக டிரேடாகிக்கொண்டிருக்கிறது.இந்த பங்குகள் விலை குறைந்திருந்த சமயத்தில் வாங்கி அந்த பங்குகளில் முதலீடு செய்திருந்தால் என்ன கிடைத்திருக்கும் என்று பாருங்கள்.
முதலில் பாங்க் ஆஃப் பரோடா:
20.08.2013 அன்று ஒரு லட்ச ரூபாயை ஒரு பங்கு ரூ 430 என்ற விலையில் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம்.
27.03.2014 அன்று(இந்த பதிவை எழுதும் நேரத்தில்) ஒரு பங்கின் விலை டூ 699 ஆக உயர்ந்திருக்கிறது.
ஆக ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் 62.55 சதவீதம் லாபமாக கிடைத்திருக்கும்.உங்களது ஒரு லட்ச ரூபாய் என்பது 162550 ஆக உயர்ந்திருக்கும்.பிக்செட் டெபாசிட்டிலோ தங்கம் வாங்கியிருந்தாலோ கூட இத்தனை லாபம் கிடைத்திருக்காது.
அடுத்து பிஎன்பி வங்கி:
04.09.2013 அன்று ஒரு லட்ச ரூபாயை ஒரு பங்கு ரூ 400 என்ற விலையில் முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.
27.03.2014 அன்று இதன் விலை 704 ஆக உயர்ந்து விட்டது.ஆக கிடைத்திருக்கிற லாபம் 76 சதவீதம்.உங்களது ஒரு லட்ச ரூபாய் இப்போது 176000 ஆக மாறியிருந்திருக்கும்.
உதாரணத்திற்கு இரண்டு வங்கிகளைக் குறிப்பிட்டிருக்கிறேன்.இரண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.இதில் எந்த ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கும் இல்லை.எந்த சூதாட்டமும் கிடையாது.வலுவான வங்கிப் பங்குகள் விலை குறைந்த நேரத்தில் முதலீடு செய்து விட்டு மறந்து விடலாம்.அது மறுபடி எப்போது உயர்கிறதோ அப்போது விற்று பணமாக்கி விடலாம்.உடனே சில புத்திசாலிகள் இது ஒரு வருடத்திற்குள் வருகிறதே 30 சதவீத கேபிடல் கெயின் (capital gain tax) கட்டவேண்டுமே என்பார்கள்.ஒரு வருடம் தாண்டி விற்றுக் கொள்ளுங்கள்.ஒரு வருடம் தாண்டினால் விலை குறைந்து விட்டால் என்ன செய்வது என்றும் சிலர் கேட்பார்கள்.இப்படி கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.அதே பழைய ஸ்கூட்டர் இல்லையென்றால் லோஎன்ட் மாருதி, அல்லது ஹூண்டாய் இயான் கார் 2பிஎச்கே வீடு என்றளவில் திருப்திப்பட்டுக் கொண்டு வங்கி வேலையிலேயே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
நான் உங்களை ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கோ, இன்ட்ரா டே டிரேடிங்கோ செய்யச் சொல்லவில்லை.நீங்கள் வங்கியில் பணிபுரிவதால் சரியான சமயம் எது என்பது உங்களது டொமைன் (domain) பற்றி உங்களுக்குத் தெரியூம் என்பதால் வங்கிக் பங்குகளில் முதலீடு செய்து பணத்தை பெரிதாக்குங்கள்.பெரிதினும் பெரிதாக்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.
எப்படி பணத்தை பெரிதாக்குவது என்று கேட்கிறீர்களா?
ஒன்றும் செய்ய வேண்டாம்.தினமும் நமது தளத்திற்கும் நமது மெயின் வெப்சைட்டிற்கும்(Click here to go to main website) வந்து சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள்.மற்ற விஷயங்கள் தானே நடக்கும்.அப்புறம் ஒரு நாள் நீங்களே நல்ல விதமாக நான் சொன்னபடி நீங்கள் பணிபுரியூம் வங்கியின் பங்கிலேயே கூட முதலீடு செய்து பெரும்பணத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.
இங்கே இன்னொன்றை நான் சொல்லவில்லை.நீங்கள் முதலீடு செய்யூம் பணத்திற்கு(தொகைக்கு என்று சொல்லவில்லை.கவனிக்கவூம்.வாங்கிய பங்கின் எண்ணிக்கைக்கேற்ப அதற் முகமதிப்பின்படி) டிவிடென்டும் கிடைக்கும்.
ஸோ வங்கிகளில் பணிபுரியூம் நண்பர்களே.வாருங்கள்.பணத்தை பெருக்குவோம்.வளமான பாரதத்தை உருவாக்குவோம்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get "FREE" NaMo trading tips
ConversionConversion EmoticonEmoticon