நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நடுத்தர வகுப்பின் மேல் தட்டு மக்களும் சேமிப்பு என்றால் நகைச்சீட்டு போடுவது தெரிந்தவர்களிடம் சீட்டு போடுவது வங்கிகளில் டெபாசிட்டோ ரிக்கரிங் டெபாசிட்டோ போட்டு வைப்பது என்றளவில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை டெபாசிட் போடப்போகிறீர்கள் என்றால் சும்மா இந்தப்பக்கம் வந்தோம் என்று உங்கள் வீட்டுக்கே வந்து விடுவார்கள்.அரசாங்க வங்கிகளில் பணத்தைக் கத்தையாகக் கொண்டு போனாலும் டெபாசிட்டா அடுத்த கவூன்ட்டருக்கு போ என்று விரட்டாத குறையாக அலைக்கழிப்பார்கள்.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.இந்த பதிவூ தனியார் வங்கிகளில் டெபாசிட் போட்டு வைத்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்கிற ரீதியில் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதப்பட்ட பதிவூ அல்ல.
அரசாங்க வங்கியோ தனியார் வங்கியோ டெபாசிட் விஷயத்தில் வட்டியை ஒழுங்காகக் கொடுத்து விடுவார்கள்.ஆனால் அந்த வரிக்கு வருமான வரி உண்டு.இல்லையென்றால் ஃபாரம் 16ஐ ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ப்ராகஸ் ரிப்போர்ட் போல கொண்டு போய் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
டெபாசிட்டிற்கு அதிகபட்சமாக என்ன தருவார்கள் என்று பார்த்தால் சுமார் 9.25லிருந்து 10.50 வரை தருகிறார்கள்.லட்சுமிவிலாஸ் வங்கியிலும் டிஎம்பியிலும் சற்று கூடுதலாக தருகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஒரு லட்ச ரூபாயை தனியார் வங்கியில் போட்டால்(அரசாங்க வங்கிகளில் வட்டி குறைவூ) 10.50 சதவீதம் வட்டி வருவதாக வைத்துக் கொண்டால் உங்களது முதலீடு 110500 ஆகிறது.இந்த ஒரு வருடத்தில் இன்ஃப்ளேஷனையூம் கணக்கிட்டால் இந்த தொகை விர்ச்சுவலாகக் குறையூம்.
இதற்கு பதிலாக பங்குச்சந்தையில் (ஆரம்பிச்சுட்டான்டா என்று யாரேனும் இந்நேரம் திட்ட ஆரம்பித்திருக்கலாம்) தனியார் வங்கிப் பங்குகளில் போட்டிருந்தால் பலமடங்கு லாபம் கிடைத்திருக்கும்.ஒரு ஆண்டு கழித்து வாங்கிய பங்கை விற்பனை செய்தால் அதற்கு கேபிடல் கெயின் வரியூம் கிடையாது.
தனியார் வங்கிப் பங்குகளில் ஸ்மார்ட்டாக இருப்பவை ஐசிஐசிஐ ஆக்சிஸ் எச்டிஎஃப்சி கேவிபி ஆகியவைதான்.
ஒரு சிறு தகவலுக்காக ஆக்சிஸ் வங்கியை எடுத்துக் கொள்வோம்.
01.04.2013 அன்று இதன் விலை: ரூ 1314
24.03.2014 அன்று இதன் விலை: ரூ 1409
இப்போது பாருங்கள்.2013ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியன்று இந்த பங்கில் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு கிடைத்திருக்கக் கூடிய லாபம் எவ்வளவூ தெரியூமா?
வெறும் 7.22 சதவீதம்தான்.அதாவது ஒரு லட்ச ரூபாயை இந்த ஆக்சிஸ் வங்கி பங்கில் முதலீடு செய்திருந்தால் ஒரு வருடம் கழித்து வெறும் ரூ 7220 மட்டும்தான் கிடைத்திருக்கக் கூடும்.
பின் எதற்காக தனியார் வங்கிப் பங்கில் பணத்தைப் போட வேண்டும்.பேசாமல் தனியாரோ அரசாங்கமோ பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு விட்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்கலாமே என்றுதானே நினைக்கிறீர்கள்.
எதற்கும் 'சரியான சமயம்' என்று ஒன்று இருக்கிறது.பங்குச்சந்தை சரிந்திருக்கும் நேரத்திலோ குறிப்பிட்ட தனியார் வங்கிப் பங்கு விலை மலிந்திருக்கும் நேரத்திலோ அதே ஒரு லட்ச ரூபாயை கொண்டு போய் முதலீடு செய்தால் என்ன ஆகியிருந்திருக்கும் என்று பாருங்கள்.
சென்ற ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி இந்த பங்கு ரூ 801க்கு(முடிவடைந்த விலையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டேன்.அன்றைய டே லோவை எடுத்துக்கொள்ளவில்லை) கிடைத்திருக்கிறது.அந்த விலையில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்றைய தேதியில் ரூ 1409க்கு விற்றிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய லாபம் எவ்வளவூ தெரியூமா?தெரிந்தால் மலைத்துப் போய் விடுவீர்கள்.
75.9 சதவீத லாபம்.அதாவது முதலீடு செய்துள்ள ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைத்திருக்கக் கூடிய லாபம் ரூ 75900. அதாவது ஒரு லட்ச ரூபாய் 175900 ஆக வளர்ந்திருக்கிறது.
ஆக வங்கி டெபாசிட்டில் போட வேண்டுமென்றால் அரசாங்க வங்கிகள் வேண்டாம்.தனியார் வங்கியில் போடலாம்.அதை விடவூம் கொள்ளை லாபம் வேண்டுமென்றால் தனியார் வங்கிப் பங்கில் சரியான சமயமாகப் பார்த்து போட்டு சரியான சமயத்தில் வெளியே எடுக்கலாம்.இதற்காக டிரேடிங் எல்லாம் செய்யத் தேவையில்லை.ஒரு முறை வாங்குவீர்கள்.ஒரு முறை விற்பீர்கள்.வருடத்திற்கு இரண்டே இரண்டு டிரேடுதான்.ஆனால் லாபம் 75சதவீதம் வரை கிடைக்கிறது.
இது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கான தீர்வூ.
இது போன்ற சுலபமாக பணத்தைப் பெருக்கும் விஷயத்தைதான் நமது தபால்வழிப் பங்குச்சந்தை பயிற்சியில் கற்றுத் தருகிறேன்.விருப்பமானவர்கள் பயிற்சியில் சேரலாம்.பயிற்சியில் சேர்ந்துள்ளவர்களுக்கு கூடுதல் பாடங்களும் அவ்வப்போது அப்டேட்டுகளும் கொடுப்பதால் அவர்களை லாபத்திலேயே வைத்திருக்க முடிகிறது.நீங்களும் பயிற்சி பற்றிய விபரமறிய மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.மற்றபடி நமது மெயின்வெப்சைட்டில்(Click here to go to main website) நாளைக்கு என்ன சூப்பர் பங்குகள் இருக்கின்றன என்பதை இப்போதே குறிப்பிட்டு அப்டேட் செய்து விட்டேன்.அங்கே போய் பார்த்து நாளைய டிரேடிங்கில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'Top three trading scrips' for tomorrow
2 comments
Click here for commentsthak you sir
Replythak you sir
ReplyConversionConversion EmoticonEmoticon