ஆஃப்ஷன் என்கிற ஒரு நிதிக்கருவியின் பயன்பாடு பெரிய முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்ஃபோலியோவை ஹெட்ஜிங் செய்து பாதுகாத்துக் கொள்பவர்களுக்காகவே தேசியப் பங்குச்சந்தையால் கொண்டு வரப்பட்டது.ஆனால் இதற்கான பிரிமியம் மிக மிகக் குறைவாக இருப்பதால் சிறிய முதலீட்டாளர்கள் என்கிற அப்பாவிப் பொதுஜனம் இந்த ஆஃப்ஷன் டிரேடிங்கில் பலாப்பழத்தில் மொய்க்கிற ஈக்கள் போல வந்து விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.இப்படி சீப்பாக் கிடைக்கிறது.உடனடி லாபம்.ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம் என்பது போன்ற பகல்கனவில் வந்து விழும் முதலீட்டாளர்களை சும்மா விடலாமா? வறுத்தெடுக்க வேண்டாமா?அதைத்தான் ஸ்டாக் புரோக்கர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆஃபர்கள் குறைந்த புரோக்கரேஜ் என்றெல்லாம் கொடுத்து டிரேடிங் செய்ய வைக்கிறார்கள்.ஆனால் இதில் டர்ன்ஓவர் வரி என்றெல்லாம் புரோக்கர்கள் காசு பார்த்து விடுகிறார்கள்.ஆஃப்ஷன் டிரேடிங்கில் வாங்கி விற்பதை விட விற்று விடுவது அல்லது விற்று வாங்குவது (அதாவது ஷார்ட் செல்லிங்) சிறப்பானது என்று வந்து விழுகிறார்கள்.
ஆஃப்ஷனில் ஷார்ட் அடிப்பதை ஆஃப்ஷன் ரைட்டிங் என்று அழைப்பார்கள்.ஆஃப்ஷன் ரைட்டிங் செய்வதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு டெரிவேட்டிவ்விற்கான பிரிமியத்தை மார்ஜினாகக் கொடுக்க வேண்டும்.
அதாவது நிஃப்டியில் 8600 கால் ஆஃப்ஷனை ரூ 80.00க்கு ஒரு லாட் வாங்க வேண்டுமென்றால் இதன் லாட் அளவான 25ஆல் பெருக்கி வரும் தொகையைத்தான் பிரிமியமாகக் கொடுக்க வேண்டும்.அதாவது இதற்கான முதலீடு வெறும் ரு 2000தான் ஆகும்.இதையே ஷார்ட் அடிக்க வேண்டுமென்றால் அதாவது ரைட்டிங் செய்ய வேண்டுமென்றால் ஒரு லாட் நிஃப்டி ப்யூச்சரில் டிரேடிங் செய்வதற்கான மார்ஜின் தொகையை கொடுக்க வேண்டும்.ஒரு லாட் நிஃப்டி ப்யூச்சர் செய்வதற்கான மார்ஜின் தொகை சுமார் ரூ 15000 ஆகலாம்.ஆனால் சில மழைக்காளான் புரோக்கர்கள் ஒரு லாட்டிற்கு இன்ட்ரா டே செய்ய இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட போதும் என்று மார்க்கெட்டில் இருக்கிறார்கள்.இவர்கள் புதிதாக வந்தவர்கள்.எப்போது கடையை மூடி விட்டுப் போவார்கள் என்று தெரியாது.இருபது வருடங்களுக்கு முன்பு வந்த அசத்தலான நிதி நிறுவனங்கள் போல இதுவூம் விழுந்து விடுமா என்பதை காலம்தான் அடையாளம் காட்ட வேண்டும்.
சரி ஒரு பேச்சுக்கு ஒரு லாட்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் ஆஃப்ஷன் பேராசைக்கார்கள் 100 லாட் ரைட்டிங் செய்யலாம்.200 லாட் ரைட்டிங் செய்யலாம்.காசு கொட்டும் என்று அங்கும் இங்கும் திரிகிறார்கள்.
இரண்டாயிரம் என்று வைத்துக் கொண்டால் கூட 100 லாட் ஆஃப்ஷன் ரைட்டிவ் செய்வதற்கு இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படும்.
ரூ 80.00 என்ற விலைக்கு ஒரு கால் ஆஃப்ஷனை 100 லாட் ஷார்ட் அடிக்க இரண்டு லட்ச ரூபாயை பணயம் வைக்க வேண்டும்.கால் ஆஃப்ஷனை மட்டும் ஷார்ட் அடிக்கக் கூடாது.துணைப் பிணமாக ச்சே..பிணையமாக இன்னொரு 100 புட் ஆஃப்ஷனையூம் ரைட்டிவ் செய்ய வேண்டுமென்பார்கள்.ஆக இன்னொரு இரண்டு லட்சம்.
ஆக மொத்தம் ஒரு இன்ட்ரா டே செய்வதற்கு நான்கு லட்ச ரூபாயை பணயம் வைக்க வேண்டியிருக்கும்.
இப்படி பணயம் வைத்தால் என்ன கிடைக்கும்.
மார்க்கெட் ஏறினால் விற்று வைத்த கால் விலை ஏறும்.அது விற்றவருக்கு அதாவது உங்களுக்கு நஷ்டம்.
அதே நேரத்தில் விற்று வைத்த புட் விலை இறங்கும்.அது விற்றவருக்கு அதாவது உங்களுக்கு லாபம்.
ஒரு கணக்கு பார்க்கலாம்.
100 லாட்கள்:
ரூ 80.00க்கு வாங்கிய கால் ஆஃப்ஷன் (சந்தை ஏறுவதால்) அன்றைய சந்தை முடியூம்போது ரூ 160க்கு வந்து விடுகிறது.இது நஷ்டத்தை ஏற்படுத்திய விஷயம்.
அதே நேரத்தில் ரூ 80.00க்கு ஒரு புட் ஆஃப்ஷனை(உதாரணம் என்பதால் ஸ்ட்ரைக் பிரைஸ் குறிப்பிடவில்லை) விற்றதில் அதன் விலை அன்றைய சந்தை முடிவதற்குள் ரூ 40;.00க்கு வந்து விடுகிறது.
இப்போது போட்ட கணக்கின்படி 80 160 ஆனதில் நஷ்டம்:இதன் மதிப்பு:
(160.00 - 80.00) அதாவது 80ஐ லாட் அளவூ 25ஆல் பெருக்கி வரும் தொகையை 100 ஆல் பெருக் வேண்டும்.அதன் மதிப்பு: இரண்டு லட்ச ரூபாய் நஷ்டமாக வருகிறது.
80.00ல் விற்ற புட் ஆஃப்ஷனை அப்படியே விட்டு விடலாம்.அது ஒரு நேக்கட் ஆஃப்ஷன் ரைட்டிங்காக இருக்கட்டும் என்று நினைத்தால் மறுநாள் நிலவரம் தலைகீழானால் பணம் சின்னாபின்னமாகி விடும்.சரி இன்றைக்கே ஸ்கொயர்ஆஃப் செய்து விடலாம் என்றால் லாப வித்தியாசம் ரூ 40.00ஐ மறுபடியூம் அதே போல லாட் அளவால் பெருக்கி வரும் தொகையை 100ஆல் பெருக்கினால் ஒரு லட்ச ரூபாய் லாபமாக வரும்.
நீங்கள் போட்ட முதலீடு:நான்கு லட்ச ரூபாய்.
அதில் நஷ்டம் இரண்டு லட்ச ரூபாய்.லாபம் ஒரு லட்ச ரூபாய்.
ஆக மீதி இருக்கும் தொகை:மூன்று லட்ச ரூபாய்.
நிகர நஷ்டம் ஒரு லட்ச ரூபாய்.
இதுதான் ஆஃப்ஷன் ரைட்டிங்கில் பெரும்பாலும் நடக்கிறது.
ஆஃப்ஷன் ரைட்டிங் நல்லதுதான்.அதனை சொந்தப்பணத்தில் சிறிய அளவில் செய்ய வேண்டும்.திடுதிப்பென்று 100 லாட் 200 லாட் என்றெல்லாம் பேராசை கொண்டு ரைட்டிங் செய்ய ஆரம்பித்தால் உங்களது பணத்தை மற்றவர்கள்தான் தின்ன ஆரம்பித்திருப்பார்கள்.எனவே யோசித்துச் செய்யூங்கள்.
இதற்கு பதிலாக என்ன செய்திருக்கலாம் என்று யோசியூங்கள்.அடுத்த பதிவில் ஆஃப்ஷன் ரைட்டிவ் செய்யாமலே எப்படி ஜாக்பாட் லாபத்தை நிஃப்டி ஆஃப்ஷனில் செய்யலாம் என்று எழுதுகிறேன்.
ConversionConversion EmoticonEmoticon